பொங்கல் விழாவில் பொங்கிய குஷ்பு!
பொங்கல் நெருங்கிவிட்டாலே அனைத்துக் கட்சித் தலைவர்களும் சமத்துவப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்னு களத்தில் குதித்துவிடுவார்கள். ஆனால் தமிழக பா.ஜ.க.வினரோ, தென் மாவட்ட ஊர் ஒன் றில் "பஞ்சுப் பொங்கல்' வைத்து பகீர் கிளப்பி னார்கள். பொங்கல் பொங்கினால் பானையிலிருந்து வழிந்தோடுவதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். பால் ஊத்தினாத்தானே பொங்கும், பஞ்சு எப்படி பொங்கும். அதிலும் ஒரு பாட்டியிடம் "பாரம்பரிய முறைப்படி அம்மியில் அரைத்து பொங்கல் வைக்கப் போறோம்' எனச் சொல்லியிருப்பார்கள் போல. இம்புட்டுக்காணம் மஞ்சள்தூôளை அம்மியில் வைத்து அரையோ அரை என அரைமணி நேரமாக அரைத்து அதிசயப்பட வைத்தார். (ஆக்சுவலி, பானையில் கட்டப்பட்ட இஞ்சிக் கொத்தில் உள்ள இஞ்சியைத்தான் அம்மி யில் அரைத்து துவையல் செய்வார்கள்)
இந்தக் கூத்தெல்லாம் திருச்சியில நடக்கல, ஆனா அங்கே வேற மாதிரி கூத்து நடந்துச்சு. திருச்சி அருகே கோம்பு கிராமத்தில் நம்மஊர் பொங்கலுக்கு ஏற்பாடு செய்த மாவட்ட பா.ஜ.க.வினர், கட்சியின் லேட்டஸ்ட் ஸ்டாரான குஷ்புவையும் "காலைல 10:00 மணிக்கு வந்துருங்க' என அழைத் திருந்தனர்.
குஷ்புவே பொங்கல் வைக்க வருகிறார் என்றதும் நூற்றுக்கணக்கான பெண்கள் கூடிவிட்டனர். செங்கல் அடுப்பு, பொங்கப் பானை, மண்டை வெல்லம், பால் எல்லாம் ரெடி. குஷ்பு வந்ததும் அடுப்பை பத்த வைக்க லாம் என காத்திருந்து காத்திருந்து மதியம் ஒரு மணி வரை வராததால், மத்தியானச் சாப்பாட் டுக்கு வீட்டுக்குப் போக லேன்னா வீட்டுக்காரர்ட்ட பதில் சொல்லணுமே என பதறிய பெண்கள், பொங்கலை வைத்து இறக்கி விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டனர்.
சாயங்கால டிபனுக்கு வருவதுபோல் மாலை 5:00 மணிக்கு வந்து சேர்ந்தார் குஷ்பு. இத னால் பரபரப்பான பா.ஜ.க. வினர் இருக்கிற பெண் களை வைத்து இறக்கிய பொங்கப் பானையை மீண்டும் அடுப்பில் வைத்து இறக்கினார்கள். அதன்பின் மீடியாக் களைச் சந்தித்த குஷ்பு, “""எடப்பாடி ஆட்சி சிறப்பா நடக்குது. ஜெயலலிதா ஆட்சியும் சிறப்பா இருந்துச்சு. கலைஞருடன், ஸ்டாலினை ஒப்பிடவே முடியாது. அப்ப இருந்த தி.மு.க. வேற, இப்ப இருக்கும் தி.மு.க. வேற. பெண்களைப் பத்தி தப்பா பேசுனதுக்கு மன்னிப்புக் கேட்க முடியாதுன்னு உதயநிதி சொல்றார். அப்படிப்பட்ட தாத்தாவுக்கு இப்படிப்பட்ட பேரனா?'' என பொங்கிவிட்டுப் புறப்பட்டார் ஈவ்னிங் ஷோவுக்கு வந்த குஷ்பு.
-மகேஷ்
வரவேண்டிய நேரத்துக்கு வருவோம்!
பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, சமுதாய அமைப்புகள் பலவும் தோதான பெரிய கட்சிகளுடன் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். அந்த வகையில் தேசிய செட்டியார்கள் பேரவையினர் தங்களுடையை கோரிக்கைகளை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
திருச்சியில் அந்தப் பேரவையின் மகளிர் அணி மாநாட்டிற்கு கடந்த 11-ஆம் தேதி வந்திருந்த பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மீடியாக்களைச் சந்தித்தார். அப் போது, “""தமிழகத்தில் விவசாயத்திற்கான நீர் நிலை ஆதாரங்களை அதிகப்படுத்த வேண்டும். மேட்டூர் அணையின் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தமிழக எல்லையோர மாநிலங்களில் அணைகள் கட்டவேண்டும். ஆன்லைன் மருந்து வணிகத்தை தடுக்க வேண்டும்''’’ என சொல்லிக் கொண்டே வந்தவர்... “""அப்புறம் முக்கியமான விஷயம், சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் மாநாட்டை நடத்தி எங்கள் பலத்தை நிரூபிப்போம். எங்களுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வருவோம்''’என்றார்.
-மகி
கண்டுகொள்ளப்படாத எம்.ஜி.ஆர் ஆவணம்!
1967-ல் ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கம் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்துவருகிறது. இதில் அதிகமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி அ.தி.மு.க. அமைப்பு ரீதியாகவும், அதிக உறுப் பினர்களைக் கொண்ட இயக்கமாகவும் இருந்து வருகிறது. ஆனால் ஒரு மாபெரும் முரண்பாடு என்னவென்றால் பதவி அரசியலில் பந்தயக் குதிரையாக விளங்கும் அமைப்பை உருவாக்கிய தலைவருக்கும் அவரது கட்சிக்கும் முறையான சரியான ஆவணப் பதிவுகள் இல்லை.
இந்தநிலையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடும் சிரமப்பட்டு ‘"எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும்', ‘"வரலாற்றில் எம்.ஜி.ஆர்.'’ ஆகிய தலைப்பு களில் ஏறத்தாழ 3500 பக்கங்களில் எம்.ஜி. ஆருக்காக மாபெரும் ஆவணப்பதிவை உருவாக்கியிருக்கிறார் அரியலூர் மாவட்டம், செந்துறையைச் சேர்ந்த வே.குமரவேல்.
எளிய நிலையில் வருமானம் எதுவும் இல்லாத சூழலில் அவர் இந்தப் பணிகளை செய்திருப்பது ஆச்சரியமான விசயம். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் குமரவேலின் தாத்தா, அப்பா, சித்தப்பா, சகோதரர்கள் ஆகி யோர் தி.மு.க. ஆதர வாளர்கள் என்பது தான்.
எம்.ஜி.ஆர். அபிமானிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் எம்ஜிஆரால் பயனடைந்த பெரும் புள்ளிகளும், அமைச்சர்களும் இப்படிப் பட்ட அரிய களஞ்சியத்தை திரும்பிக்கூட பார்க்காமல் இருப்பதை ஆவணத்தின் அருமை அறிந்தவர்கள் கவலையோடு சுட்டிக்காட்டு கிறார்கள்.
-வேல்