Advertisment

'அதிமுக வாக்குறுதி பிளாப்; நினைச்சா ஆர்பிஐ கடன் கொடுக்காது'-விளக்கும் புதுமடம் ஹலீம்

361

admk Photograph: (rbi)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
021
haleem Photograph: (politics)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 2000 கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் சொன்னார். அதிமுகவின் அந்த வாக்குறுதி இப்போது பிளாப் ஆயிடுச்சு. ஏனென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2000 என முதல்வரே சொல்லிட்டார். ஏற்கனவே பணம் கொடுத்தவர்கள் சொன்னால் நம்பலாம். எப்படி உன்னால் கொடுக்க முடியும் என்று கேட்டவர்கள் சொன்னால் நம்புவோமா? நம்பிக்கை வேண்டும் அல்லவா? தேர்தல் அறிவித்துவிட்டால் அந்த உரிமைத் தொகையை கொடுக்க முடியாது. கொடுப்பதை தடுக்க முயற்சி பண்ணுவாங்க என்பது தான் முதல்வரின் ஸ்டேட்மென்ட்.

நான் என்ன கேட்கிறேன் பீகாரில் 10,000 கொடுத்தார்கள். மாசம் மாசம் எல்லாம் கொடுக்கவில்லை மொத்தமாக 10,000 ரூபாய் எடுத்து கொடுத்தார்கள். அது ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. நீங்கள் தடுக்கவும் முடியாது. நீதிமன்றம் வழக்கு போனாலும் அது செல்லுபடியாகாது. பணத்தை கொடுத்து விட்டார்கள் என்று சொன்ன உடனே ஆஃப் ஆயிட்டாங்க. ஷாக் ஆயிட்டாங்க. இந்த பணம் எப்படி வந்தது? பணத்தை எப்படி கொடுத்தாங்க? எனக் கேட்கிறார்கள். வெளிப்படையாக அந்த ஃபண்டை எப்படி ஜெனரேட் பண்ணுகிறார்கள் என்பது வெளிப்படையான விஷயம்தான். ஒன்னும் மறைமுகமாக கருப்பு பணத்தை கொடுக்கவில்லை. எல்லாம் கணக்கில் உள்ள பணம். மக்களுடைய பணம்தான். தமிழ்நாடு அரசுக்கு வருகின்ற வருமானம்தான். 

உடனே கேட்பார்கள் 5 கோடி கடனை வாங்கி கொடுக்கிறார்கள் என்று திருப்பி திருப்பி இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க நீங்கள் இஷ்டத்துக்கு எல்லாம் கடன் வாங்க முடியாது. ஆர்பிஐ-ல் ஒரு ரூல் இருக்கிறது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் ஒரு மாநில அரசு எவ்வளவு கடன் வாங்கலாம் என்று ஒரு கட் ஆப் இருக்கிறது. ஜிடிபி காட்ட வேண்டும், வருமானத்தை காட்ட வேண்டும். அந்த தகுதி இருந்தால் மட்டும் தான் கடன் வாங்க முடியும். இல்லையென்றால் வாங்க முடியாது. நீங்கள் நினைச்சா கடன் வாங்க முடியாது. இன்னைக்கு 11.19 ஜிடிபி தமிழ்நாட்டில் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு ஸ்லாப் இருக்கிறது. தமிழ்நாடு அரசு கேட்டால் உடனே கடன் கொடுத்துவிடுவார்களா? ஆர்பிஐ ஏற்றுக்கொள்ளுமா? ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா யார் கண்ட்ரோலில் இருக்கிறது. ஒன்றிய அரசு கண்ட்ரோலில் தானே இருக்கிறது. அதை தடுக்க வேண்டியதுதானே.

dmk admk congress RBI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe