Advertisment

பானைக் குறியீடுகள், பழமையான கற்கோடரி கண்டெடுக்கப்பட்ட அம்பலத்திடலின் மேலும் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்!

pdu-arch-2

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மங்களநாடு - பாலகிருஷ்ணபுரம், மாத்தூர் ராமசாமிபுரம், தஞ்சாவூர் மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கிடையே வில்லுனி ஆற்றங்கரையோரப் பகுதியில் உள்ள அம்பலத்திடல் என்ற இடத்தில் மிகப் பழமையான வரலாற்று வாழ்விடம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழக நிறுவனர் ஆசிரியர் ஆ.மணிகண்டன் தலைமையில் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

அங்கு சுமார் 173 ஏக்கர் பரப்பளவில் உள்ள அம்லத்திடலில் ஆங்காங்கே கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், விரவிக்கிடப்பதும் சுண்ணாம்பு கற்காரைகள் படிந்த இடங்களிலும், புதர்களின் அருகிலும் முதுமக்கள் தாழிகள் புதையுண்டு இருப்பதும் தெரிய வந்தது. பானை ஓடுகளின் கழுத்துப் பகுதியில் முக்கோண ஏணி வடிவத்திலான குறியீடுகளும் காணப்பட்டது. மேலும் எழும்பு துண்டுகள் கிடைத்துள்ளது. பெரிய சுடுசெங்கல், மண் தரை தளங்களும் காணப்பட்டது.

Advertisment

இது குறித்து ஆய்வாளர்கள் கூறும் போது, “வன்னி மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த பகுதி போர்வீரர்களின் வாழ்விடமாகமாகவும், போரில் மடிந்த வீரர்களின் நினைவிடங்களாகவும் இருந்திருக்க வேண்டும். மேலும் புதிர் திட்டைகளும் அமைந்திருக்கிறது. சுண்ணாம்பு படிமங்கள் காணப்படுகிறது. இதன் காலம் சுமார் 3 ஆயிரத்தி 500 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்க வேண்டும். மேலாய்வில் மேலும் பழமையான கற்கோடரி கண்டெடுக்கப்பட்டது மேலும் இந்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள் கிரேக்கம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒரே மாதிரியாக கிடைத்திருப்பதால் தமிழர்கள் உகலமெங்கும் வாழ்ந்த சமூகமாக இருந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்றனர்.

pdu-arch-1

இளைஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் தேடலில் கிடைத்த பானை ஓடுகள் கற்கோடரி போன்ற பொருட்களை அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு புதுக்கோட்டை அருங்காட்சியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அம்பலத்திடலில் மேலாய்வில் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் இன்றும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காணலாம். இந்த நிலையில், நேற்று பாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அம்பலத்திடல் பகுதிக்கு சென்ற போது சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் ஓடி மண் அரிப்பு ஏற்பட்டதில் புதையுண்டிருந்த முதுமக்கள் தாழி வெளிப்பட்டுள்ளது. அதில் 2 அங்குலம் நீளத்திற்கு கூர்மையான சுடுமண் பொருள் கிடைத்துள்ளது. இது தாழியில் உள்ள மூடியின் கை பிடியைப் போல உள்ளது. மேலும் ஆங்காங்கே இரும்பு எச்சங்களும் காணப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது, அம்பலத்திடல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்களை கொண்டு அகழாய்வு செய்து புதைந்துகிடக்கும் வரலாறுகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்கின்றனர். பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

archealogist pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe