'1951 general election; a miracle the world has never seen' - UN chief marvels Photograph: (election)
அவர்களுக்கு தெரியும் யார் வாக்களிக்க வருவார்கள். இவர் ரொம்ப முதியவர் வரமாட்டார். அதனால போய் போட்டுருவாங்க. அப்போதெல்லாம் பெரிய அடையாள அட்டை எல்லாம் தேவை கிடையாது. அதன்பிறகு டி.என்.சேஷன் வந்த பிறகுதான் எல்லாம் மாறியது. அதன்பிறகு தான் இறந்தவர்கள் வாக்களிப்பது என்பது அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவது என்பதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துச்சு. இன்னைக்கு வந்து நாம் பழைய முறைக்கு போக வேண்டும் மின்னணு இயந்திரங்கள் நிறைய முறைகேடு நடக்கிறது. ஆனால் சமீபத்தில் ஒன்று கேட்டேன் மகாராஷ்டிராவில் உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கும் பொழுது அங்கு முன்பூ மாதிரியே அந்த பேலட் பேப்பர் அதாவது வாக்கு சீட்டு முறையை நடந்தது. அதிலும் இன்னைக்கு இருக்கிற ஆளும் கட்சி அங்கு பெரிய அளவில் வெற்றி பெற்றதை பார்க்க முடிந்தது.
என்னுடைய அனுபவம் என்பது ஒரு வாக்காளராதான். பெரிதாக எனக்கு அனுபவம் இல்லைன்னு தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒவ்வொரு தேர்தலும் திருவிழா மாதிரி நடக்கும். நான் வடசென்னையில் பிறந்தேன். நான் என்னுடைய பள்ளிப்பருவத்தில் இருந்தே பேரணிகளும், ஊர்வலங்களும், ரசிகர் மன்றங்களும், சைக்கிள் பேரணி நடக்கும். ஊர்வலத்தில் கோஷங்கள் எல்லாம் ரொம்ப வேடிக்கையான கோஷங்கள் எல்லாம் வரும். 'அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?' மாண்டவர்கள் போதாதா? நீ ஆண்டது போதாதா? இப்படி எல்லாம் ரொம்ப அழகான வாசகங்கள். அதை எப்படி அவர்கள் உருவாக்குறாங்க என்று நாமெல்லாம் யோசிப்போம். அந்த மாதிரி இருக்கும். நட்சத்திர வடிவில் பெரிய ரொம்ப அழகாக பல வண்ணங்களில் தலைவர்களுடைய படங்கள் அல்லது வேட்பாளருடைய படங்கள் போட்டு அதை தூக்கிட்டு போவார்கள். அதெல்லாம் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதெல்லாம் இப்போ அமைதி ஆயிடுச்சு.
பின்னர் பொதுக்கூட்டங்கள் நடக்கும். பொதுக்கூட்டங்களில் வேட்பாளருக்கு ஆதரவாக பேசுபவர்கள். நாங்க போய் கேட்போம். ரொம்ப அழகா எந்த காரணத்துக்காக அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் சொல்லுவார்கள். அந்த வேட்பாளரும் பக்கத்துல நிப்பார். நமக்கு வேண்டிய ஒருவர் இந்த மாதிரி இந்த தேர்தலில் நிற்கிறார். உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் கண்டிப்பாக நமக்கு தெரிஞ்சவர் தான் நிற்பார். அதெல்லாம் ஒரு திருவிழா மாதிரி நடந்த காலம் முடிந்து போய்விட்டது. இன்று சமூக ஊடகங்கள் வந்த பிறகு இன்னைக்கு தேர்தல் முடிவுகளில் சமூக ஊடகங்களுடைய பங்கு ஒரு பெரும்பங்காக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் முதன் முதலாக நடந்த பொதுத்தேர்தல் ஒரு தேர்தல் திருவிழாதான் அது மாதிரி உலகத்தில் வேறு எங்குமே நடந்திருக்காது. கிட்டத்தட்ட ஒரு 75 கோடி மக்கள் போய் வாக்களிப்பது என்பது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு உலக அதிசயம். 1951- 52ல் தான் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடந்தது. முதல் பொதுத்தேர்தல் 1951 அக்டோபர் 25 தொடங்கி 1952- பிப்ரவரி 21 முடிந்தது. பல கட்டங்களாக நடந்த இந்த தேர்தல். ஏறக்குறைய நான்கு மாதங்கள். இதுதான் நம்ம இதுவரைக்கும் நடந்த தேர்தல்களில் அதிகமான நாள் எடுத்துக்கொண்டு நடந்த தேர்தல். கழுதை மூலமாக வாக்குச்சாவடி பெட்டிகள் எல்லாம் போனதெல்லாம் கூட நாம் பார்த்தோம்.
Follow Us