ரசியல் அரங்கில் ம.தி.மு.க.வின் பாதை தனித் துவமானது. தமிழகத்தின் முகமாக டெல்லியைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் வைகோ. அவரது மகன் துரை வைகோ ம.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாள ராகியுள்ள நிலையில், நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி:-

Advertisment

நேரடி அரசியல் செயல்பாடு களையும் புதிய பொறுப்பையும் முன்பே எதிர்பார்த்திருந்தீர்களா?

கட்சி நிர்வாகிகளுடன் 94ல் இருந்தே தொடர்பு இருந்தது. தேர்தல் நேரங்களில் ஒரு தொண்டனாக பணியாற்றி யிருக்கிறேன். தலைவருடன் நடைபயணம் சென்றிருக்கிறேன். ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்கள் தாயகத்தை கைப்பற்றப் போகிறார்கள் என்ற பதட்டமான சூழ்நிலை ஒருமுறை வந்தபோது தாயகம் சென்றேன். நீ ஏம்ப்பா இங்க வந்தீங்கன்னு தலைவர் மற்றும் சிலர் கேட்டார்கள். அப்ப நான், அப்படி வன்முறையானால் சிந்தக்கூடிய முதல் ரத்தம் துரை வையாபுரி ரத்தமாக இருக்கட்டும் என்றேன். கடந்த 3 வருடங்களாக மாநில நிர்வாகிகளுடன் அதிக தொடர்பில் இருந்தேன். தலைவர் மருத்துவம் எடுத்து வருகிறார் என்பதால் கூடவே இருக்கக்கூடிய சூழ்நிலை வந்தது.

duraivaiko

Advertisment

பெரியாரும் பெருமாளும் ஒன்றுதான் எனச் சொல்லியிருந்தீர்கள். வாக்கு அரசியலுக்காக இப்படி சொல்கிறார் என்ற விமர்சனம் வருகிறதே?

பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையா ருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம் என்றார் அண்ணா. எங்க தலைவர், திருக்கோவில்களில் ஆறுகால பூஜைகள் நடக்கட்டும். ஆலயங்களில் ஜெபக் கூட்டம் நடக்கட்டும். மசூதிகளில் தொழுகைகள் நடக்கட்டும், பகுத்தறிவு பிரச்சாரங்களும் நடக்கட்டும் என்றார். பெரியார் இல்லை என்றால் சமூக நீதி இல்லை. கோவில்களுக்கு உள்ளே போகிற கேட் பாஸ் அவர்தான் வாங்கிக் கொடுத்தார். திராவிட இயக்கங்கள் இந்துக்களுக்கு எதிரி என்ற தவறான பிரச்சாரத்தை மதவாத சக்திகள் இன்று செய்கின்றன. கடவுளுக்கு எதிரி என்று சொல்லும்போதுதான் பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்றேன். நான் இறை நம்பிக்கை உள்ளவன் என்பதால் மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த நினைத்தேன்.

தலைமை நிலையச் செயலாளர் பணிகள் என்ன?

உண்மையை சொல்கிறேன். அது குறித்த விவரங்களை கேட்டுள்ளேன். பொதுவாக, நிர்வாகிகளுடன் சேர்ந்து மேற் கொள்ள வேண்டிய செயல்பாடு.

அரசியல் பயணத்திற்கு உங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள் என்ன சொன்னார்கள்?

Advertisment

தலைவரின் இத்தனை வருட அரசியல் போராட்ட வாழ்வினால், எங்க அம்மாவுக்கு நிம்மதி கிடையாது. அதனால, "நிறைய காயப்படுவ, உன் ஹெல்த் போயிடும்'னு சொன்னாங்க. என் மனைவி எதற்கு இதெல்லாம் என்று சொல்லி நிறுத்திட்டாங்க. என் பொண்ணு கடுமையாக எதிர்த்தாள். இலங்கை அரசு செய்த சில சதித் திட்டத்தால் தலைவர் வெளிநாடு செல்ல முடியவில்லை. இதனால் மகள், பேத்திகளை அவரால் பார்க்க முடியவில்லை. இதையெல்லாம் சொல்லி, தாத்தாபோல் உங்க ளுக்கும் பிரச்சனையாகிவிடக் கூடாது என்று வற்புறுத்தினாள். கடந்த இரண்டு வருடம் ரொம்ப பயணித்துவிட் டேன். மிகப்பெரிய அன்பை இயக்கத் தோழர்களிடம் பார்த் தேன் என்று சொல்லி அனை வரையும் சமாதானப்படுத்தினேன். இயக்க தோழர்கள் வலியுறுத்தி யும், தலைவர் என்னை வேண் டாம் என்று சொல்லிவிட்டால் நல்லவேளை எஸ்கேப் ஆகி விடலாம் என்றுகூட நினைத்தேன். ரகசிய ஒட்டெடுப்பு நடத்தி ஆதரவு இருந்ததால் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

durai=vaiko

கட்சியை வளர்க்க என்ன மாதிரியான திட்டம் வைத்துள்ளீர்கள்?

வைகோதான் ம.தி.மு.க.வின் பிராண்ட். நிறைய சாதித்துள்ளார். இன்றுபோல் அன்று சோசியல் மீடியாக்கள் இல்லை. அதனால் அவரது பேச்சுக்களை சாதனைகளை மக்களிடம் போய் சேர்க்க வேண்டும். இளைஞர்கள் கட்சியில் இருக்கிறார்கள். பேச்சாற்றல் உள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும், அதே நேரத்தில் செயல்திட்டத்தில் கவனம் செலுத்துகிறோம். உதாரணத்திற்கு, குருவிகுளம் யூனியனில் வெற்றி பெற்றுள்ளோம். பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டில் ஒரு ரோல் மாடல் யூனியனாக உருவாக்குவேன் என்று சொல்லியிருக்கிறேன். அதை நிறைவேற்றுவேன். மேடையில் பேசுவதைவிட இதுபோன்ற செயல்களில் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

7 பேர் விடுதலை போராட்டத்தில் வைகோவின் பங்கு பெரியது. ராம்ஜெத்மலானியை அழைத்து வந்து ஐகோர்ட்டில் வாதாட வைத்தார். அந்த விஷயத்தில் தற்போது ம.தி.மு.க.வின் முயற்சி எப்படி உள்ளது?

7 பேர் விடுதலை போராட்டத்தில் பிள்ளையார் சுழி போட்டதே தலைவர் வைகோதான். எங்க தலைவர் டெல்லி சென்று ஜெத்மலானியிடம் பேசி அழைத்து வந்தார். 7 பேர் விடுதலைக்கான முயற்சிகள் தொடரும்.

அப்பாவிடம் எதை கடைப்பிடிக்கலாம். எதை கடைப் பிடிக்கக்கூடாது என நினைத்து வைத்திருக்கிறீர்கள்?

தலைவரின் இலக்கியநயமான பேச்சாற்றல் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அவர் வைகோ, நான் துரை வைகோ. உழைப்பு, விடாமுயற்சிக்கு நான் தயாராக இருக்கிறேன். உழைப்பு, பேச்சாற்றல், நாணயம் இதைத் தவிர தலைவரிடம் வேறொன்றும் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு இயக்கத்தை வளர்த்திருக்கிறார். கடைப் பிடிக்கக்கூடாது என்று சொன்னால் குறை சொல்கிற மாதிரி ஆகிவிடும். நான் எப்படி சொல்ல முடியும். எந்த முடிவானாலும் ஸ்ரீர்ப்ப்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் க்ங்ஸ்ரீண்ள்ண்ர்ய் ம்ஹந்ண்ய்ஞ் கூட்டாக முடிவு எடுக்கணும். கட்சி நிர்வாகிகள், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் முடிவு எடுக்கணும் என்று நினைக்கிறேன்.

-சந்திப்பு: வே.ராஜவேல்

படம்: ஸ்டாலின்