ரூ.20 வழக்கில் சுமார் 30 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நபர், இறுதியில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விடுதலையான மறுநாளே உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
ஸ்டீபன் கிங் எழுதிய 'ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் என்ற நாவல், தத்ரூபமான சிறைச்சாலை வாழ்க்கையை விவரிக்கும் படைப்பாகும். மனைவியை கொன்றதாக பொய்க் குற்றச்சாட்டின் கீழ், உள்ளே செல்லும் ஒரு வங்கியாளர் ஷாவ்ஷாங்க் மாநில சிறையில் 19 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்கிறார். பொய் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தும் மன வலிமையுடன் இருக்கிறார் என்பதே அந்த நாவலின் சாராம்சம். அப்படியான ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் நாவலை ஒத்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த பாபுபாய் பிரஜாபதி என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக அகமதாபாத்தில் 1997 ஆண்டு பணியில் இருந்துள்ளார். அப்போது அவர் ரூ.20 லஞ்சம் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் நீதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை கைதியாக கைது செய்யப்பட்டார்.
1997 ஆம் ஆண்டு ஒரு அமர்வு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீதான வழக்கு நடைபெற்று வந்தது. 2003 ஆம் ஆண்டு அந்த வழக்கில் சாட்சிய விசாரணைகள் தொடங்கின. 2004 ஆம் ஆண்டு அமர்வு நீதிமன்றம் பிரஜாபதிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் பாபுபாய் பிரஜாபதி மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு, அவரது மேல்முறையீடு வழக்கு ஓராண்டு ஈராண்டு அல்ல சுமார் 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்துள்ளது .இதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று 2026 ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி தீர்ப்பு வாசிக்கப்பட்டது. இறுதியாக பாபுபாய் பிரஜாபதி நிரபராதி என்று தீர்ப்பு வந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/07/298-2026-02-07-21-44-10.jpg)
சாட்சிகளின் வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் இந்த வழக்கில் நீதிமன்றம் கூறியது. பின்னர் அன்றே பிரஜாபதி விடுதலை ஆகி மகிழிச்சியுடன் வீட்டுக்கு சென்றார்.
"என் வாழ்க்கையிலிருந்து களங்கம் நீக்கப்பட்டுவிட்டது. கடவுள் என்னை அழைத்துச் சென்றாலும், எனக்கு எந்த துக்கமும் இருக்காது" என்று பிரஜாபதி தெரிவித்திருந்தார். ஆனால் வீட்டுக்கு சென்ற மறுநாளே அவர் இறந்துவிட்டார்.
பிரஜாபதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிதின் காந்தி இதுகுறித்து கூறுகையில், ''முழு வழக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்து அவரை நிரபராதி என தீர்ப்பளித்தது. பின்னர் மகிழ்ச்சியுடன் பாபுபாய் பிரஜாபதி வீடு திரும்பினார். ஆனால் மறுநாளே, அவர் இயற்கையாகவே இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.
அவர் இன்னும் சிறிது காலம் உயிருடன் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று அவரது நலம் விரும்பிகள் என்னிடம் கூறினர். நேற்று அவர் அலுவலகத்துக்கு வந்தபோது, அவர் விடுதலை ஆனால்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். நான் அவரிடம், 'பிரஜாபதி இனி நீங்கள் அரசாங்கத்திலிருந்து பெற வேண்டிய அனைத்து சலுகைகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்' என்று சொல்லியிருந்தேன். மறுநாள் நான் அவரை மீண்டும் அழைத்தேன். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் சொன்னார்கள்" என்று வழக்கறிஞர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/07/297-2026-02-07-21-43-39.jpg)