தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
021
haleem Photograph: (politics)

 

ஏற்கனவே அதிக கடன் உள்ள சூழலில் தமிழகம் உள்ள நிலையில் 5 கோடியை கடன் வாங்கி, திமுக மகளிர் உரிமைத்தொகை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனரே?
5 கோடி கடனை வாங்கி மகளிருக்கு 5000 ரூபாய் உரிமைத் தொகை கொடுக்கிறார்கள் என்று திருப்பி திருப்பி இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க நீங்கள் இஷ்டத்துக்கு எல்லாம் கடன் வாங்க முடியாது. ஆர்பிஐ-ல் ஒரு ரூல் இருக்கிறது.ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் ஒரு மாநில அரசு எவ்வளவு கடன் வாங்கலாம் என்று ஒரு கட் ஆப் இருக்கிறது.  ஜிடிபி காட்ட வேண்டும் வருமானத்தை காட்ட வேண்டும். அந்த தகுதி இருந்தால் மட்டும் தான் கடன் வாங்க முடியும்.  இல்லையென்றால் வாங்க முடியாது. நீங்கள் நினைச்சா கடன் வாங்க முடியாது.  இன்னைக்கு 11.19 ஜிடிபி தமிழ்நாட்டில் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு ஸ்லாப் இருக்கிறது. தமிழ்நாடு அரசு கேட்டால் உடனே கடன் கொடுத்துவிடுவார்களா? ஆர்பிஐ ஏற்றுக்கொள்ளுமா? ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா யார் கண்ட்ரோலில் இருக்கிறது. ஒன்றிய அரசு கண்ட்ரோலில் தானே இருக்கிறது. அதை தடுக்க வேண்டியதுதானே.
Advertisment
மத்திய அரசு மாநில அரசுக்கு ஃபண்டு கொடுக்க மாறுகிறது. ஒரு மாநில அரசு என்ன செய்யும்? திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஃபண்டை கடனாக வாங்கி திட்டங்களில் போட்டு அதில் வருகின்ற வருமானங்களில் நாங்கள் வட்டியை கட்டுகிறோம். இது எல்லா மாநிலங்களும் செய்வதுதானே. ஒன்றிய அரசுடைய கடனை எடுத்துக்கொண்டால் 2014க்கு பிறகு இப்போது எவ்வளவு கடன் இருக்கிறது. 200 கோடி லட்சம் கடன் இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும்போது எவ்வளவு கடன் இருந்தது வெறும் 84 லட்சம் கோடி கடன் தான் இருந்தது. அது இன்னைக்கு ஒன்றரை மடங்கு கூடி இருக்கிறது. அது மட்டும் வளர்ச்சி இது வந்து வீழ்ச்சியா? இது வந்து பொருளாதார ரீதியாக பேச வேண்டிய செய்தி.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 கொடுக்கிறோம். எப்படி கொடுக்கப் போறீங்க எனக் கேட்பார்கள். 1000 ரூபாய் எப்படி கொடுத்தோமோ அப்படிதான் கொடுப்போம் என்கிறது திமுக. உரிமைத் தொகை இரண்டு கோடி பெண்களுக்கு கொடுக்கிறார்கள். இதெல்லாம் திமுக கூட்டணியை பார்த்து அதிர்ந்து போய், நாம் இனி ஆட்சி மீண்டு வர முடியாது. பீகாரில் செல்லுபடியான விஷயம் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகவில்லை. உத்தரப்பிரதேசத்தில் செல்லுபடியான விஷயம் நடக்கவில்லை மகாராஷ்டிராவில் நாம் செய்த திட்டங்கள் எடுபடவில்லை. அதில் ஒரு பகுதிதான் இன்னைக்கு காங்கிரஸ் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த கூடிய அந்த வேலை. அதை காங்கிரஸில் இருக்கும் பல்வேறு தலைவர்கள் புரிந்திருக்கிறார்கள். அதை எப்படி அடக்குவது? எப்படி கண்ட்ரோல் பண்ணுவது என்று தெரியாமல் இன்னைக்கு தவிக்கிறார்கள்.