Advertisment

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஏ1 குற்றவாளி மரணம்; யார் அந்த முக்கிய புள்ளி ‘நாகு’?

Untitled-1

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து.. முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். அதில், ரவுடி திரு​வேங்​கடம் போலீ​சா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​ட நிலையில், சம்போ செந்​தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

இந்த வழக்​கில், குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​சார் 5000 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்திரி​கையை எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்தது. இதனிடையே, இந்த வழக்கை போலீ​சார் முறை​யாக விசா​ரிக்​கவில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Advertisment

இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக உள்ள பிரபல தாதா நாகேந்திரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில்.. சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார். இது ஒருபுறம் இருக்க.. யார் இந்த பிரபல தாதா நாகேந்திரன்? 1990 முதல் வடசென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது எப்படி என அலசி பார்த்தபோது அதில் பல்வேறு தகவல்கள் புதைந்திருக்கிறது.

வடசென்னையின் முக்கிய பகுதியான வியாசர்பாடியைச் சேர்ந்தவர் நாகு என்கிற நாகேந்திரன்.  சிறு வயதில் இருந்தே வடசென்னையிலுள்ள பாக்ஸிங் கோச்சிங்கில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது, அவருக்கு விஜி என்ற பாக்ஸருடன் நட்பு ஏற்பட்டது. பாக்ஸர் விஜியும், வடசென்னையில் 1990-களில் கொடிகட்டி பறந்த பிரபல ரௌடி வெள்ளை ரவியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் விஜி மூலம் நாகேந்திரனுக்கு வெள்ளை ரவியின் அறிமுகம் கிடைத்ததால்.. அவரது வாழ்க்கை ரவுடிசத்தை நோக்கி நகர்ந்தது.

நாளடைவில், வெள்ளை ரவியின் முக்கிய தளபதியாக மாறிய நாகேந்திரன், பாக்ஸர் விஜியுடன் சேர்ந்து.. கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்தார். வெள்ளை ரவி, விஜி, நாகேந்திரன் மூவரையும் ‘மும்மூர்த்திகள்’ என்று அழைக்கும் அளவுக்கு.. வடசென்னையில் இவர்களுடைய சாம்ராஜ்ஜயம் வளர்ந்தது. இப்படி இருக்கையில், 1990ம்  ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், முதல் தடவையாக வியாசர்பாடி போலீசார் நாகேந்திரனை சிறையில் தள்ளினர். அதன்பிறகு, 1991ல் தனது முதல் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நாகேந்திரன் மீது அடுத்தடுத்த குற்ற வழக்குகள் பாய்ந்து பிரபல ரவுடியாக மாறினார்.

இது ஒருபுறம் இருக்க.. பிரபல ரவுடிகள் சுப்பையா கும்பலுக்கும்.. வெள்ளை ரவி கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அந்த நேரத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சுப்பையாவை மருத்துவமனை வார்டுக்குள் வைத்தே வெள்ளை ரவி கொலை செய்த சம்பவம் பதைபதைக்க வைத்தது. இந்த சம்பவத்தை வைத்தே பல திரைப்படங்களில் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து, வெள்ளை ரவி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில்.. நாகேந்திரன் தாதாவாக உருவெடுத்தார்.

வடசென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாகேந்தினுக்கு, 1997ல் நடந்த அதிமுக வட்டச் செயலாளர் ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கு, தலைவலியாக மாறியது. இந்த வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் சிறைக்குள் இருந்தபடியே தன்னுடைய கூட்டாளிகள் மூலம் வடசென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நாகேந்திரன். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 40க்கும் வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறி.. நாகேந்திரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவந்த நாகேந்திரனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கல்லிரல் பாதிப்பால் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்தது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நாகேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது, அவருடைய இறுதி சடங்கு நிகழ்வுகளை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

police amstrong
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe