Advertisment

'உயி@ரப் பறித்த பிசாசு நண்டு'-பிரபல யூ-டியூபருக்கு நேர்ந்த சோகம்

328

'Devil crab that took life' - A tragedy for a famous YouTuber Photograph: (food vlog)

சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நச்சுத்தன்மை கொண்ட 'பிசாசு நண்டு' சாப்பிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல பெண் food vlogger உயிரிழந்த சம்பவம் பேசு பொருளாகி வருகிறது.  

Advertisment

இது சோஷியல் மீடியா காலம் என்பதால் பலரும் புட் ரிவியூ, விலாக், ரீல்ஸ் என பிடித்த கண்டெண்ட்களை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதில் சிலர் எல்லை மீறி ஆபத்தான ஸ்டண்டுகள், பொய்யான தகவல்களை பரப்புவது என ஆர்வக்கோளாறில் எதையாவது செய்து சிக்கியும் வருகிறார்கள். இதில் ஆன்லைன் மோசடிகளும், உயிருக்கே உலை வைக்கும் சம்பவங்களும் அடங்கும். அப்படி ஒரு நிகழ்வுதான் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துள்ளது.

Advertisment

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல பெண் food vlogger ஆன எம்மா அமித் (51) என்பவர் 'பிசாசு நண்டு' என்ற ஒரு வகை நண்டை சாப்பிட்டதால் இறந்தார். பிப்ரவரி 4 ஆம் தேதி எம்மா அமித் மற்றும் அவரது நண்பர்கள் புட் விலாக் எடுப்பதற்காக புவேர்ட்டோ பிரின்செசா என்ற பகுதியில் உள்ள ஒரு சதுப்புநிலக் காட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மட்டி வகை மீன்களை அறுவடை செய்தனர். பின்னர்எம்மா, தேங்காய்ப் பாலில் மீன்களை சமைத்து அதனை வீடியோவாக பதிவு செய்து  டிக் டாக் மற்றும் பேஸ்புக்கில் உள்ள தனது பின்தொடர்பவர்களு சாப்பிட்டு காட்டியுள்ளார்.

329
'Devil crab that took life' - A tragedy for a famous YouTuber Photograph: (food)

சாப்பிட்ட மறுநாளே நச்சுத்தன்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டு எம்மா நோய் வாய்ப்பட்டார். வலிப்பு ஏற்பட்டதாகவும், சுயநினைவை இழந்ததால் எம்மாவின் உதடுகள் அடர் நீல நிறமாக மாறியதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இறுதியாக நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் எம்மா பிப்ரவரி 6 ஆம் தேதி இறந்துவிட்டார். எம்மாவின் உயிரிழப்பு அவரது ஃபாலோயர்கள் மத்தியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையின்போது, உள்ளூர் அதிகாரிகள் எம்மா சமையல் செய்த இடத்தில் இருந்த குப்பையில் மட்டி மீனோடு பிசாசு நண்டுகளின் தனித்துவமான, பிரகாசமான வண்ண ஓடுகள் இருந்தது தெரிந்தது. பிசாசு நண்டு என்பது நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும்.

கிராமத்தின் தலைவரான லேடி ஜெமாங் என்பவர் எம்மாவின் மரணம் குறித்து வருத்தத்தையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.

"இது உண்மையிலேயே இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது, சந்தேகத்தையும் கொடுக்கிறது. ஏனென்றால் கடலோரத்தில் வாழும் மக்களில் ஒருவரான எம்மா இதை அறிந்திருக்க வேண்டும். அந்த பிசாசு நண்டைப் பற்றி எம்மாவிற்கு தெரியும் என்று எனக்குத் தெரியும். அப்படியானால் எம்மா ஏன் அதைச் சாப்பிட்டாள்? வேண்டும் என்றே சாப்பிட்டாரா? அதைப் பற்றித்தான் எனக்கு குழப்பமாக இருக்கிறது.

இனியாவது புவேர்ட்டோ பிரின்செசாவில் வசிப்பவர்கள் கண்டிப்பாக விழிப்புடன் இருக்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். இந்த ஆபத்தான பிசாசு நண்டுகளை சாப்பிடாதீர்கள். ஏனென்றால் நம் ஊரில் இதுவரை இரண்டு உயிர்களைக் கொன்று விட்டது. நீங்களே உங்கள் உயிருடன் சூதாடாதீர்கள்" என்று ஜெமாங் எச்சரித்தார். 

நச்சுத்தன்மை வாய்ந்த ரீஃப் நண்டுகள் என்றும் அழைக்கப்படும் டெவில் நண்டுகள் அதாவது இந்த பிசாசு நண்டுகள் இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் பவளப்பாறைகளில் வாழும் ஒரு வகை நண்டு ஆகும். அவற்றில்சாக்ஸிடாக்சின் மற்றும் டெட்ரோடோடாக்சின் போன்ற ஆபத்தான நியூரோடாக்சின்கள் உள்ளன. நிபுணர்கள் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க எச்சரிக்கின்றனர். மேலும் இது சிறிது நேரத்திலேயே பக்கவாதத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும் என்ற எச்சரிக்கையும்  வெளியாகியுள்ளது.

Treatment Food saftey Women phillipines youtuber
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe