Advertisment

பலி ஆடுகளான அதிகாரிகள்! -தொடரும் தூத்துக்குடி டென்ஷன்!

chandran

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து டென்ஷனைத் தணிக்க வேண்டும் என்று தமிழக அரசு முனைப்பு காட்டியபோது, "ஏழு பேர் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்ட்டம்! மீதி ஆறு பேர் உடலை மறு உத்தரவு வரும் வரை போஸ்ட் மார்ட்டம் செய்யக்கூடாது'’ என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துவிட, தூத்துக்குடி யில் டென்ஷனோ டென்ஷன்.

Advertisment

chandranஇறந்தவர்களில் மீனவ வகுப்பினர் மூவர், நாடார் சமுதாயத்தவர் நால்வர், பிள்ளைமார் சமூகத்தில் இருவர், நாயக்கர் ஒருவர், ஆதிதிரா விடர் இருவர், அருந்ததியர் ஒருவர், புரட்சிகர முன்னணி யைச் சேர்ந்த ஒருவர் என, பல சமுதாயத்தினரும் உறவு களை இழந்து தவித்து வரும் நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்ற 6 பேர் நிலை சீரியஸாக உள்ளது. இறந்தோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்போது, மக்களின் போராட்டம் எல்லை தாண்டும் என்கிற பீதி நிலவுகிறது.

Advertisment

வேம்பாரிலிருந்து ஆலந் தழை வரையிலும் உள்ள 20 கிராமங்களின் மீனவ நிர்வாகிகள் ஒன்றிணைந்து திருச்செந்தூர் ஜீவா நகரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பில் இறந்த அனைவரின் உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்து, அங்கு மண்டபம் எழுப்பி, ஆண்டு தோறும் நினைவு தினம் அனுஷ் டிப்பதற்கு உறுதி மொழி தர வேண் டும். கலவரத்தின் போது பணியி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து டென்ஷனைத் தணிக்க வேண்டும் என்று தமிழக அரசு முனைப்பு காட்டியபோது, "ஏழு பேர் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்ட்டம்! மீதி ஆறு பேர் உடலை மறு உத்தரவு வரும் வரை போஸ்ட் மார்ட்டம் செய்யக்கூடாது'’ என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துவிட, தூத்துக்குடி யில் டென்ஷனோ டென்ஷன்.

Advertisment

chandranஇறந்தவர்களில் மீனவ வகுப்பினர் மூவர், நாடார் சமுதாயத்தவர் நால்வர், பிள்ளைமார் சமூகத்தில் இருவர், நாயக்கர் ஒருவர், ஆதிதிரா விடர் இருவர், அருந்ததியர் ஒருவர், புரட்சிகர முன்னணி யைச் சேர்ந்த ஒருவர் என, பல சமுதாயத்தினரும் உறவு களை இழந்து தவித்து வரும் நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்ற 6 பேர் நிலை சீரியஸாக உள்ளது. இறந்தோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்போது, மக்களின் போராட்டம் எல்லை தாண்டும் என்கிற பீதி நிலவுகிறது.

Advertisment

வேம்பாரிலிருந்து ஆலந் தழை வரையிலும் உள்ள 20 கிராமங்களின் மீனவ நிர்வாகிகள் ஒன்றிணைந்து திருச்செந்தூர் ஜீவா நகரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பில் இறந்த அனைவரின் உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்து, அங்கு மண்டபம் எழுப்பி, ஆண்டு தோறும் நினைவு தினம் அனுஷ் டிப்பதற்கு உறுதி மொழி தர வேண் டும். கலவரத்தின் போது பணியில் இருந்த அனைத்து காவல்துறை யினரையும் கமிஷன் அமைத்து விசாரணை நடத்திட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள், மீண்டும் ஒரு போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறார்களோ என்ற சந்தேகத்தை காவல்துறை யினருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

13 உடல்களுக்கும் தாசில் தார் 13 பேரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு உடலுக்கும் டிரைவர்கள் இருவரைக் கொண்ட தனித்தனி வாகனம், அந்த வாகனத்தின் பாதுகாப்புக்கு குறிப்பிட்ட காவல்நிலைய போலீசார் என உடல் ஒப்படைப்பு பணி நடை பெற்றது. மாசிலாமணிபுரம் சண்முகத்தின் உடலைக் கொண்டு செல்வதற்கான வாகனத்தின் எண் பச 25 ஏ 0580 என்றும் 1510 எண் கொண்ட போலீஸ் டிரைவர் பிரபு எனவும், அந்த வாகன பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது தூத்துக்குடி தென்பாக காவல் துறையினர் என்றும் குறிப்பெழுதி வைத்திருந்தனர். இதே நடை முறையைத்தான், ஒவ்வொரு உடலைக் கொண்டு செல்லும் போதும் பின்பற்றினர்.

"துப்பாக்கிச் சூடு நடத்த நாங்கள்தான் உத்தரவிட்டோம்' என, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் ஒப்புதல் அளித்திருக்கும் தனித்துணை வட்டாட்சியர் சேகர், துணை வட் டாட்சியர் கண்ணன், கோட்ட கலால் அலுவலர் சந்திரன் ஆகியோர் பலியாடுகள் ஆக்கப் பட்டிருக்கின்றனர் என்று ‘"உச்'’ கொட்டுகிறார்கள் வருவாய்த்துறையினர். ""23-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு, கோட்ட கலால் அலுவலர் சந்திரன் உத்தரவிட்டதாக, தெற்கு காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய் திருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், துப்பாக்கிச் சூடு நடத்த இவர்கள் உத்தர விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இடங்களும், இந்த மூவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பகுதிகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில் லாதவை.

இன்னொரு கூத்தும் நடந் திருக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திட, சிப்காட் இன்ஸ் பெக்டர் ஹரிஹரனுக்கு துணை வட்டாட்சியர் சேகர் உத்தர விட்டதாக முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.

நடந்தது என்னவென்றால், மக்களின் கோபம் சிப்காட் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மீது இருப்பதால், அவரை மடத் தூர் பகுதி பந்தோபஸ்துக்கு அனுப்பியிருந்தார்கள். அவருக் குப் பதிலாக இன்ஸ்பெக்டர் பார்த்திபனை நியமித்திருந்தனர்.

எந்த நேரத்திலும் தங்களுக்கு எதுவும் நிகழலாம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் அந்த மூன்று அதிகாரிகளின் குடும்பத் தினர்'' எனச் சொல்லும் வரு வாய்த்துறையினர், அந்த குடும்பத்தினர் குறித்த தகவல்கள் லீக் ஆகிவிடாமல் பாதுகாத்து வருகிறார்கள். மூவரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது எடப்பாடி அரசு. அது எந்தெந்த இடங்கள் என்பதையும் ரகசிய மாக வைத்திருக்கின்றனர்.

-சி.என்.இராமகிருஷ்ணன், நாகேந்திரன், பரமசிவன்

ஸ்டெர்லைட் வந்த பின்னணி!

1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் தொடங்க அனுமதி கோரி வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அப்போது அட்வகேட் ஜெனரலாக இருந்த கே.சுப்ரமண்யம் இந்தத் தொழிற்சாலை குறித்து சாதக பாதகங்களை விலாவாரியாக ஜெயலலிதாவிடம் எடுத்துக்கூறினார். ஆனால், அப்போது ஜெயலலிதாவோடு இருந்த சசிகலா குடும்பத்தினர், ஸ்டெர்லைட் வருவதால் கிடைக்கும் லாபத்தை ஜெ.விடம் கூறினர். இதன்பின், கே.சுப்ரமணியத்தை மாற்றிவிட்டு, ராமசாமி உடையார் சம்பந்தியான கிருஷ்ணமூர்த்தியை அட்வகேட் ஜெனரலாக நியமித்தது. அவர் மூலமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அடிக்கல்லும் நாட்டினார் ஜெ. இந்தக் கிருஷ்ணமூர்த்திதான் ஜெ.-சசிக்கு கொடநாடு எஸ்டேட்டை வாங்குவதற்கு உதவியாக இருந்தவர். ஸ்டெர்லைட்டை ஜெ.வும் மூடியிருக்கிறார். அப்போது கோர்ட்டுக்குச் சென்று திறந்ததுபோல, எடப்பாடி வைத்த சீலையும் அகற்ற கோர்ட்டை நம்புகிறது வேதாந்தா நிறுவனம்.

-சோழன்

பரோல் கைதி சிறையில் மரணம்!

barathதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு 13 பேர் பலியான கொடூரம் ஒருபுறம் என்றால், போலீசின் வெறித்தனமான அடியால் இன்னொருவர் பலியான துயரமும் நடந்துள்ளது. தூத்துக்குடி மறவன்மடம் திரவியபுரத்தைச் சேர்ந்த பாரத் என்பவர், ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 13 ஆண்டுகளாக பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார். நெருங்கிய உறவினர்கள் வீட்டு சுக, துக்க விழாவுக்காக பரோலில் வந்து செல்வார் பாரத். அந்த வகையில்தான் கடந்த 20-ஆம் தேதி நடந்த ஒரு திருமண விழாவிற்காக, 17-ஆம் தேதி பரோலில் வந்துள்ளார் பாரத். அதன்பின் நடந்ததை விவரிக்கிறார் பாரத்தின் அண்ணன் மகனான செல்வசுந்தர். ""துப்பாக்கிச்சூடு நடந்த மறுநாள் நானும் எனது சித்தப்பா பாரத்தும் அண்ணா நகரில் உள்ள சொந்தக்காரரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த போலீஸ் படை, எந்த விசாரணையும் இல்லாமல் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தது. தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டுப் போய் உருட்டுக் கட்டையால் தாக்கினார்கள். அதன்பின் தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண் 2-ல் ஆஜர்படுத்தினார்கள். எனக்கு சொந்த ஜாமீன் கிடைத்தது. அவர் பரோல் கைதி என்பதால் பாளை. சிறைக்கு கொண்டு போய்விட்டார்கள். 29-ஆம் தேதி ஜெயிலில் அவரைப் பார்த்தப்ப, அடிபட்ட வேதனையால் துடித்தவர், "சரியான சிகிச்சையும் கிடைக்கல' என புலம்பினார். ஆனால் அன்றைக்கு ராத்திரி தூக்குப்போட்டுச் செத்துட்டதா போலீஸ் சொல்லுது''’என்றார். “""பாரத்தின் சாவு குறித்தும் முறையாக விசாரிக்க வேண்டும்''’என்கிறார் வக்கீல் அதிசயகுமார்.

இதனிடையே கடந்த 25-ஆம் தேதி, கருங்குளம் அருகே, துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. அப்போது பேருந்தில் பயணித்த திருவைகுண்டம் - மெய்ஞானபுரத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் பலத்த காயங்களுடன், பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல், 31-5-2018 அன்று அவர் இறந்துபோனார்.

-நாகேந்திரன்

nkn05.06.18
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe