பூமியைப் போலவே உயிர்கள் வாழும் தகவமைப்பு கொண்ட வேற்று கிரகங்கள் இருக்கிறதா? வேற்று கிரக வாசிகள் என்பதெல்லாம் உண்மையா? என்பது பற்றிய தேடல் மிகவும் நீளமானது மற்றும் விடை தெரியாத ஒன்று. ஆனால் கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானது. அந்த சுவாரஸ்யத்துக்கு தீனி போட்டிருக்கிறது நாசாவின் புதிய கண்டுபிடிப்பு. கிட்டத்தட்ட பூமியைப் போலவே, உயிர்கள் வாழத் தகுதியான கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளதாக வெளியான தகவல் தான் அது.

Advertisment

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழக்கூடிய தகவமைப்பு கொண்ட ஒரு கிரகத்தை நாசாவின் சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய, வாழக்கூடிய அமைப்புகளை கொண்ட கிரகம் சுமார் 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அது செவ்வாய் கிரகத்தின் சில காரணிகளுடன் ஒத்தவையாக உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு, 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் 2017-ல் கைப்பற்றப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் இந்த கிரகத்தை அடையாளம் கண்டுள்ளது நாசா.

Advertisment

'HD 137010 b' எனப் பெயரிடப்பட்ட இந்தக் கோள் உயிர்கள் வாழ்வதற்கான 50 சதவீதம் வாய்ப்பு கொண்ட அமைப்புகளை கொண்டிருப்பதாக அந்தக் குழு நம்புகிறது. சூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கான சிறிய பகுதியில் HD137010 b' கோள் உள்ளது. இதனால் அங்கு அதிக வெப்பமாகவோ அல்லது அதிக குளிராகவோ இல்லை என்பது தெரிந்துள்ளது.

828
Another Earth? - NASA gave a big surprise in 2026 Photograph: (space)

ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியருமான டாக்டர் செல்சியா ஹுவாங் இதுகுறித்து கூறுகையில், ''இந்த கிரகம் சுமார் 355 நாட்கள் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பூமி அளவிலான கிரகத்தைப் பற்றி மிகவும் உற்சாகமான விஷயம் என்னவென்றால், அதன் நட்சத்திரம் நமது சூரிய மண்டலத்திலிருந்து 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனை போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றியுள்ள சிறந்த கிரகம் இது. சுமார் நான்கு மடங்கு தொலைவில் உள்ளது.

Advertisment

உங்கள் பைகளை இப்போதே பேக் செய்யாதீர்கள் ஏனென்றால் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் வெப்பநிலை -70C (-94 F) ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், அது மிகவும் சாதகமாக இல்லை. இது தவிர, HD137010 b சுற்றும் நட்சத்திரம் நமது சூரியனை விட குளிராகவும் மங்கலாகவும் இருக்கிறது. அந்த கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலை செவ்வாய் கிரகத்தைப் போன்றது. இதனால் 'சூப்பர் பனிப்பந்து' என்று அழைக்கப்பட வாய்ப்புள்ளது. தண்ணீரைக் கொண்ட ஒரு பெரிய பனிக்கட்டி உலகம் அது. அதில் பெரும்பகுதி உறைந்திருக்கும். HD137010 b கோளை ஒரு வெளிப்புற கோளாக வகைப்படுத்த இன்னும் கூடுதல் தரவு தேவைப்படுகிறது. 

பூமியை போல உள்ள அந்த கிரகம் நமக்கு நெருக்கமாக இருந்தாலும், தற்போதைய வேகத்தில் பயணித்து, அங்கு செல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்'' என்று செல்சியா ஹுவாங் கூறியுள்ளார்.