Skip to main content

ஒரு கொலை விளையாடல்! -நாகை அ.தி.மு.க.வில் திருவிளையாடல்!

.தி.மு.க.வில் எந்தவொரு பெரிய பொறுப்பிலும் இல்லாமலேயே மூன்று அமைச்சர்கள், நாகை மாவட்டத்தின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சகலத்தையும் செய்து கொடுத்து, தனி ராஜ்ஜியம் நடத்தியவர் ரமேஷ்பாபு என்கிற மணல் பாபு. கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி சீர்காழி கடைவீதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார் ரமேஷ் பாபு. அந்தக் கொலை வழக்கில் கொள்ளிடம் அ.தி.மு.க. மாஜி ஒ.செ.ஜெயராமன், ம.தி.மு.க. மாநில மாணவரணி து.செ. மார்கோனி உட்பட கூலிப்படையினரையும் கைது செய்தது காவல்துறை.

rameshbabuகைது செய்யப்பட்ட இவர்கள் தவிர, இந்தக் கொலையில் அ.தி.மு.க. பெரும்புள்ளிகள் சிலரின் திருவிளையாடல்களும் ரமேஷ்பாபு கொலைக்குப் பின் நாகை மாவட்ட அ.தி.மு.க.வுக்குள் நடக்கும் சடுகுடு ஆட்டமும் கண்ணைக்கட்டும் ரகம். இது குறித்து மாவட்ட சீனியர் ர.ர. ஒருவர் நம்மிடம் பேசியபோது, “""இருபது வருஷத்துக்கு முன்னால அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட ரமேஷ் பாபுவின் ஆரம்பகால நண்பர்தான் மார்கோனி. திடீர்னு ரெண்டு பேருக்கும் இடையில முட்டிக்கிச்சு.

அமைச்சர் வேலுமணியுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் மணல் கடத்தல், ரியல் எஸ்டேட் என செம ஸ்பீடாக டெவலப் ஆனார் ரமேஷ்பாபு. தனது சம்பாத்தியத்தில் சரிபாதியை வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள். அமைச்சர்கள் ஆகியோருக்கு செலவிட்டதால் பாபுவிற்கு எந்த தடங்கலும் இல்லை. அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆசியால் சீர்காழி தாலுகாவில் கட்சியினர் அனைவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக மாவட்டம் முழுவதும் தனது எல்லையை விரிவுபடுத்தினார்.
minister
பாபுவின் தாராள கரன்சி பாய்ச்சலால், கொள்ளிடம் ஒ.செ. ஜெயராமனின் கூடாரம் காலியானதுடன், அவரிடம் இருந்த மணல் பிஸ்னஸ், அரசாங்க டெண்டர்கள் மொத்தமும் பாபுவின் கைக்கு மாறியதுடன், அமைச்சர் மணியனிடம் இருந்த செல்வாக்கும் பறிபோனது. ரமேஷ்பாபு கொலை செய்யப்படுவதற்கு கொஞ்ச நாள் முன்பு கூட கொள்ளிடம் ஆற்றில் மணல் ஷிப்டிங் காண்ட்ராக்டை ஜெயராமனுக்கு கொடுக்குமாறு பூம்புகார் எம்.எல்.ஏ.பவுன்ராஜ் ரெகமெண்ட் செய்தும் பாபு மசியவில்லை.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குப் போனார் ஜெயராமன். பாபு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சேர்மன் மீனாவின் மருமகன் குலோத்துங்கனை பாபுவிடம் வேலைக்குச் சேர்த்து வேவு பார்க்க ஆரம்பித்தார் ஜெயராமன். ஏற்கனவே வெளியேறிய மார்கோனியும் கை கோர்க்க, எங்க கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் தம்பி பணம் சப்ளை செய்ய, பாபுவின் கதையை முடித்துவிட்டார்கள். இதெல்லாமே சிறையில் இருக்கும் கூலிப்படையினர் போலீசில் கொடுத்த வாக்குமூலம்''’என்றார்.

கொலைக்குப் பணம் சப்ளை செய்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வின் தம்பியை டி.ஐ.ஜி. லோகநாதனின் உத்தரவின் பேரில் தூக்கி வந்து தங்களது பாணியில் விசாரித்துக் கொண்டிருந்த தகவல் கிடைத்து விக்கித்துப் போனார் எம்.எல்.ஏ. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், டி.ஐ.ஜி.லோகநாதன், நாகை எஸ்.பி. ஆகியோரிடம் கெஞ்சிப் பார்த்தும் பலனில்லாததால், நேரடியாக எடப்பாடியிடமே சரண்டராகிவிட்டார் அந்த எம்.எல்.ஏ. அதன்பின் எம்.எல்.ஏ.வின் தம்பியை விட்டிருக்கிறார்கள்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த மற்றொரு ர.ர. நம்மைத் தொடர்பு கொண்டார். “பாபு கொலைக்கு பகை மட்டும் rameshbabuகாரணமல்ல, பெண் தொடர்பும் இருக்கு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சில கோடிகளில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை வாங்கினார் பாபு. சூப்பர் மார்க்கெட் பிஸ்னஸ் சம்பந்தமாக அமைச்சர் ஒருவரின் மகளுடன் பாபுவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கத்தால் நெருப்பான அமைச்சர் பாபுவை பல முறை எச்சரித்தும் பலனில்லை. அதனால்... மிச்சத்தை நீங்களே யோசிச்சுக்கங்க. இப்போது அந்த சூப்பர் மார்க்கெட் அமைச்சரின் ஆளுகைக்குள் போய்விட்டது. ஆட்சி மாறினால் அமைச்சர் முன்னாள் அமைச்சராகி கம்பி எண்ணலாம்''’என பகீர் தகவல் ஒன்றைச் சொல்லி கிறுகிறுக்க வைத்தார்.

ரமேஷ் பாபுவின் கொலை வழக்கு பல தினுசாக போய்க் கொண்டிருக்க, நாகை மாவட்ட அ.தி.மு.க.வும் ஒரு தினுசாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. பாபுவின் கொலைக்குப் பின் கட்சியினர் பலபேரை பந்தாடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். கொள்ளிடம் ஒ.செ.ஜெயராமனைத் தூக்கிவிட்டு, சிதம்பரத்தில் இருக்கும் நற்குணத்தை ஒ.செ.வாக்கினார் மணியன். நற்குணத்தை மட்டம்தட்ட சக்தியை எம்.எல்.ஏ.வாக்கினார். மேற்கண்ட இருவரையும் ஓரங்கட்ட பாபுவை வளர்த்தார்.

பாபு இருக்கும் வரை அமைச்சர் மணியன் உட்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சைலண்ட் மோடிலேயே இருந்தனர். இப்போது எல்லாமே தலைகீழாகிவிட்டது. அமைச்சர் மணியன் கோஷ்டி, முன்னாள் அமைச்சர் ஜெயபால் கோஷ்டி, எம்.எல்.ஏ.பவுன்ராஜ் கோஷ்டி என மூன்று கோஷ்டிகளால் களை கட்டுகிறது நாகை மாவட்ட அ.தி.மு.க.

-க.செல்வகுமார்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்