சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் பனையூர் அலுவலகத்தை அதிர விட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல். இவருடைய குடும்பத்தார் தவெக தலைவர் விஜய்க்கு வேண்டப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அஜிதா தனக்கு விஜய் மாவட்ட பொறுப்பு தருவதாக தெரியப்படுத்தி இருக்கிறார். நான்தான் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்று வெளிப்படையாகவே அறிவித்த அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் தொகுதியில் கட்சியின் சார்பில் சில பல பணிகளை மேற்கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/365-2026-02-18-17-34-08.jpg)
மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று அவர் கூறி வந்த நிலையில் கட்சி தலைமையோ மத்திய மாவட்ட செயலாளராக தூத்துக்குடி சாமுவேல் ராஜை அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த அஜிதா அக்னல் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூர் சென்று விஜய்யின் காரை வழிமறித்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் நடிகர் விஜய் அவரை பொருட்படுத்தாமல் கடந்து சென்று விட்டார். இதனால் அதீத அதிருப்தியுடன் தூத்துக்குடி திரும்பிய அஜிதா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை அருந்தியவர். சாவின் விழும்பு வரை சென்று திரும்பினார். அப்படி இருந்தும் தவெக தலைமை அஜிதா பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/366-2026-02-18-17-33-22.jpg)
இந்தநிலையில் தான் தூத்துக்குடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்துள்ள அஜிதா தனக்கு தேர்தலில் போட்டியிட நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அஜித்தா ஆக்னலின் மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தூத்துக்குடியின் முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கம் சார்பில் பனையூர் தவெக அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த கடிதத்தில் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே மிக தீவிரமாக வேலை பார்ப்பவர் அஜிதா ஆக்னல் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். என்றாலும் அவர் சாதி மத வேறுபாடின்றி ஆதரவை பெற்றுள்ளார். கட்சி தொடர்பான சமூக நல பணிகளை கிராமங்கள் தோறும் கொண்டு சென்றவர். அதோடு தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகமாக்கி இருக்கிறார். எனவே தூத்துக்குடியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் வெற்றி வேட்பாளர் ஆவார் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/368-2026-02-18-17-34-40.jpg)
இவ்விவகாரத்தில் தொடர்புடைய முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கத்திற்கு இந்த தகவல் தெரியவர மிரண்டு போன அந்த சங்கத்தின் தலைவர் கனகராஜ், பொதுச்செயலாளர் ராஜி, பொருளாளர் மிக்கேல் ஆகியோர் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் எங்களுக்கும் இந்த லெட்டர் பேடுக்கும் சம்பந்தம் இல்லை. சங்கத்தின் லெட்டர் பேட் தவறாக பயன்படுத்தப்பட்டு எங்களை எழிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றனர். இந்த போலி லெட்டர் பேட் விவகாரம் தூத்துக்குடி அரசியல் களத்தை தகிக்க வைக்க அஜிதா ஆக்னலே தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த லெட்டர் பேடில் தனது ஆதரவாளர்களை கொண்டு இப்படி ஏக பில்டப் கொடுத்திருக்கிறாராம் என்று பேசப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி சீட்டை பெறுவதற்கு நாங்கள் எந்தவிதமான எல்லையையும் தாண்ட தயார் என்று அஜிதா ஆக்னலின் தரப்பு தீவிரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நல சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தவர்கள், 'லெட்டர் பேடை தவறுதலாக பயன்படுத்தி சென்னைக்கு அனுப்பிள்ளார்கள். அது முற்றிலும் தவறானது. யாருக்கும் நாங்க லெட்டர் கொடுக்கவும் இல்லை. அனுப்பவும் இல்லை. ஏமாற்றும் நோக்கத்துடன் இந்த ஆவணம் தயார் செய்யப்பட்டது. எங்களை பொறுத்தவரையில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் தூத்துக்குடி, திருச்செந்தூர், குளச்சல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மீனவ பரதர் மற்றும் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில், எமது சமுதாயத்தை சார்ந்த ஒருவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, வாய்ப்பை அளிக்க வேண்டியது, எங்களுடைய உறுதியான நோக்கமாகும்.
வருகின்ற 21.02.2026 அன்று நடைபெற இருக்கின்ற பரதர்குல உள்ளரங்கு மாநாட்டு நோக்கங்களை சிதைக்கும் வண்ணமாக இது போன்ற முன்வைக்கும் புறமான ஆவணங்களை தயார் செய்து சம்பந்தப்பட்ட கட்சிகளை ஒப்படைப்பதோ, சமுதாய மக்களிடம் பரப்புரை செய்வதோ சட்டப்படி குற்றம் மற்றும் ஒருதலைபட்சமாக கொடுப்பது தவறாகும். எனவே இந்த ஆவணத்தை தயார் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/369-2026-02-18-17-32-55.jpg)