தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/11/313-2026-02-11-17-52-09.jpg)
திமுகவை எதிர்த்தாலே பாஜகவின் பி டீம் அப்படிங்கிற விமர்சனம் வருகிறது. அதேநேரத்தில் இன்னொரு பக்கம் பாஜக கரூர், ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு பிரஷரும் கொடுக்கிறது. எப்படி புரிந்து கொள்வது?
பாஜக தவெகவிற்கு பிரஷர் கொடுக்கிறது என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். விஜய் சொல்லவில்லையே. திமுகவை இவ்வளவு தொடர்ந்து கடுமையாக விஜய் பேசுகிறார். விஜய்யை பார்க்க சென்றதில் தான் 41 பேர் நசுங்கி இறந்தார்கள். அன்றைக்கு தவெகவிற்கு முட்டு கொடுத்த அதிமுகவும் இன்னைக்கு உன்னால்தான் (விஜய்யால்) 41 பேர் இறந்தார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களா இல்லையா? உலகத்துக்கே தெரியும் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்த குழந்தைகள், பெண்கள் என 41 பேர் நசுங்கி இறந்தார்கள். இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்து தீவிரமாக முதல்வர் செயல்பட்டார்.
முதலமைச்சர் போனார், துணை முதலமைச்சர் போனார். அந்த பகுதியில் இருந்த செந்தில் பாலாஜி போனார். அன்பில் மகேஷ் போனார். திமுகவில் இருந்து எல்லோரும் போனபோது தவெகவும், நீதான் காரணம் என இப்போது குற்றச்சாட்டு சொல்லும் இந்த அதிமுக கும்பலும் கரூர் சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என சொன்னார்கள். அதிமுக எவ்வளவு பொய் சொன்னார்கள் என்பதற்கு இப்போது சாட்சி வருது பாருங்க. கரூரில் சதி நடந்திருக்கிறது என என்னென்னவோ புரளியை எல்லாம் கிளப்பினார்கள். ஆனால் பதிலுக்கு முதலமைச்சரோ, உதயநிதி ஸ்டாலினோ எங்களை சொல்லிவிட்டார்கள் என்பதற்காக விஜய்தான் காரணம் என்று கூட சொல்லவில்லை. எவ்வளவு பெருந்தன்மையாவும் 41 பேர் இறந்ததை பாலிடிக்ஸ் பண்ண திமுக விரும்பவில்லை.
விஜய், திமுக மீது பழி சொல்லிட்டார் என்றாலும் பொறுப்பில் உள்ள முதலமைச்சரோ, உதயநிதியோ எவ்வளவு கண்ணியமா நடந்து கொண்டார்கள். பாஜகவின் பிடீம் என விஜய்தான் இருக்கிறார். இவ்வளவு கேட்டதற்கு பிற்பாடு கூட பாஜக பற்றி தவெக பேச மாட்டேன் என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/11/318-2026-02-11-18-36-09.jpg)