Advertisment

“நெருக்கடிகளில் இருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சிதான்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சு!

mks-assembly3

தமிழக அரசு சார்பில் மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி  குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலருமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழக  மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத்தலைவர் மு. நாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த 16ஆம் தேதி (16.02.2026) இந்த குழு தனது அறிக்கையினை சமர்ப்பித்தது

Advertisment

இந்நிலையில் இந்த அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டபேரவையில் சமர்பித்து பேசுகையில், “ஒன்றிய நிதிக் குழு பரிந்துரை அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது தொடர்ந்து செம்மையான முன்னெடுப்பு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் முன்னறி உள்ள மாநிலங்களில் பங்களிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாக பகிரப்படுகிறது. இதனையடுத்துதான் இத்தகைய இக்கட்டான சூழலில் கூட்டாட்சி கருத்துகளை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றைய மாநில அரசி உறவுகளை கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்திடவும் உயர்மட்ட அளவிலான குழு ஒன்றில் அமைப்பது என தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. 

Advertisment

அதன்படி உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப்பை தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தருமான அசோக்வர்தன் ஷெட்டியையும், தமிழ்நாடு மாநில திட்டக்குழு மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு நாகநாதன் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை கடந்த 16ஆம் நாள் என்னிடம் வழங்கியது. பேரவை தலைவர்கள் மூலமாக பேரவை உறுப்பினர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் நான் சொல்லிக்கொள்வது மாநில சுயாட்சி வேண்டும். ஒன்றியத்தில் கூட்டாட்சி மலர வேண்டும். இது இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல. இந்திய நாட்டு மக்களின் வாழ்வியலுக்கும், வளர்ச்சிக்கும் முக்கியமான கோரிக்கை. 

tn-govt-union-state-comitte-ropert

கூட்டாட்சி என்பது வாழ்வியல் உணர்வு. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சிதான் அடிப்படை. இதைத்தான் அந்த அறிக்கையும் நிறுவுகிறது. எனவே இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும். 1994இல் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட்டாட்சி என்பது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டாட்சி கோட்பாட்டை அரசமைப்பு சட்டத்தின் பண்பாடாக சேர்க்க வேண்டும். அதற்கு அரசமைப்பு சட்ட திருத்தமும் சீர்திருத்தமும் தேவை. கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசமைப்பு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனவே நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசியமைப்பு சட்டத்தை திருத்த முடியும். 

இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகள் முயற்சிகளை நாம் தொடங்கியாக வேண்டும். அதிகாரமும் வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக்கூடாது. அவை பரவலாக்கப்பட வேண்டும். அதற்கான சட்டபூர்வமான வழிகளை இந்த அறிக்கை நமக்கு வழங்கி இருக்கிறது. கூட்டாட்சி தன்மை கொண்டதாக இந்திய அரசு சட்டத்தை மாற்றுவது இந்திய ஒன்றியத்தை பலவீனப்படுத்தாது என்று இந்த அறிக்கை கூறுகிறது. அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய பாஜக அரசு கபளிகரம் செய்யும் சூழலில் ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகள் செயல்படாமல் தடுக்கும் நிலையில் இந்தி திணிப்பின் மூலமாக, நிதி நெருக்கடிகளின் மூலமாக, தொகுதி மறுவரை என்ற சதியால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாடு அனுபவித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சிதான். 

mks-modi
கோப்புப்ப்படம்

அதனை அதனை அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக மட்டுமே அடைய முடியும். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களையிலும் இந்த கொள்கைக்கான வலிமையான ஆதரவு தெரிவிக்கும் ஜனநாயக சக்திகள் அதிகமாக இருக்கிறார்கள். எண்ணிக்கையாலும் எண்ணங்களாலும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். எனவே இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசும் மாநிலங்களும் போட்டியாளர்கள் அல்ல. இருவரும் பொதுவான ஒரு அமைப்பின் பங்குதாரர்கள். மாநிலங்கள் வளர்ந்தால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர முடியும் என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவோம். இப்படிப்பட்ட பின்னணியில் தான் நமது குடியரசின் அரசமைப்பு சட்டத்தின் உயிர்ப்பை தீர்மானிக்கும்

முக்கியமான தருணத்தில் நாம் நிற்கிறோம். நாம் இதுவரை பயணித்த பாதையை மீள் ஆய்வு செய்து உண்மையான கூட்டாட்சி கருத்தில் வலுப்படுத்தும் வகையில் நமது எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய நேரம் இது. இதற்கு சட்டப்பூர்வ வழிமுறையில் ஆராய்ந்து முதற்கட்ட அறிக்கையை வழங்கிய உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர்  குரியன் ஜோசப், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் வருதன் ஷெட்டி, பேராசிரியர் மு நாகநாதன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த அறிக்கையை தற்போது இந்த மாமன்றத்தின் மேலான பார்வைக்கு வைக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாடு பன்முகத்தன்மை மக்களாட்சி பொறுப்புணர்வு அரசமைப்பு சட்ட ஒழுங்கு முறை ஆகியவற்றோடு முதிர்ச்சி பெற்ற கூட்டாட்சி நாடுகளின் சிறந்த நடைமுறைகளையும் உள்ளடக்கி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையை அனைவரும் திறந்த மனதோடு ஏற்று அறிவார்ந்த விவாதங்களை நடத்தி செழுமைப்படுத்த வேண்டும். 

mks-assembly2

ஒன்றிய மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுக்க வேண்டும். மாநிலங்கள் வலுவாக இருந்தால் தான் ஒன்றிய அரசு வலுவாக இருக்கும். மாநிலங்களால் தான் நாட்டு வளர்ச்சியும் பெருமையும் வளர்ச்சியும் அடையும். கூட்டாட்சி கருத்தில் என்பது மாநிலங்களுக்கான சலுகை அல்ல. நாட்டிற்கான பாதுகாப்பு அரண். இதையெல்லாம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தி கொண்டே இருக்க வேண்டும். கொட்ட கொட்ட குணியக்கூடியவர் அல்ல நாம். பேரறிஞர் பிறந்தை அண்ணாவின் உயிலுக்கு உயிர் கொடுப்போம். கலைஞரின் ஐம்பெரும் முழக்கத்தை நிறைவேற்றி காட்டுவோம் நாம்தான் இதை செய்ய வேண்டும். நம்மை விட்டால் இதை செய்ய யாருமில்லை. இது வரலாறு வழங்கி இருக்கக்கூடிய வாய்ப்பு மலர்க மாநில சுயாட்சி. உருவாகட்டும் இந்திய குடியாட்சி” எனத் தெரிவித்தார். 

mk stalin tn assembly tn govt union govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe