ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவில் நிலம், தங்கம், வெள்ளி, பணம் என பிறந்தநாள் பரிசாக பிரமாண்ட சொத்துக்கள் வழங்கப்பட்ட நிகழ்வு உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மொய், சீர்வரிசை வைப்பது திருமணம், நன்னீராட்டு விழாவில் மட்டுமே பிரதானமாக இருக்கும் நிலையில் இனி பிறந்தநாளிலும் மொய், சீர் வைப்பது கட்டாயம் என்ற தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு சமூக வலைத்தள பக்கத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் முதல் பிறந்தநாள் கொண்டாடும் ஷிவாய் என்ற குழந்தைக்கு குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள், சொந்தங்கள் என அனைவரும் பரிசுகளை குவித்துள்ளனர். இதுகுறித்து சிறுவனின் மாமாவான அகிலேஷ் சவுகான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இந்த காணொளி வைரலாகி வருகிறது. சாதாரண பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற ஒரு வழக்கமான கொண்டாட்டமாக தொடங்கப்பட்டாலும், யார் அதிமாக பங்குகள் கொண்ட சொத்துகளை கொண்டவர்கள் என்பதை வெளிக்காட்டும் செயலாக மாறியது.
பிறந்தநாள் சிறுவன் ஷிவாய்க்கு, அலிகார்-ஆக்ரா நெடுஞ்சாலையில் ஒரு நிலம் பரிசாகக் கொடுக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தவிர, அவருக்கு 11 லட்சம் ரூபாய் ரொக்கம், 20 கிராம் தங்கச் சங்கிலி, அரை கிலோ கிராம் வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன. அவருக்கு வெள்ளி வளையல்கள், மதச் சிலைகள் மற்றும் ஏராளமான பொம்மைகளும் வழங்கப்பட்டன.
இந்த ஆடம்பர பரிசுகள் அந்த சிறுவனுடன் நிற்கவில்லை. சிறுவனின் தாய்க்கு 35 கிராம் தங்க நெக்லஸ் மற்றும் பல்வேறு நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. செல்வப் பகிர்வின் ஒரு பெரிய கண்காட்சியாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இருந்துள்ளது. உறவினர்களுக்கு 101 புடவைகள் மற்றும் 101 தையல் துணிகளை வழங்கியுள்ளனர்.
சிறுவன் ஷிவாய் வயதுடைய பெரும்பாலான குழந்தைகள் ஒரு எளிய பிறந்தநாள் கேக்கை மட்டுமே சாப்பிட்டு திருப்தி அடைந்தாலும், ஷிவாய் தனது வாழ்க்கையின் இரண்டாம் ஆண்டிலேயே பல்வேறு வகையான நிலம், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க பண இருப்புகளுடன் அடி எடுத்துள்ளான். இந்த ஆடம்பர சொத்துக்கள் தனக்கு வந்து சேர்ந்ததை ஷிவாய் அறிந்துகொள்ளக்கூட இவ்வயதில் வாய்ப்பிருக்காது. உங்களுடைய சிறப்பை வெளிப்படுத்த குழந்தைதான் கிடைத்ததா என பலரும் இந்த செயலுக்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/282-2026-02-06-21-22-44.jpg)