(77) ஒரு கோட்டையின் வரலாறு
அது எனக்கு ஓர் அபூர்வமான தகவலாக இருந்தது. எத்தனையோ கோட்டைகளைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் ஆகியோர்களின் கிளர்ச்சிக்குப் பின்னர், தென் தமிழ்நாட்டின் கோட்டைகள் அனைத்தும், தரைமட்டமாக்கப்பட்டன. கோட்டைகளைப் பார்த்து பெரிதும் அச்சம் கொண்டிருந்தனர் பிரிட்டிஷ்காரர்கள். கோட் டைகள் இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்கப் பார்த்தனர். இதில் ஒரு கோட்டை மட்டும் அண்மைக் காலம்வரை உயிர் வாழ்ந்திருக்கிறது. இந்த கோட்டைக்கும் தலைவர் நல்லகண்ணுவுக்கும் மிக நெருக்கமான தொடர்பிருந்தது. இவரது போராட்டங்களில் ஒன்று இந்த கோட்டையை மையம்கொண்டிருந்தது.
இந்தக் கோட்டையின் வரலாறு என்ன என்பதை வாசிப்பின் மூலம் தேடிப் பார்க்கிறேன். இதன் வரலாறு வேறு சில, சமகால வரலாற்றை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. இனக்குழுக்கள், சிற்றரசுகளைப் போல் தனி எல்லை வகுத்துக்கொண்ட காலம் ஒன்றிருந்தது. தங்கள் தூய்மையைப் பாதுகாக்க இவ்வாறான நட வடிக்கைகளை எல்லாம் எடுத்துள்ளனர். தங்கள் இனக்குழுக்கள் மற்ற இனக்குழுக்களுடன் மண உறவு கொண்டுவிடக்கூடாது என்ற உணர்வில் இருந்தனர். இவ்வாறான பல சமூகங்கள் நம் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் கோட்டைப் பிள்ளைமார் என்று ஒரு சமூகத்தினர். நற்குடி வேளாளர் வரலாறு என்னும் நூல் இதற்கான ஆதாரமாகக் கூறப்படுகிறது. ம
(77) ஒரு கோட்டையின் வரலாறு
அது எனக்கு ஓர் அபூர்வமான தகவலாக இருந்தது. எத்தனையோ கோட்டைகளைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் ஆகியோர்களின் கிளர்ச்சிக்குப் பின்னர், தென் தமிழ்நாட்டின் கோட்டைகள் அனைத்தும், தரைமட்டமாக்கப்பட்டன. கோட்டைகளைப் பார்த்து பெரிதும் அச்சம் கொண்டிருந்தனர் பிரிட்டிஷ்காரர்கள். கோட் டைகள் இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்கப் பார்த்தனர். இதில் ஒரு கோட்டை மட்டும் அண்மைக் காலம்வரை உயிர் வாழ்ந்திருக்கிறது. இந்த கோட்டைக்கும் தலைவர் நல்லகண்ணுவுக்கும் மிக நெருக்கமான தொடர்பிருந்தது. இவரது போராட்டங்களில் ஒன்று இந்த கோட்டையை மையம்கொண்டிருந்தது.
இந்தக் கோட்டையின் வரலாறு என்ன என்பதை வாசிப்பின் மூலம் தேடிப் பார்க்கிறேன். இதன் வரலாறு வேறு சில, சமகால வரலாற்றை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. இனக்குழுக்கள், சிற்றரசுகளைப் போல் தனி எல்லை வகுத்துக்கொண்ட காலம் ஒன்றிருந்தது. தங்கள் தூய்மையைப் பாதுகாக்க இவ்வாறான நட வடிக்கைகளை எல்லாம் எடுத்துள்ளனர். தங்கள் இனக்குழுக்கள் மற்ற இனக்குழுக்களுடன் மண உறவு கொண்டுவிடக்கூடாது என்ற உணர்வில் இருந்தனர். இவ்வாறான பல சமூகங்கள் நம் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் கோட்டைப் பிள்ளைமார் என்று ஒரு சமூகத்தினர். நற்குடி வேளாளர் வரலாறு என்னும் நூல் இதற்கான ஆதாரமாகக் கூறப்படுகிறது. மாங்குளம் கல்வெட்டு கூறும் ஆதாரங்களை சிலர் இதோடு ஒப்பிட்டுச் சொல்லுகிறார்கள். நற்குடி பிள்ளைமார் வரலாறு என்னும் நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. இதனை மேற்கோள் காட்டிய சில நூல்கள் வந்துள்ளன.
இந்தக் கோட்டை, பழைய கோட்டைகளைப் போல அல்லாமல் அண்மைக் காலம்வரை உயிருடன் இருந்தது. 1979ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம், அந்த கோட்டையின் எதிர்காலத் தையே மாற்றியமைத்துவிட்டது. இதன்பின்னர், அந்தக் கோட்டையின் இருண்ட காலம் ஆரம்பமானது. ஒரு கொலையோடு அதன் இருண்ட காலம் ஆரம்பமானது.
இந்தக் கோட்டையின் அதிகாரத்தை கையில் வைத்திருந்த சண்முகசுந்தர ராஜா என்பவர் இந்த ஆண்டில் கொலை செய்யப்பட் டார். அந்தக் கொலை பற்றிய விசாரணையில், அதுவரை அங்கிருந்த கட்டுக்கோப்புகள் முற்றாகத் தகர்ந்துபோயின. மேலதிக தகவல்களைத் தேடியபோது, அந்த கோட்டை பற்றிய பல விபரங்களை அறிந்துகொள்வது எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது.
சென்ற நூற்றாண்டின் இறுதிவரையில் இடிக்கப்படாமல் இருந்த கோட்டைப் பிள்ளைமார் கோட்டை மண்ணால் அமைக்கப்பட்டிருந்தது. தேர்ந்த செம்மண்ணை பதநீர் ஊற்றி பதப்படுத்தி அதில் கோட்டையை அமைத்ததாகக் கூறுகிறார்கள். கோட்டை வலுவுள்ளதாகவே இருந்திருக்கிறது. கோட்டையின் வலுவை விட, கோட்டையின் விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக அமைந்திருந்தன. இப்பகுதியிலிருந்து ஆண்கள் மட்டுமே இக்கோட்டைச் சுவர்களைத் தாண்டி வெளியில் வந்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்களாம். பெண்கள் இந்தக் கோட்டைச் சுவரைத் தாண்டி எக் காரணத்தைக் கொண்டும் வெளியே வருவதில்லை
வெளியிலுள்ள ஆண்கள் யாரும் கோட்டைக்குள் செல்ல அனுமதி இல்லை. ஐந்து வயதுக்கும் உள்ளிட்ட வெளியார் குழந்தைகளுக்கு தன் தாய் அங்கு சென்றால், அவர்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர இவர்களுக்கு பரம்பரையாக குடிதொழில் செய்யும் கைவினைஞர்கள் உள்ளே சென்றுவர அனுமதிக்கப்பட்டார்கள். இவர்கள் வாழ்ந்த பகுதி முழுவதும் கோட்டை போன்று சுற்றுச் சுவர்களால் கட்டப்பட்டு தனிமையாக, ஒரு குழுவாக வாழ்ந்து வந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/15/kaithi1-2025-11-15-13-13-29.jpg)
இவர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒரு பிரச்சினை வந்தது. திருவைகுண்டத்தைச் சுற்றி தாமிரபரணி நீர் பாயும் பல கிராமங்கள். இது கோட்டைப் பிள்ளைமார்களுக்கு சொந்தமாக இருந்தது. இந்த கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி தருவதில்லை. குத்தகை விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வாரம் கொடுப்பதில்லை போன்ற பல பிரச்சனைகள் இருந்தன. அன்று நல்லகண்ணு தலைமையில் இயங்கிய விவசாயிகளின் இயக்கம், இவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துவந்தது. ஆனால் போராட்டம் விவசாயப் பிரச்சினைகளிலிருந்து வெடிக்கவில்லை. அது கோட்டையிலிருந்து வெடித்தது.
கோட்டையின் பராமரிப்புக்கென்று சில விதிகளை வைத்திருந்தார்கள். அதன்படி, மிகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்து, கோட்டையை செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணியை செய்ய வேண்டும்.
இதற்கென்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பல குடும்பங்கள் இருந்தன. இவர்கள் பரம்பரை, பரம்பரையாக இந்தக் கோட்டையை செப்பனிடும் பணியின் நிபுணத்துவத்தை அறிந்திருந்தார்கள். மற்றவர்களால் இந்த நுட்பமான பணியை செய்ய முடியாது என்ற நிலையிருந்தது.
கடந்த காலத்தில் கோட்டையை சீர் செய்து கொடுப்பவர்களுக்கு எந்த சம்பளமும் இல்லை. வேலை செய்யும் நாட்களில் இவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மன்னர் கால கோட்டை பராமரிப்பு செய்பவர்களின் நிலை இவ்வாறாக இல்லை. அவர்களுக்கு மானியமாக நிலம் வழங்கப்பட்டிருந்தது. சில நேரங்களில் அவர்களுக்கு நெல் மூட்டைகள் சம்பளமாக வழங்கப்பட்டன. கால மாறுதலில் வெறும் சோற்றுக்கு மட்டும் வேலை செய்வதை இவர் கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இதனை ஒரு மோசமான சுரண்டல் என்பதை நல்லகண்ணு புரிந்துகொண்டார். இதற்காக அந்த மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கினார். போராட்டம் தொடங்கி விட்டது.
அப்பொழுது கோட்டைப் பிள்ளைமார் கோட்டைக்குள் மட்டும் பலம் பொருந்தியவர்களாக இல்லை. அவர்களுக்கு கோட்டைக்கு வெளியிலும் செல்வாக்கு இருந்தது. பரம்பரையாக கோட்டையை பராமரிப்பு செய்பவர்களின் இந்தப் போராட்டத்தை மிகவும் எளிதாக அடக்கிவிடலாம் என்றே நினைத்தார்கள். அவர்களால் அடித்தளத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலை சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை.
சில மாதங்கள் கோட்டை பராமரிப்பை அந்த குடிகள் நிறுத்திக் கொண்டன. கடைசியில் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. கோட்டை பராமரிப்பு செய்பவர்களுக்கு சாப்பாடு மட்டும் போட்டால் போதும் என்ற நிலையை மாற்றி, அவர்கள் செய்யும் வேலைக்கு எவ்வளவு மூட்டை நெல் வழங்குவது என்று முடிவுக்கு வந்தது.
இதன் பின்னர் கோட்டைப் பிள்ளைமார்கள், கால மாறுதலைப் புரிந்துகொண்டு தங்களை மாற்றிக் கொண்டுவிட்டார்கள். குத்தகை நெல்லையும் விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நெல்லையும் இவர்கள் முறையாகக் கொடுத்துவந்தார்கள்.
அது சரி, அந்தக் கோட்டையின் இன்றைய நிலை என்ன என்பதற்கானப் பதிலும் இருக்கத்தான் செய்கிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தக் கொலைக்குப் பின்னர், அந்த பிள்ளைமார்கள் கோட்டையை விட்டு வெளி யேறினர். இந்த மண் கோட்டையை இடித்து அந்த நிலத்தை சட்டவிரோதமாக சிலர் கைப்பற்றிக் கொண்டனர். இந்த ஆதிக்க சக்திகள் ஆக்ரமிப்பை அகற்றிய, அரசு அந்த இடத்தை சட்டப்பூர்வமாக கட்டப்பொம்மன் போக்குவரத்து பணிமனைக்கு கொடுத்து விட்டது.
கோட்டைப் பிள்ளைமார் பற்றிய இந்த தகவல்களில் போராட்டம் மட்டும் இல்லை. சமூக வரலாறும் இருக்கிறது; போராட்டத்தில் பங்கேற்ற நல்லகண்ணு போராட்டத்தோடு மட்டும் நின்றுவிடாமல் அதன் சமூக வரலாற்றையும் ஆராயத் தொடங்கினார். இது காலவெள்ளத்தில் தமிழ்நாட்டின் எல்லையை தாண்டிச் செல்லும் ஆய்வாக வளர்ச்சி யடைந்தது.
வித்தாலிகா பூர்ணிகா ரஷிய தேசத்தைச் சார்ந்த தமிழ் அறிஞர். இவர் சமகால தமிழ் சமூகத்தின் ஆய்வை மேற்கொண்டிருந்தார். இதில் இவரை பெரிதும் ஆய்வு செய்ய தூண்டியவற்றில் ஒன்று கோட்டைப் பிள்ளைமாரின் சமூக வாழ்க்கையாகும்.
(தொடரும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us