தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
021
haleem Photograph: (politics)

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் எப்படிப்பட்டது? தவெகவின் களம் எப்படி உள்ளது?

சமீபத்தில் பனையூரில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் வெளியிட்டார்கள். ஒரு விண்ணப்பம் 100 ரூபாய் 50 ஆயிரம்  விருப்ப மனு விற்றதாக பரபரப்பாக பேசுனாங்க. 50 ஆயிரம் விருப்ப மனு எல்லாம் எந்த கட்சியிலும் வாங்கிட்டு போக மாட்டாங்க. ஆனால் திருப்பி எத்தனை மனு வந்திருக்கு என்று பார்த்தால் 500 மனுக்கள் கூட இல்லை என்கிறார்கள்.


ஒரு தொகுதிக்கு ரெண்டு பேர் கூட கொடுக்கவில்லை. இதுதான் நிலைமை. குறைந்தபட்சம் நாம் தமிழர் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திட்டாங்க. தமிழக மக்களை வெறும் பில்டப் பண்ணி சினிமா மாதிரி ஏமாற்ற முடியாது. நீங்க கிட்டத்தட்ட பாருங்கள் பாஜகவை பேச மாட்டேன், மோடியை பற்றி எதுவும் பேச மாட்டேன். அதிமுகவை தொட மாட்டேன். நான் ஸ்டாலினோட மட்டும் தான் எனக்கு போட்டி. ஸ்டாலினை மட்டும்தான் விமர்சிப்பேன் என்கிறார். கரூரில் என் மேல் பலி சுமத்தினார் என்கிறார் விஜய். உங்களை ஸ்டாலின் காப்பாற்றி பேசினார். இது ஒரு ஜிம்பலிக்கா அரசியல் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது. விஜய்யை தொடர்ச்சியாக  முதல்வர் தவிர்க்கிறார். விஜய்யையும் விஜய்யை பற்றி பேசுவதையோ முதல்வர் மட்டுமல்ல முக்கிய திமுக தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் யாரும் பேசுவதில்லை கவனித்து பார்த்தால் தெரியும்.

ஏன் பேசுவதில்லை என்றால் விஜய் செய்வது ஒரு சினிமாத்தனமான அரசியல். அதைப் போய் பேசி என்ன பிரயோஜனம். நீங்க ஒரு சித்தாந்த ரீதியாக அரசியலை முன்னெடுக்க வேண்டும். நாம் தமிழர் தமிழ் தேசியம் என்ற ஒரு சித்தாந்த ரீதியான அரசியலை முன்னெடுக்கிறார்கள். பாஜக இந்துத்துவா என்ற சித்தாந்த ரீதியாக அரசியலை முன்னெடுக்கிறார்கள். மற்றவர்கள் திமுக, மதிமுக எல்லாம் திராவிட அரசியல் தான் எப்படி இருந்தாலும். அதேபோல்  என்டிஏ கூட்டணியில் அதிமுக இருந்தாலும் திராவிட அரசியல்தான். இந்த சித்தாந்த ரீதியான அரசியலை முன்னெடுக்கின்ற இந்த கட்சிகளுக்கு இடையே நீங்க எந்த சித்தாந்தத்தை முன்னெடுக்கறீங்க?
Advertisment
நீங்க இருக்கிற அத்தனை தலைவர்களுக்கும் மேடையில் போட்டோ வைக்கிறீர்கள். பெரியாரையும் வைக்கிறீங்க காமராஜரையும் வைக்கிறீங்க, அஞ்சலை அம்மாளை வைக்கிறீங்க, முத்துராமலிங்க தேவரையும் வைக்கிறீங்க இன்னும் காயிதே மில்லத்தையும் வச்சிருவீங்க. அத்தனை தலைவர்களை வைக்கிறீங்க. ஆனால் மேடையில் இருக்கும் அத்தனை தலைவர்களும் ஒரே அணியில் இருந்தவங்களா? காமராஜரும் பெரியாரும் ஒன்னாவே இருந்தார்களா? எப்பவுமே முரண்படவில்லையா? காமராஜரும் பெரியாரும் முரண்பட்டது எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. இந்த வரலாறு எல்லாம் தெரியாத விஜய் இன்னைக்கு  நான் வந்து ஒரு புதிய அரசியலை கொண்டு வருகிறேன்.  50 வருடங்கள் பார்க்காத ஒரு தேர்தல் களம் என்றெல்லாம் விஜய் சொல்கிறார்.
50 வருடங்களில் தமிழக தேர்தல் களத்தில் இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க மாட்டீங்க கண்டிப்பாக. நீங்க என்ன மாதிரியான தொண்டர்களை வச்சிருக்கீங்க என்று பார்த்தால் தெரிகிறது. அணில் குஞ்சுகளோடு போறீங்க. திருப்பி மீட்டிங் முடிச்சுட்டு அணில் குஞ்சுகளோடு திருப்பி வரீங்க. 
Advertisment