கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு ஜூலை 14-ஆம் தேதி ரயில் மூலம் வருகைதந்த முதல்வர் முக.ஸ்டாலின், 15-ஆம் தேதி காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் காமராசர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அடுத்து சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்தில், "உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை தொடங்கிவைத்து, துறைசார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவுசெய்வதை பார்வை யிட்டு, மனுக்களுடன் நின்றிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். பேட்டையில் அமைக்கப் பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தார்.
பின்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பி பல போராட்டங்களை நடத்தி வெற்றிகண்ட இளையபெருமாள் சிலையைத் திறந்துவைத்து நூற்றாண்டு நினைவு மண்டபத்தை மக்களுக்காக அர்ப்பணித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பார்லிமெண்டின் தீண்டாமை ஒழிப்புக் குழு தலைவராகவும் பணியாற்றியவர் இளையபெருமாள். விவசாயிகளின் கூலி உயர்வு பண்ணையாள் பாதுகாப்பு சட்டம
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு ஜூலை 14-ஆம் தேதி ரயில் மூலம் வருகைதந்த முதல்வர் முக.ஸ்டாலின், 15-ஆம் தேதி காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் காமராசர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அடுத்து சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்தில், "உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை தொடங்கிவைத்து, துறைசார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவுசெய்வதை பார்வை யிட்டு, மனுக்களுடன் நின்றிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். பேட்டையில் அமைக்கப் பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தார்.
பின்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பி பல போராட்டங்களை நடத்தி வெற்றிகண்ட இளையபெருமாள் சிலையைத் திறந்துவைத்து நூற்றாண்டு நினைவு மண்டபத்தை மக்களுக்காக அர்ப்பணித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பார்லிமெண்டின் தீண்டாமை ஒழிப்புக் குழு தலைவராகவும் பணியாற்றியவர் இளையபெருமாள். விவசாயிகளின் கூலி உயர்வு பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர்.
கடந்த 2007-ல் காட்டுமன்னார்கோவிலில் சிலையமைக்க அவரது மகன் மறைந்த டாக்டர் வீரமணி, வடலூர் கண்ணன், தமிழ்வாணன் போன் றோர் பெரும்முயற்சி எடுத்துக்கொண்டனர். அதற்கு அப்போதைய அரசு பல தடைகளை ஏற்படுத்தி யது. இதுகுறித்து, 8.9.2007, நக்கீரன் இதழில் "இளையபெருமாள் சிலை! தடைமேல் தடை' என்ற தலைப்பில் செய்தி வெளிவந்தது. அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய எல். இளையபெருமாள் திருவுருவச் சிலையைத் திறந்து, அவரது நூற்றாண்டு அரங்கை பார்வையிட்டார் முதல்வர்.
சிதம்பரம் லால்புரம் அரசு விழா மேடையருகில் எல்.இளையபெருமாள் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டபின், பேசிய முதல்வர், “"இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்துள்ளது. இளைய பெருமாள் உருவச்சிலையை திறத்துவைத்தேன். தமிழ் சமூகத் திற்காக உழைத்தவர்களை நினைவுகூரும் வகையில் இளைய பெருமாள் நூற்றாண்டு மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. இளையபெருமாள் சமூக நீதி, கல்விக்காகப் பாடுபட்டவர். பறை அடிக்கப்பட்டால் அதை தடுத்தவர். நில உடைமை பிரச்சினை ஏற்பட்டால் அங்குசென்றும் போராடுபவர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்திற்கு இளையபெருமாள் அறிக்கைதான் காரணம். சமூக நீதி மாநாட்டை சென்னையில் முதல்வர் கலைஞரை அழைத்து நடத்திக்காட்டியவர். இன்றைய மண்டபம் அவரது செயலுக்கான பாராட்டு. சாதிப் பெயரில் இருந்த விடுதிகள் சமூக விடுதி களாக மாற்றப் பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு இளைய பெருமாள் வாழ்க்கையை பெருமைப்படுத் தும் வகையில் செயல்படும்''’ என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, “"ஐயா இளையபெரு மாள் பெயரில் நூற்றாண்டு மண்ட பம் கட்டிய முதல்வர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன். இளையபெருமாள் உருவம் முழுமையாக இருக்குமாறு அவரது சிலையை மாற்றியமைக்க உத்தர விட்டார் முன்னாள் முதல்வர் கலைஞர். அம்பேத்கர் விருதை முதலில் இளைய பெருமாளுக்கு வழங்கி பெருமைப்படுத்தினார்.
கலைஞர் என்றால் பிச்சைக் காரர்கள் மறுவாழ்வுத்திட்டம் முதலான திட்டங்கள் நினைவுக்கு வரும். அவரது வாரிசு, கலைஞரை விட திறமையானவர். கூட்டணித் தலைவர்களை அரவணைத்துச் செல்லும் வலிமை ஒன்றே அதற்கு உதாரணம் சொல்லப் போதும். ஸ்டாலின் மக்களுக்கான ஆட்சியை நடத்திவருகிறார். 2026-ல் ஓரணியில் தமிழ்நாடு என்று போட்டியிடும் போது, 4 வாக்குகளில் ஒரு வாக்கு வி.சி.க. வாக்காக இருக்கும்''’என்றார். அதன்பின் அங்கு இளையபெரு மாள் குறும்படம் திரையிடப்பட்டது.
நிகழ்வில் தலைமைச் செய லாளர் முருகானந்தம் வரவேற்றார். கடலூர் கலெக்டர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் நன்றி கூறினார். விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன், வி.சி.க. தலைவர் எம்.பி. திருமா வளவன், இந்திய முஸ்லிம்லீக் காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முரு கன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத், எம்.எல். ஏ.க்கள் சிந்தனைச்செல்வன், சபா. ராஜேந்திரன், அய்யப்பன், ராதா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
_______________
புதிய திட்டங்கள் அறிவிப்பு!
சிதம்பரம் புறவழிச்சாலையில் தமிழக முதல்வர், 110 விதியின்கீழ் ரூ 6 கோடியே 39 லட்சம் செலவில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைத்துள்ளார்.
நினைவரங்கத்தை திறந்துவைத்த முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவை அழைத்து, “இதில் இளையபெருமாளின் முகவாட்டமே இல்லை. அவரது முகம் நன்கு தெரியும் வகையில் சிலையை மாற்றி யமையுங்கள்” என உத்தரவிட்டார். விழாவில் இளைய பெருமாள் மகள்கள் டெல்லிமணி, அமுதா, ஜெயந்தி, புனிதா, மகன் ஜோதிமணி, பேரன் கோகலே உள்ளிட்ட குடும்பத்தினர் முதல்வருக்கு நன்றிதெரிவித்தனர்.
விழாவில், சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்வகையில் ரூ.20 கோடியில் புதிய இணைப்புச் சாலையும், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் அரிசிபெரியங்குப்பத்தில் புதிய உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளியும் தொடங்கப்படும், அதேபோல் வீராணம் ஏரியில் ரூ. 10 கோடி செலவில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி படகு சவாரி மேற்கொள்ளப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கூடுவெளி சாவடியில் புதிய திறன் மேம்பாட்டு நிலையமும், தொழிற்பேட்டையும் அமைக்கப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்.
-அ.காளிதாஸ்