'Apologize inappropriately' - Vijay gives a dose to Adhav Arjuna Photograph: (tvk)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
அண்மையில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா விசிகவில் திருமா உள்ளிட்ட 20 பேர்தான் உள்ளதாக பேசியது சர்ச்சையானது. 'டங் ஸ்லிப் ஆகி திருமா பற்றி பேசிவிட்டேன்' என்று மறுப்பு தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. ஆனாலும் விசிகவினர் தொடர்ந்து ஆதவ்வை விமர்சிக்க காரணம் என்ன?
அந்த உயரமான ஆதவ் அர்ஜுனா தம்பி திராவிட முன்னேற்ற கழகத்தில் ஆரம்பத்தில் இருந்தார். அங்கு அவர் யார் என்றே யாருக்கும் தெரியாது. ஐபேக் என்ற நிறுவனத்தில் தேர்தல் வேலை பார்த்த ஒரு வேலைக்காரர்தான் ஆதவ் அர்ஜுனா. ஆனால் அவர் எங்களது கட்சிக்கு வந்த பிறகுதான் எங்கள் தலைவர் திருமாவளவன் நேரடியாக அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி தந்தார். அதன் மூலமாக அவர் எல்லா இடத்திலும் பிரபலம் ஆகினார். திராவிட முன்னேற்ற கழகத்தை 'ஐபேக்' தான் வெற்றிபெற வைத்தோம் என்ற மாதிரி சொன்னார்.
அவருக்கு திமுகவில் ஏதோ சின்ன முரண். அது என்ன முரண் என்பது நமக்கு தேவையில்லை. வரும்போது ஒரு ஜனநாயக சக்தியாக ஆதவ் அர்ஜுனா இருந்தாரு. அவர் ஒன்னும் தலித் அல்ல. அப்படிப்பட்ட ஜனநாயகக் சக்தி எல்லாம் வரும்போது நாம் பதவி கொடுப்பது இயற்கை. அதுமாதிரி பல பேருக்கு பதவி கொடுத்திருக்கிறோம். கலைக்கோட்டு உதயம் என்பவருக்கு பொதுச்சாளர் பதவியே கொடுத்துட்டோம். அது மாதிரி ஆதவ் ஆர்ஜூனாவுக்கும் ஒரு பொறுப்பை கொடுக்கும் பொழுது அவர் இங்கே இருந்து எல்லாத்தையும் கற்றுக் கொண்ட பிறகு, பயிற்சி எடுத்த பிறகு நேராக விஜய் கிட்ட போனார். அங்கே போயாவது ஒழுங்காக இருக்க வேண்டும். அங்கே இருந்து உடைத்து கொண்டு அவர் பாஜக பக்கம் போகிறார் என்று செய்திகள் வருகிறது. அதனால் தான் அவர் எங்களை வம்புக்கு இழுக்கிறார்.
மேடையில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பொய்யான தகவல்களை சொல்கிறார். விடுதலை சிறுத்தையில் இருக்கும் 20 பேர் இல்ல ஒவ்வொரு தொண்டனும் தலைவருடைய எண்ணம் என்ன? தலைவருடைய இலக்கு என்ன? தலைவருடைய கொள்கை கோட்பாடு என்ன? அதற்காகத்தான் களமாடுபவர்கள். இந்த ஒரு பையன்தான் கருப்பு ஆடாக போய் தொலைஞ்சுட்டார். நல்ல பையன் என்றுதான் கட்சியில் சேர்த்தோம். விசிகவினர் போன் காலில் விளக்கம் கேட்க முயன்றதால் அடுத்த நாள் பல்டி அடித்துள்ளார். ''இல்லைங்க நான் அப்படி சொல்லவில்லை; என்னுடைய அரசியல் ஆசான், குருவே திருமா தான்'' என்று சொல்லியுள்ளார். அரசியல் ஆசான், என்னுடைய கொள்கை தலைவர் எனச் சொல்லும் யாராவது இப்படி கட்சியை விட்டு வெளியே போவார்களா?
விஜய் நேற்று ஆதவ் அர்ஜுனாவிற்கு கும்மாங்குத்து போட்டுள்ளார் தெரியுமா உங்களுக்கு? விஜய், ஆதவ் அர்ஜுனாவை கூப்பிட்டு சத்தம் போட்டுருக்காரு. ''ஏன் தேவையில்லாமல் வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறாய். ஒழுங்காக மன்னிப்பு கேளு. இல்லையென்றால் சிக்கலாகி போயிடும்' என எச்சரித்துள்ளார். அதன்பிறகு போன்லயும் திருமா கிட்ட மன்னிப்பு கேட்டு விட்டார் ஆதவ்.
Follow Us