Advertisment

'அதிமுகவிற்கு இனி எல்லாமே டெல்லிதான்'-உடைக்கும் புதுமடம் ஹலீம்

397

admk Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

021
haleem Photograph: (politics)

திமுக வெர்சஸ் என்டிஏ கூட்டணி. திமுக வெர்சஸ் டெல்லி என்று போகிறது. முதல்வர் ஏன் திருப்பி திருப்பி திமுக வெர்சஸ் டெல்லி தான். நமக்கும் டெல்லிக்கும் தான் போட்டி என்று எதற்கு சொல்கிறார் என்றால் இது இனி அப்படித்தான் போகும்.'திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால் அது டெல்லி ஆட்சியாகத்தான் இருக்கும் என்று முதல்வர் சொல்கிறாரே' என்று திண்டுக்கல் சீனிவாசனிடம் பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள்.அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் 'இருந்துட்டு போகட்டுமே' என்கிறார். ரயில் கேட்கிறோம் டெல்லி தான் கொடுக்க வேண்டும் என்கிறார்.  மாநகர பேருந்து எல்லாம் டெல்லி கொடுத்துருமோ இனி எல்லாமே டெல்லிதான். தமிழ்நாட்டு கல்வி டெல்லிதான், தமிழ்நாடு மின்சாரம் டெல்லி தான். தமிழ்நாட்டுக்கான அத்தனை இட ஒதுக்கீடும் டெல்லி தான். எல்லா இட ஒதுக்கீடு ரத்து டெல்லி பார்த்துக்கொள்ளும்.

பொதுவாக திண்டுக்கல் சீனிவாசன் அப்பப்ப உண்மைய பேசுவார். அதில் ஒண்ணுதான் இது. நாங்க சரண்டர் ஆயிட்டோம் என்பது வெளிப்பாடு அது. பாஜகவுடன் தான் தொகுதிப்பங்கீடு என தினகரன் சொல்வதற்கும் திண்டுக்கல் சீனிவாசன் சொல்வதற்கும்  என்ன வேறுபாடு இருக்கு? எடப்பாடியை  சும்மா  ஒரு ஆளாக வச்சிருக்காங்க. எடப்பாடிக்கே இது தெரியும். இன்னைக்கு எடப்பாடி எந்த முடிவும் எடுக்க முடியாது.முடிவுகளை எடுப்பது  எல்லாம் டெல்லிதான்.  கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த போறது டெல்லியை வச்சுதான். அதிமுகவுக்கு எத்தனை சீட்டு என்பதை முடிவு பண்ண போவதும் டெல்லி தான். அதிமுக எத்தனை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்வது அமித்ஷா. எடப்பாடி இல்ல

நியாயப்படி பார்த்தால் என்ன நடக்கும் 'நாங்க உங்களுக்கு இத்தனை சீட்டு தான் கொடுப்போம்' என்று சொல்லி அதிமுக முடிவு பண்ணிட்டு கொடுப்பார்கள். ஆனால் இப்போது அதிமுகவுக்கு எத்தனை சீட்டு என்பதையே பாஜக தான் முடிவு பண்றாங்க. சிறுபான்மை வாக்குகள் முழுமையாக திமுக கூட்டணிக்கு போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் இருக்கிற சிறுபான்மை வாக்குகள் திமுக கூட்டணி தான் போகும். அதுக்கு என்ன காரணம் அதிமுககூட்டணியில் பாஜக இருக்கிறது என்ற கண்ணோட்டம்  பார்க்கப்படுகிறது. இப்போது விஜய்யை கொண்டு வந்தது சிறுபான்மை வாக்குகள் உடைக்கத்தான் அப்படிங்கிற ஒரு பேச்சு இருக்கிறது.  வந்து சிறுபான்மை வாக்குகள் உடைய வேண்டும். அது நாம் தமிழருக்கும் தவெகவிற்கும் உடைஞ்சு போனால் மட்டும் தான் சரி. அப்போதுதான் நம் வெற்றி சாத்தியம் என்று என்டிஏ கூட்டணி நினைக்கிறார்கள்.

edappaadi palanisamy modi nda alliance admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe