Advertisment

'விசிகவில் ஆதவ் செய்த உள்ளடி..'-புட்டு புட்டு வைத்த சங்கத்தமிழன்

260

'Adav's slander in VCK..' - Sangam Tamilian who made a statement Photograph: (VCK)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தவெக நோக்கி சென்றுள்ள இளைஞர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்?

தலித் இளைஞர்களே நீ அங்கே (தவெக) போயிருந்தாலும் உங்கள் தலைமை கிட்ட கேளுங்க. அங்க யாராவது தலித் மாவட்ட செயலாளர் இருக்காங்களா என்று கேளுங்க. மாவட்ட செயலாளர் பதவி தான் முக்கியமானது. அதிகாரம் மிக்க முக்கிய பதவி. அதில் தலித் இளைஞர் யாராவது ஒருத்தர் இருக்கிறார்களா? நான் மதுரையைச் சேர்ந்தவன். மதுரை மாவட்டம் மேலூரில் பாண்டி என்ற இளைஞர் 1990ல் இருந்து விஜய் ரசிகர் மன்றத்தை வளர்த்தான். ஆனால் அந்த தம்பிக்கு தொண்டரணி கொடுத்துள்ளார்கள். மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கவில்லை. அதேமாதிரி மாநில அளவில் நாலே நாலு பேர் இருக்காங்க. பெயர் சொல்ல விரும்பவில்லை. மாவட்டச் செயலாளர் என்ற அதிகாரமிக்க பதவியை விசிக வரவுக்கு பிறகு  திமுக கொடுத்திருக்கிறது. அதிமுகவும் கொடுத்திருக்கிறது. ஏன் வளர்ந்து வரக்கூடிய ஒரு கட்சி (தவெக) ஏன் தலித் இளைஞர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்க முடியவில்லை.

Advertisment

ஆதவ் அர்ஜுனா ஒரு சுயநலவாதி. இன்னொரு திடுக்கிடும் தகவலை சொல்கிறேன். ஆதவ் அர்ஜுனா கட்சிக்குள் வரும்போதே நான் எதிர்த்தேன். கட்சிக்குள்ள இந்த மாதிரி பையனை எல்லாம் கொண்டு வரக்கூடாது என்று கடுமையாக எதிர்த்த ஆள் நான்தான். ஆனால் எங்க தலைவர் ஆதவ் அர்ஜுனாவை முழுக்க முழுக்க நம்பினார். கட்சியின் உறுப்பினர்கள் லிஸ்ட் எல்லாத்தையும் ஆதவ் கேட்டார். எங்க கட்சியின் ஐடி விங் மாநிலச் செயலாளர் சன் பராஜ் என்ற தம்பி என்கிட்ட சொன்னார். 'கட்சி உறுப்பினர் லிஸ்டை ஆதவ் அர்ஜுனா கிட்ட தலைவர் கொடுக்க சொல்கிறார்' என்று என்னிடம் சொன்னார். எங்க தலைவர் எல்லோரையுமே நம்புவார். பெரிய பிரச்சனையே அதுதான். ஜனநாயக ரீதியாக இருப்பார். நான் கொடுக்க கூடாது என்று சொன்னேன். சஜன் பராஜூம் கொடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார். ''அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை கொடுப்பா'' என்று திருமா சொன்னார்.

Advertisment

தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா விசிக உறுப்பினர் பெயர் கொண்ட லிஸ்ட்டை வாங்கி முடிச்சிட்ட பிறகு நாளைக்கு ஒருவேளை ஆதவ் அர்ஜுனா வெளியே போய்விட்டால் நமக்கு பிரச்சனை ஆகி போயிடும் என்று நேரடியாக சொன்னேன். ஆனால் ''அப்படி எல்லாம் செய்யக்கூடிய தம்பி அவர் இல்லை''என்று எங்கள் தலைவர் சொன்னார். ஆதவ் அர்ஜுனாவை எவ்வளவு நம்பி இருக்கிறார் திருமா என்று பாருங்க. அந்த ஆதவ் அர்ஜுனா வெளியே போனதோடு மட்டுமல்லாமல் அந்த லிஸ்ட்டை வச்சுக்கிட்டு, போன் பண்ணி, போன் பண்ணி பேசுகிறார். இது எவ்ளோ பெரிய அயோக்கியத்தனம். 

thirumavalalavan vck sangatamizhan Aadhav Arjuna tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe