'AIADMK has been like this since Jayalalithaa's time...' - furious Vallam Basir Photograph: (dmdk)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
விஜய்யின் பேச்சு, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
மக்களிடம் 'டெல்டாகாரன் என்று சொல்லி டால்டா ஊற்றாதீர்கள்' என்கிறார் விஜய். முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் சொந்தக்காரர்தான், அவர்தான் எங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய முதலமைச்சர் என்று எங்கள் மாவட்டம் கருதுகிறது. அதில் என்ன உங்களுக்கு பிரச்சனை? சந்தேகம் இருந்தால் இந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் டெல்டா பகுதியில் ஒரு இடத்திலாவது டெபாசிட் வாங்கி காட்டுங்கள். உண்மையிலேயே திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது அதிருப்தி இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறோம்.
கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை பொறுப்பை தந்து அழகு பார்க்கிற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு நெடிய பாரம்பரியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜாமாநிலங்களவைக்கு சென்றது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கூட்டணியில் தான். சுதர்சன நாச்சியப்பன் மாநிலங்களவைக்கு போனது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணியில் தான். அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணியில் தான். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணியில் தான். இப்போது கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணிதான். இப்படி கூட்டணி கட்சிகளுக்கு திராவிட முன்னேற்ற கழகம் மாநிலங்களவை தருகிறேன் என்று சொன்னால் உறுதியாக தரும் என்கின்ற அந்த நம்பிக்கையை மீண்டும் வென்று எடுத்திருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம்.
நேற்றைக்கு அந்த பழைய கடிதத்தை நான் புரட்டி பார்த்தேன். எடப்பாடி பழனிசாமி சொன்னார் இல்லையா? தேமுதிக அதிமுக கூட்டணியில் தொடர்கிறது. அந்த கூட்டணியில் வரப்போகிற 2026 மாநிலங்களவை தேர்தலில் அவர்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் சொன்னாரா இல்லையா? அந்த லெட்டர் இன்னும் உயிப்போடு இருக்கா இல்லையா? ஏன் நீங்கள் லெட்டர் கொடுக்கவில்லை? உங்களுக்காக காத்திருந்தார்கள் தேமுதிக. நீங்க கொடுத்திருக்க வேண்டுமா இல்லையா? ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் உடனடியாக அந்த மாநிலங்களவை இடத்தை தருகிறோம் என்று சொல்லி கூட்டணியினுடைய நம்பிக்கைக்கு பால்வார்த்திருக்கிறது. தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை கொடுத்திருக்கிறது என்று சொன்னால் கூட்டணிக்கு பாத்திரமாக இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான் உள்ளதே தவிர அதிமுக அல்ல. ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுக இப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. தேமுதிகவுக்கு அதிமுகவை பற்றி நன்றாக தெரியும்.
2011-ல் தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே ஜெயலலிதா 234 தொகுதிக்கு கேண்டிடேட் போட்டுவிட்டார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அதிர்ச்சி ஆயிட்டாங்க. தேமுதிக அலுவலகத்துக்கு போனார்கள். இது வழக்கமாக நடக்கிற நடைமுறைதான். கூட்டணி பேச்சுவார்த்தை என்று ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் நிலைபாடு என்று ஒரு பக்கத்திலே அவர் எடுத்துக் கொண்டிருப்பார். எல்லா நிலையிலும் அதிமுக கூட்டணிக்கு பாத்திரமாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் திமுக கூட்டணிக்கு பாத்திரமாக இருந்திருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது என்றுதான் நான் பார்க்கிறேன்.
Follow Us