dmk Photograph: (admk)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
சிறுபான்மை மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று சொல்லக்கூடிய விஜய், மகாராஷ்டிராவில் பாஜக செஞ்சது மிகப்பெரிய மோசடி. சிறுபான்மை மக்களுக்கு செய்த அநீதி. தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது போன்று நான் செய்ய விட மாட்டேன் என்று ஏதாவது சொல்லலாமே. விஜய் முகத்தை காமிச்சா ஓட்டு போட்டுருவாங்களா? விஜய் என்று பெயரை பார்த்தால் ஓட்டு போட்டுருவாங்களா? வாக்கு என்ன சினிமா டிக்கட்டா? சினிமா டிக்கெட் மாதிரி வாங்கி போட்டுருவாங்க என்று நினைக்கிறீங்களா? இதனாலதான் திருப்பி திருப்பி சொல்கிறோம். விஜய் தனியாக நின்று கம்பு சுத்தி கொண்டிருக்கிறார். தனியாக நின்று கத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கே எந்த எதிரியும் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் தான் சண்டைக்கு திமுகவை கூப்பிட்டுட்டு இருக்கிறார். விஜய்யை பொறுத்தவரை திமுக வலிமையான எதிரி என்று அவருக்கே தெரிகிறது.
அதனால் தான் அவர்களோடு சண்டை போட முயற்சி பண்ணுவோம் என்று விஜய் பேசுகிறார். ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரை 'நீ சின்ன பையன். நீ அங்கே போய் தெரு ஓரத்தில் விளையாண்டுக்கோ. நீ எனக்கு எதிரியே இல்லை. தேர்தல் வரைக்கும் உன் பேச்சு இருக்கும். தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சியை பிடித்த பிறகு உன் கட்சியே இருக்காது. நீ திரும்ப நடிக்க போயிடுவ. உங்கிட்ட எதுக்கு நான் சண்டை போடணும்' என்கிற மனப்பான்மையில் உள்ளார்.அந்த புரிதலை சிறப்பான முறையில் மக்களுக்கு ஸ்டாலின் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.அதான் முக்கியம்.
ஸ்டாலின் மக்களுக்கு என்ன சொல்கிறார் என்றால் 'விஜய் எங்களுக்கு போட்டி இல்லை. நாங்க எதுக்கு விஜய் பற்றி பேசவேண்டும். எங்களுக்கு போட்டி வந்து அதிமுககூட கிடையாது எங்களுக்கு போட்டி டெல்லிதான். டெல்லியை தான் நாம் வீழ்த்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்பதை தெள்ளத் தெளிவாக அரசியல் புரிதலோடு நிதர்சனமான உண்மையை இன்னைக்கு மக்கள் மன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியமானது. இதை புரிந்துகொள்ள வேண்டும் மக்கள். விஜய்க்கோ எங்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லை, சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு பிரச்சனை எல்லாம் டெல்லி தான். தமிழ்நாட்டுக்கே எதிரியாக இருப்பது டெல்லி தான். தமிழ்நாடுக்கு இருக்கிற எந்த நிதியையும் கொடுக்கவில்லை. தமிழ்நாடு வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடுவது டெல்லிதான். எனவே டெல்லியைதான் நாம் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்கிற அந்த புரிதலை இன்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தெள்ளத்தெளிவாக மக்கள் மன்றத்தில், தேர்தல் களத்தில் வைத்திருக்கிறார். என்றுதான் நான் பார்க்கிறேன்.
Follow Us