தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/021-2026-02-17-15-03-50.jpg)
பீகார் தேர்தல் போன்ற சூழலே தமிழ்நாட்டில் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படி பார்க்கிறீர்கள்?
பீகாரில் 2025-ல் சட்டப்பேரவை தேர்தலில் என்ன மாதிரியான செய்திகள் வந்தது தேஜஸ்வி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு வந்துச்சு. ஏனென்றால் கடந்த 20 வருடமாக நிதீஷ்குமாருடைய ஆட்சி மோசமாக இருக்கு எனச்சொல்லி மக்களே காரிதுப்பிய நேரம். ராகுல் காந்தியுடைய யாத்திரையை தேஜஸ்வி தான் முன்னிருந்து நடத்தினார். 20 வருஷங்களில் பீகாரே கெட்டுப்போச்சு எதுலயுமே முன்னேறவில்லை என மக்கள் உணர்ந்தார்கள். ஏற்கனவே இந்த எஸ்ஐஆர் மூலமாக பிரச்சனை இருந்தும் மக்களுடைய எழுச்சி ஏற்பட்டது. ஆனால் ஏன் கடைசி நேரத்தில் அங்கே சொதப்பல் நடக்க காரணம் சீட் எண்ணிக்கை கடைசி வரைக்கும் உங்க கூட தேஜஸ்வி இருந்தாரே. ஆனால் நீங்க தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிச்சீங்களா?
கடந்த முறை 2020-ல் இதே கூட்டணி தான் பீகாரில் இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 125 இடங்களில் இரண்டும் சேர்ந்து வெற்றி பெற்றார்கள். 75 இடங்களில் தேஜஸ்வி வெற்றி பெற்றார். ஆட்சியை தான் பிடிக்க முடியவில்லை. சிங்கிள் லார்ஜெஸ்ட் பார்ட்டியாக தேஜஸ்வியுடைய ஆர்ஜேடி தான் இருந்தாங்க. ஆனால் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையில் 2025-ல் தேர்தலில் காங்கிரசும் தேஜஸ்வியும் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற கருத்து கணிப்புகளும் இருந்தது. ஆனால் 2025 தேர்தலில் பெரிய எண்ணிக்கையில் காங்கிரஸ் ஜெயிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் எங்களுக்கு 75 இடம் கொடுங்கள் என்று கேட்டார்கள். அதுவே ஒரு பெரிய இழுபறியாக இருந்தது. 61 இடம் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் தேஜஸ்வி வேட்பாளர்களை நிறுத்திய இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தியிருந்தார்கள். அங்கே தேஜஸ்வியை முதல்வராக அறிவிக்கவில்லை. எவ்வளவு பெரிய ஒரு பிரச்சனை. ஒரு கூட்டணியே ஜெல் ஆகாமல் இருந்தது.
ஜெயிக்க வேண்டிய பீகார் தேர்தலில் கடைசியில் என்ன நிலைமை. காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டது. ஒட்டுமொத்தமாக 2020 தேர்தலில் 125 இடங்களில் வெற்றிபெற்ற அந்த கூட்டணி இந்த முறை 50 இடங்களில் வெற்றி பெறவில்லையே. யார் காரணம்? தேஜஸ்வி காங்கிரஸை நம்பினார். தேஜஸ்வியை காங்கிரஸ் காலி பண்ணிட்டீங்க. இது ஒரு பாஜகவின் சதி என்று கூட அங்குள்ள பத்திரிகைகள் பேசினார்கள். அதே பார்முலாவை தமிழ்நாட்டில் நீங்கள் கொண்டு வர பார்க்கீர்கள். அங்க இருக்கின்ற சில தலைவர்கள் தான் இந்த பிரச்சனையை செய்தார்கள். ராகுல் காந்தி கண்டுகொள்ளவில்லை. அதேமாதிரி தமிழ்நாட்டில் நடக்கிறது. மதுரையில ஏற்கனவே மாணிக்கம் தாகூர் எங்களை மதிக்கவில்லை என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/349-2026-02-17-15-03-33.jpg)