Advertisment

'நீங்கதான் அரசியல் பாடத்தை கற்றுக் கொடுக்க போறீங்களா?'-சுளீர் எனக் கேட்ட புதுமடம் ஹலீம்

396

tvk Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
021
haleem Photograph: (politics)

தவெக அத்தனை தலைவர்களுக்கும் மேடையில போட்டோ வைக்கிறீர்கள். பெரியாரையும் வைக்கிறீங்க காமராஜரையும் வைக்கிறீங்க, அஞ்சலை அம்மாளை வைக்கிறீங்க, முத்துராமலிங்க தேவரையும் வைக்கிறீங்க இன்னும் காயிதே மில்லத்தையும் வச்சிருவீங்க. அத்தனை தலைவர்களை வைக்கிறீங்க. ஆனால் மேடையில் இருக்கும் அத்தனை தலைவர்களும் ஒரே அணியில் இருந்தவங்களா? காமராஜரும் பெரியாரும் ஒன்னாவே இருந்தார்களா? எப்பவுமே முரண்படவில்லையா? காமராஜரும் பெரியாரும் முரண்பட்டது எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. இந்த வரலாறு எல்லாம் தெரியாத விஜய் இன்னைக்கு நான் வந்து ஒரு புதிய அரசியலை கொண்டு வருகிறேன்.  50 வருடங்கள் பார்க்காத ஒரு தேர்தல் களம் என்றெல்லாம் விஜய் சொல்கிறார்.

50 வருடங்களில் தமிழக தேர்தல் களத்தில் இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க மாட்டீங்க கண்டிப்பாக. நேற்று கூட அதே நிலைமைதான்.நீங்க என்ன மாதிரியான தொண்டர்களை வச்சிருக்கீங்க என்று பார்த்தால் தெரிகிறது.  அணில் குஞ்சுகளோடு போறீங்க. திருப்பி மீட்டிங் முடிச்சுட்டு அணில் குஞ்சுகளோடு திருப்பி வரீங்க.

பல்வேறு ஒன்றிய அரசுகளுடைய செய்கின்ற வேலை எல்லாம் நாங்களே செய்வோம். மோடி செய்கின்ற வேலையை நானே செஞ்சிருவேன். விட்டா அடுத்த அறிக்கை வரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சதீவை மீட்டு விடுவோம். வெளியுறவு கொள்கையை நாங்களே தீர்மானிப்போம். நாங்களே நேரடியாக அமெரிக்காவுடைய ஜனாதிபதியாக இருக்கின்ற ட்ரம்போடு உடன்படிக்கை நட செய்வோம். இதெல்லாம் இதெல்லாம் தீர்மானமா? இதெல்லாம் திட்டங்களா?

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று விஜய் சொல்கிறார். என்ன பாதுகாப்பு இல்லை நீங்கள் என்ன பாதுகாப்பு கொடுக்கப் போறீங்க? தமிழ்நாட்டில் என்ன பாதுகாப்பு இல்லை? குறைந்தபட்சம் பிற மாநிலங்களோடு நீங்க தமிழ்நாட்டை ஒப்பிட்டால் இதில் குறைவாக இருக்கும்? அதை சொல்ல வேண்டும். அதை சொல்லாமல் பொத்தம் பொதுவாக நாங்க பெண்கள் பாதுகாப்பு கொடுப்போம், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுப்போம், குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கொடுப்போம், குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு சிறுவயதிலே நாங்கள் அரசியல் பாடத்தை கற்று கொடுப்போம் என்கிறார்கள்.

தமிழ்நாடு மாணவர்களுக்காக நீங்கதான் அரசியல் பாடத்தை கற்று கொடுக்க போறீங்களா? கடந்த கால வரலாற்றை நீங்க படிக்க வேண்டாமா? இதே மாணவர் சமுதாயம் தான் இந்தி எதிர்ப்பில் ஒன்றிய அரசை எதிர்த்து களம்கண்ட மாநிலம் தமிழ்நாடு. இருமொழி கொள்கைக்காக வந்து தன்னுயிரையும் கொடுத்த மாணவர் சமூகம் கொண்டது தமிழ்நாடு. திராவிட அரசியலையும் பகுத்தறிவையும் புகுத்திய மாநிலம் தமிழ்நாடு. இன்னைக்கும் இந்திய அளவில அரசியலில் தமிழக மாணவர்கள் நீங்க ஒப்பிட்டுப்பாருங்க? நீங்க வச்சிருக்க உங்க கூட்டத்தை வச்சு வேணா நீங்க இந்த முடிவுக்கு வந்துருக்கலாம் உங்கள் பேன் பாளோவர்களுக்கு இருக்கிறவர்களுக்கு அரசியல் தெரியாமல் போயிருக்கலாம். சொல்லி கொடுக்கணும். அப்படிதான புரிஞ்சுக்க முடியுது. உங்களுக்கே அரசியல் தெரியவில்லை.

Tamilnadu politics tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe