கட்டாய கல்வி உரிமை சட்ட நிதியை வழங்கு; மாணவர் அமைப்பு போராட்டம்!
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும், RTE மாணவர் சேர்க்கையை மாநில அரசு நடத்த வேண்டும், RTE ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும், தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் SFI போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஏங்கெல்ஸ், மாவட்ட தலைவர் சுபாஷ், இணைச் செயலாளர் அருண், துணைத் தலைவர்.செந்தமிழ் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.