Advertisment

'ஆதவ்வின் பாஜக மூவ்; குழப்பத்தில் விஜய்'-அடுக்கும் விசிக சங்கத்தமிழன்

265

TVK Photograph: (POLITICS)


தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment
259
VCK Photograph: (POLITICS)

ஆதவ் அர்ஜுனா பாஜகவை நோக்கி செல்வதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்? 

நான் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை. அங்கேயும் நம்ம ஸ்லீப்பர் செல் இருக்காங்க. அங்கு நடப்பது எல்லாம் தெரியும். திருமா மற்றும் விசிக குறித்து ஆதவ் அர்ஜுனா பேசிய பிறகு விஜய் பிடித்து சத்தம் போட்டுருக்காரு ''தம்பி சரி இல்ல.. நீ பண்றது எல்லாம் ஏட்டிக்குப் போட்டியா இருக்கு'' என எச்சரித்துள்ளார். தவெகவின் பொலிட்டிக்கல் அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமியோ ''முழுக்க முழுக்க நம்ம பாஜகவிற்குள் போகக்கூடாது. பாஜகவிடம் போயிட்டோம் என்றால் நம்ம சோலிய முடிச்சிடுவாங்க'' என்று சொல்கிறார். ஆரோக்கியசாமி கருத்துக்கு ஆதவ் அர்ஜுனா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?, ''விஜய் நீங்கள் கார் வாங்கி ஏற்கனவே வரியெல்லாம் ஏமாத்தி இருக்கறீங்க. ஒன்றரை கோடி உங்களுக்கு பெனால்டி போட்டுள்ளார்கள். பல பிரச்சனைகள் இருக்கு. அதனால் பாஜகவுடன் காம்ப்ரமைஸ் ஆயிருவோம்'' என்றுள்ளார். யார் சொல்வதை கேட்பது என்று விஜய்க்கு ஒரே ஒரே குழப்பம்.

புஸ்ஸி ஆனந்த் கிட்ட விஜய் கேட்கும்போது ஆரோக்கியசாமி சொல்றது தான் கரெக்ட் என்று சொல்லியுள்ளார். இந்த மாதிரி ஒரு பெரும் பிரச்சனை தவெக உள்ளே போயிட்டு இருக்கு. விஜய் அவர்களே கவனமா இருங்க, எச்சரிக்கையா இருங்க ஏன்னா அந்த ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருந்து விசிக வந்தாரு. இங்கே இருந்து தவெக போனார். எச்சரிக்கையாக இருங்க, கவனமாக இருங்க. விசிகவுக்கு ஆதவ் அர்ஜுனா நிதி ஆதாரமாக இருந்திருந்தால் நாங்கள் ஏன் மண்டையில் தட்டி வெளியே விரட்டி இருக்கப்போகிறோம். ஒருகட்சி நடத்துவதற்கு பொருளாதாரம் மிக மிக முக்கியம். அது விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு மிக மிக முக்கியம். எங்களிடம் பொருளாதாரம் இருந்தால் 234 தொகுதிகளிலும் வேட்பாளர் போடுவோம். எங்கிட்ட பொருளாதாரம் இல்லை. ஆனால் ஓட்டு போடுவதற்கு மக்கள் இருக்கிறார்கள்.

அப்படி பொருளாதார வசதி கட்சிக்கு செய்து கொடுத்திருந்தால் ஆதவ் அர்ஜுனாவை நாங்களே வச்சிருப்போம் ''வாடா தம்பி'' என காம்ப்ரமைஸ் பண்ணி பேசி செட் பண்ணிருப்போம் அல்லவா. அவன் பெரிய பிராடு. எவனுக்கும் அஞ்சு காசு கொடுத்தது இல்லை. சும்மா போய் உட்காந்துக்கிறது. வெளியில் இருக்கும் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றால் மாநாடு ஃபுல்லா ஆதவ் தான் நடத்துகிறார் போல இருக்கு என நினைப்பீர்கள். ஸ்டேஜ் பந்தல் எல்லாம் ஆதவ் தான் போடுகிறார் என நினைப்பார்கள். இப்போது விஜய்க்கும் அதே பிரச்சனை. அதனால் தவெகவில் ரொம்ப சிக்கல்ல போய்கிட்டு இருக்கு. ஆனால் ஆதவ் அர்ஜுனா எப்படி இருந்தாலும் என் தம்பிதான். அதனால் இவ்வளவு நேரம் நான் பேசியதை மறக்காமல் உள்வாங்கிக் கொண்டு ஒரு பொதுதளத்தில் உட்கார்ந்து 'நான் பேசியதற்கு எல்லாம் எனது மன்னிப்பு கேட்கிறேன்'' என்று சொல். இல்லையென்றால் உன்னை அரசியல் படுத்துவது நிச்சயமாக நடந்தேறிவிடும்.

sangatamizhan tvk vijay Aadhav Arjuna b.j.p
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe