தமிழ் திரையுலகில் மிக முக்கிய பாடலாசிரியராக இருந்து மறைந்தவர் கவிஞர். நா.முத்துக்குமார். இவரது பாடல் வரிகள் காலத்தால் அழியாத, கேட்டாலே பல்வேறு மெல்லிய மன உணர்வுகளை மீட்டெடுக்கும் வல்லமை வாய்ந்தது. இவரது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும், அத்தோடு அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்யும் விதமாகவும் ஆனந்தயாழ் என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்திரையுலகின் இயக்குநர்கள்ஏ.எல்.விஜய், ஜெயம் ராஜா, ராம், வசந்தபாலன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி ஆகியோரும், தயாரிப்பாளர்கள் தேனப்பன், கலைப்புலி தாணு, சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோரும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், பாடகர்கள் ஹரிசரண், நிவாஸ் கே பிரசன்னா, உத்தாரா உன்னி கிருஷ்ணன், சைந்தவி, சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் சார்பில் நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அன்பளிப்பாக அளித்தனர். சிவக்குமார், சூர்யா- கார்த்தி அறக்கட்டளை சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கினார்.

Advertisment

தாடி வைக்க காரணம்

இசையமைப்பாளர் தேவா பேசும் போது “என்னைத் தேடி ஒரு இளம் வயது இளைஞர் வாய்ப்பு தேடி வந்தார். அவரிடம் மிகவும் சிறியவராக தெரிகிறீர்கள். அதனால் கொஞ்சம் தாடி வையுங்கள் என்று சொன்னேன்” அந்த இளைஞர் தான் நம்முன் தாடி வைத்து வலம் வந்த நா.முத்துக்குமார். அவர் தாடி வைக்க நான் தான் காரணம் என்றார்.

அரசியல் தலைவர் குறிப்பிட்ட பாடல்

Advertisment

இயக்குநர் பாலா பேசும் போது “தமிழ்நாட்டில் ஒரு பெரிய கட்சியில் அப்பாவிற்கும், மகனுக்கும் இடையே அரசியல் பனிப்போர் நடக்கிறது. அப்போது அந்த அப்பா அரசியல் தலைவர் மகனைப் பற்றி குறிப்பிட்டு பேசும் போது நா.முத்துகுமார் பெயரையும் சொல்லி தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று அந்த பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசினார் என்றார்.

வாலியின் வாழ்த்து

தயாரிப்பாளர் தாணு பேசிய போது “பல்லேலக்கா பாடலில் இரட்டைக்கிளவியையும், அடுக்கு தொடரையும் நா.முத்துகுமார் எழுதியிருந்ததை கேட்ட மூத்த கவிஞர் வாலி அந்த கவிஞனுக்கு ஒரு வாழ்த்து சொல்லுயா என்று என்னிடம் சொன்னார் என்றார்

பாடலுக்கு சம்பளம்

சிவகார்த்திகேயன் பேசும் போது “நான் எழுதிய பாடல்வரிகளுக்கான சம்பள தொகையை கேட்டு வாங்கி எனது இன்ஸ்பிரேசனான நா.முத்துகுமார் அவர்களது குடும்பத்தினருக்கு தான் கொடுத்தேன் என்றார்.