"ஹலோ தலைவரே, எதிர்க்கட்சிகளெல்லாம் தமிழக டி.ஜி.பியை மாற்றணும்னு சொன்னப்ப கம்முன்னு இருந்த முதலமைச்சர் எடப்பாடி, இப்ப தேர்தல் நேரத்தில், டி.ஜி.பியை தேர்தல் பணிகளுக்கு சம்பந்தமில்லாதவ ராக்கி, தேர்தல் பாதுகாப்புப் பிரிவின் டி.ஜி.பி.யா அசுதோஷ் சுக்லாவை நியமிச்சிருக்காரு.''’

""தேர்தல் பணிகளையும் சட்டம் ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரன்தானே இத்தனை நாள் கவனிச்சார். தேர்தலுக்கு ஒரு வாரம் இருந்த நேரத்தில் மாற்றம் செய்ததற்கு என்ன காரணம்?''’

r

""எடப்பாடி அரசின் கைப்பாவையா இருக்கும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாறுதல் செய்தால்தான், தமிழகத்தில் தேர்தல் ஒழுங்கா நடக்கும்ன்னு தி.மு.க. தலைமை, அண்மையில் தேர்தல் ஆணை யத்தில் மனு கொடுத்திருந்தது. அது குறிப்பிட்ட அந்த 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் டி.ஜி.பி. ராஜேந்திரனும் ஒருவர். தி,மு.க.வின் புகார் மனுவைப் பரிசீலித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம், இது குறித்துத் தமிழக அரசுடன் விவாதித்து முடிவெடுக்கும்படி தமிழகத் தேர்தல் அதிகாரியான சத்தியப்பிரதா சாகுவிற்குத் தகவல் அனுப்புச்சு. இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா, உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி ஆகியோரிடம் சாகு கலந்து பேசினார். அதன் அடிப்படையில் டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்யவேண்டும் என்ற ஆலோசனை யை முதல்வர் எடப் பாடியிடம் சொன்னார் சாகு. இதைக்கேட்டு ஷாக் கான எடப்பாடி, டி.ஜி.பி. ராஜேந்திரனை மாற்றாமல், அவரிடம் இருந்த தேர்தல் பாதுகாப்புப் பொறுப்பை மட்டும் தனியே பிரிச்சி, அதற்கு சிறைத்துறை டி.ஜி.பி. யாக இருந்த அசுதோஷ் சுக்லாவை நியமிச்சிருக்கார். இந்த அசுதோஷ் சுக்லாவும், ஆளுங் கட்சியின் மன நிலையை நல்லபடியா தெரிஞ்சு வச்சிருப்பவர்தான்னு ஐ.பி.எஸ்.தரப்பிலேயே டாக் அடிபடுது.''

Advertisment

""தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கே அரசாங்கம் தருகிற மரியாதை என்னன்னு தெரியுதுப்பா..''

""தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பொறுத்த வரை, ஒட்டுமொத்த காவல்துறையுமே ஆளுந்தரப்புக்கு சாதகமா தேர்தல் களத்தில் செயல்படுவதால் டி.ஜி.பி மட்டு மில்லாமல், உளவுத்துறை அதிகாரிகள், மண்டல அளவி லான உயரதிகாரிகள்னு பலரையும் மாற்றணும்னு வலி யுறுத்துது. தேர்தல் ஆணையமும் இது பற்றி மாநில அரசுக்கு சொல்லியிருப்பதால், அந்த அதிகாரிகள் மாற்றம் பற்றிய அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம்னு வியாழக் கிழமை நைட் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.''

""அதுவும் இதே பாணியிலான மாற்றம்தானா?''

Advertisment

""வல்லான் வகுத்ததே வாய்க்கால்ங்கிறதுதானே ஆட்சியாளர்களின் பாலிசி. அதிகாரிகளின் டிரான்ஸ்பர் விவகாரத்தை சமாளிச்ச எடப்பாடியால, அடிமட்டத்தில் உள்ள தொண்டர்கள், வாக்காளர்களின் எதிர்பார்ப்பை இன்னும் நிறைவேற்ற முடியலைங்கிறதுதான் கள நிலவரம். அ.தி.மு.க. தலைமையில் இருந்து வாக்காளர்களைக் கவனிப்பதற்கான கரன்ஸிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் போய்ச் சேர்ந்துடுச்சு. ஆனால் அதை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்ட கட்சியின் பொறுப்பாளர்கள், வாக்காளர்களுக்கு விநியோகிக்காமல் அமுக்கப் பார்க்கிறார்களாம். காரணம் கேட்டால், ஜெ., சசி பேரைச் சொல்லி பதவியில் உட்கார்ந்த எடப்பாடி ஓ.பி.எஸ். உள்ளிட்ட மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் இஷ்டத்துக்கும் சம்பாரிச்சிட்டாங்க. ஆனால் கீழே கட்சிக்காக வேலை பார்க்கும் நாங்கள் மட்டும் வெறும் விரலை சூப்பிக்கிட்டு திரியணுமா? இப்ப விட்டால், லம்பான பணத்தை நாங்க எப்பப் பார்க்கறதுன்னு பகிரங்கமாவே சொல்றாங்களாம். அதனால் கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்களுக்கு இன்னும் பணம் போகலை. அதுபோல வாக்காளர்களுக் கான பட்டுவாடாவும் எந்தளவுக்கு சரியா போகும்னு தெரியலை.''

""தேர்தல்னாலே பெரிய கட்சிகள்கிட்ட வாக்காளர்கள் எதிர்பார்ப்பாங்களே?''

r

""அவங்க வீட்டுப் பணத்தையா தர்றாங்க.. அடிச்சி வச்சிருக்கிறதைத்தானே தர்றாங்கன்னு சொல்லி எதிர்பார்ப்போடு இருக்கும் மக்களை ஆளுங்கட்சி எப்படி சமாளிக்கப் போகுதுன்னு தெரியலை. இன்னும் கவனிப்பு நடக்கலையேன்னு கட்சிக்காரங்ககிட்ட கேட்கத் தொடங் கிட்டாங்களாம். இதையறிந்த எடப்பாடி, லம்ப்பா அமுக்கிற நிர்வாகிகளை மீறி, எந்த வகையில் வாக்காளர்களுக்கு பணத்தை அனுப்புறதுன்னு குழம்பிப்போய் நிக்கிறார்.''’

""கோட்டைத் தரப்பு கடைசிக் கட்ட கல்லாக் கட்டலில் ஜரூரா இருக்குதாமே?''’

""தலைவரே. கோட்டையில் இருக் கும் அமைச்சர்களின் பி.ஏ.க்கள், பெரிய பெரிய காண்ட்ராக்டர்களையும் அதிகாரி களையும், ஏதாவது திரட்டிக் கொடுங்கன்னு நெருக்கடி கொடுக்கறாங்க. இதனால் காண்ட்ராக்டர்கள் புலம்பிக் கிட்டே, தங்களுக்குரிய டார்கெட்படி கொடுக்க வேண்டியதைக் கொடுக்கறாங்க. நெருக்கடிக்கு ஆளான அதிகாரிகளோ, மானாவாரியா டிரான்ஸ்பர் பட்டிய லைப் போட்டு வச்சிக்கிட்டு, இதைக் கேன்சல் செய்யணும்னா உரியமுறையில் கவனிங்கன்னு, அரசு அதிகாரிகளிடமே மெஹா கலெக்ஷனை நடத்திக்கிட்டு இருக் காங்க. இது கடைசி ரெண்டு மூன்று நாளில் வாக்காளர்கள் கைக்குப் போகும்னு எதிர்பார்க்கப்படுது.''’

""நடுத்தட்டு வாக்காளர்களை கவனிக்க ஆளும் தரப்பால் பலே பலே திட்டமெல்லாம் வகுக்கப்பட்டிருக்காமே?''’’

r

""உண்மைதாங்க தலைவரே, பிரபலமான ஜவுளிக் கடைகள், ஜுவல்லரிகள், மெஹா மால்கள், ஷாப்பிங் சென்டர்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் போன்றவற் றின் மூலம் கூப்பனை விநியோகிச்சி, அந்தக் கூப்பன்களுக்கு பணமா கொடுக்கப்போறாங்களாம். சில இடங்களில் ஸ்விகி, ஊபர் போன்ற நிறுவன ஊழியர்கள் மூலமும் பணப்பட்டுவாடா நடக்கப்போகுதாம். அதனால் நடுத்தட்டு மக்களின் ஆதரவு தங்க ளுக்குன்னு இலைத் தரப்பு அழுத்தமா நம்புது. இதேபோல் எதிர்த்தரப்பில் சிவ கங்கையில் கைச் சின்னத்தில் நிற்கும் ப.சி. மகன் கார்த்தி சிதம்பரம், தன்னை அதிகாரப்பூர்வ வேட் பாளராக கட்சி அறி விக்கும் முன்பே தொ குதியை ஒரு ரவுண்ட் கவனிச்சிட்டாராம். ஏற்கனவே அங்கே திணறித் திண்டாடுற பா.ஜ.க. எச்.ராஜாவுக்கு கார்த்தியின் திடீர் வேகம் பீதியை கிளப்பி யிருக்கு. பா.ஜ.க. பொன் னாரை எதிர்த்துப் போட்டியிடும் கன்னியா குமரியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரும் கூப்பன்களை விநியோகிச்சிருக்காராம்.''

பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கள் இன்னும் கஜானா வைத் திறக்க மாட்டேங் கறாங்கன்னு அவங்க தரப்பில் இருந்தே புகார் கள் வருதே.''’

r

""திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சியில் தி.மு.க. தரப்பு, தங்கள் தொடர்பான செலவுகளை எல்லாம் கே.என்.நேரு புண்ணியத்தில் தாராள மாவே கவனிச்சிக்கிது. இப்போதுவரை காஞ்சு போய் நிற்கிறது கைத்தரப்பு மட்டும்தான். கட்சிப் பிரமுகர்கள், வேட்பாளரான திருநாவுக்கரசரிடம் போய்த் தலையைச் சொறிந்தால், நானே கடன்ல இருக்கேம்ப்பா. டெல்லிப் பக்கம் இருந்தும் எதுவும் நமக்கு வந்துசேரலை. என்ன நடந்தாலும் சரி, உங்களை எல்லாம் உரிய நேரத்தில் கவனிப்பேன். கட்சி சீனியரான எனக்கு எலக்ஷனுக்குப் பிறகு முக்கியத்துவம் அதிகமா இருக்கும். புரியுதான்னு கெத்த விடாமப் பேசிப்பேசியே அவங்களை அனுப்பிவச்சிடறாராம். அவர் கூடவே இருக்கும் ஆட்களோ, அண்ணனுக்குத் தேர்தல் அனுபவம் ஜாஸ்தி. அவர் இதுவரை தேர்தல்களத்தில் ஏழெட்டு சின்னத்தில் போட்டியிட்டு ஜெயிச்சிருக்காரு. அவர் எப்பவுமே கடைசி மூன்று நாளில்தான் முழு வேகத்தைக் காட்டுவாருன்னு சொல்றாங்களாம்.''’

""தமிழக பா.ஜ.க. தரப்பிலும் பணப்பட்டு வாடாவில் தேக்கம்ன்னு சொல்றாங்களே?''’

""குமரியில் நிற்கும் பொன்னாரைத் தவிர தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய நான்கிலும் களமிறங்கிய பா.ஜ.க. வேட் பாளர்கள், ஏற்கனவே கொடுத்த உத்தரவாதப்படி அ.தி.மு.க. தேர்தல் செலவை ஏற்கும்ன்னு நம்பிக் கிட்டிருந்தாங்க. ஆனால் இலைத்தரப்பு, தலைமை கொடுத்த நிதியைத் தங்கள் தரப்புக்கு மட்டும் செலவிட்டுக்கிட்டு இருக்கு. இதனால் தாமரைத் தரப்பு கருகிச் சருகாகிவிட்டது. இது தொடர்பான புகார் அமித்ஷா காதுவரை போக, அவர் அ.தி.மு.க. அமைச்சரான தங்கமணியின் கவனத்துக்கு கொண்டு போய், எங்க தரப்பையும் கொஞ்சம் கவனிங்கன்னு கறார்க் குரலில் சொல்லியிருக்காராம். இதேபோல் பா.ம.க.வுக்கு அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் வேலை செய்யலையாம். பதிலுக்கு அ.தி.மு.க.,- தே.மு. தி.க.வுக்கு பா.ம.க.வும் வேலை செய்யலையாம். தி.மு.க. கூட்டணியிலும் ஆங்காங்கே இந்த மாதிரி உரசல்கள். இன்னமும் ஓயாத உள்ளடியால் இரண்டு கூட்டணியிலும் வில்லங்கம்தான்.''

""தினகரனின் அ.ம.மு.க. நிலவரம் என்ன?''

""அண்மையில் ஒரத்தநாட்டில் தினகரன் தரப்பை விட அதிகமா, அ.தி.மு.க. தரப்பில் வைட்டமின் ’ப’ வை இறைத் தும், தினகரனுக்குக் கூடிய கூட்டத்தைக் கூட்டமுடிய லையாம். அவருக்கு இன ரீதியிலான ஆதரவும் கிடைக்கு தாம். அதோட இலைச் சின்னம் களத்தில் இல்லாத தொகுதி களில், அங்குள்ள அ.தி.மு.க.வினரிடம் பேசி, அவர்களின் ஆதரவை தினகரன் டீம் தங்கள் பக்கம் திருப்புதாம். இதெல்லாம் எடப்பாடித் தரப்புக்கு கவலையை உண்டாக்கி யிருக்கு. அதே சமயம், 15 தொகுதியிலாவது இரண்டாவது இடத்தில் இருப்போம்ன்னு தினகரன் தரப்பு மார்தட்டுது.''

""ஓ..''…’’

""இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு கடுமையான எதிரின்னு தினகரனைக் கருதிவந்த சிறுபான்மைத் தரப்பினர், பா.ஜ.க. கருப்பு முருகானந்தனோடு தினகரன் டீலிங் பேசியதை அறிந்து அதிர்ந்து போயிருக்காங்க. பா.ஜ.க. சார்பில் குமரியில் நிற்கும் பொன்னாருக்கு எதிரா, பலமான வாக்காளரை நிறுத்தாதீங்கன்னு பா.ஜ.க. என்னிடம் தூது வந்ததுன்னு தினகரன் பேட்டி கொடுத்ததால, பா.ஜ.க.வின் தயவை எதிர் பார்த்துத்தான் என்னை சந்தித்தார் தினகரன்னு பா.ஜ.க. கருப்பு முருகானந்தம் அதிரடி கிளப்பிட்டார். இதனால் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் நிரந்தர எதிரி தினகரன்தான்னு அவரை நம்பியவங்க இப்ப குழப்பத்தில் இருக்காங்க.''’

""ம்.. மற்ற ஏரியாக்களில் என்ன நடக்குது?''

d

""மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சிலர், நான்கு நாட்களுக்கு முன்பு அவரைப் பார்த்து, தேர்தல் களம் பரபரப்பா இருக்கிறப்ப நாங்க மட்டும் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கிறது, பயங்கரமா வெறுப்படிக்குதுண் ணேன்னு சொல்லியிருக்காங்க. அழகிரியோ, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியெல்லாம் சரியா எடுபடலைப்பா. திரும்பத் திரும்ப பழைய ஆளுங்களுக்கே சீட்டைக் கொடுத்து போரடிக்கிறாங்க. உங்க மனம்போன போக்கில் யாருக்கு வேணும்ன்னாலும் ஓட்டுப்போடுங்க. நான் வேற எதுவும் சொல்லலைன்னு சொல்லியிருக்காராம்.''’’

""அதான் சொல்லிட்டாரே!''’’

""காங்கிரசில் சீட் கிடைக்காத கோபத்தில் இருந்த குஷ்புவோ, தேர்தல் களத்தில் தலை காட்டாமல் இருந்தார். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனின் அழைப்பில் அவருக்காக தேனியில் ஓ.பி.எஸ். மகனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார் குஷ்பு. அவர் போன இடங்களில் எல்லாம் கூட்டமான கூட்டம் திரண்டது. மக்களின் உற்சாக ஆரவாரத்தால் பல இடங்களில் அவரால் பேசவே முடியலையாம். இதைப் பார்த்து இலைத்தரப்பு டென்ஷனாக, அமைச் சர் செல்லூர் ராஜுவோ, தெக்கத்திப் பக்கம் யார் வந்தாலும் பார்க்குறதுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும். குஷ்புவுக்கு வயசாயிட்டதால கூட்ட மெல்லாம் ஓட்டாக மாறாதுன்னு சொல்லிட்டாரு.''

""கிளைமாக்ஸ் நேரத் தேர்தல் களம் கொதியாக் கொதிக்கிது. இந்த நேரத்தில் நானும் ஒரு ஹாட் நியூஸை உன்கிட்ட பகிர்ந்துக்கறேன். ஏற்கனவே அ.ம.மு.க. வெற்றிவேல், அ.தி.மு.க. மாண்புமிகுவின் விவகாரமான ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனா, அ.ம.மு.க. பெரியகுளம் வேட்பாளர் பற்றி வில்லங்க வீடியோ வெளியாகி வைரலானதால், அந்தக் கட்சிக்கு பெரியளவில் இமேஜ் டேமேஜ் ஆகியிருக்கு. இந்த நிலையில், அ.ம.மு.க. சைடிலிருந்து மாண்புமிகு மற்றும் அவரைச் சேர்ந்தவர்களை மையப் படுத்தி அதிரடி வீடியோவை வெளியிட ப்ளான் பண்ணுதாம். தேர்தல் நேரத்தில் பகீர் கிளப்புற பாலியல் வீடியோக் களால் பல அரசியல் தலைகள் நடுக்கத்தில் இருக்குது.''