Advertisment

அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுக்காப்பு ஹனி ட்ராப் கண்காணிப்பு!

ss

ண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பை திடீரென மத்திய அரசு வழங்கியுள்ளது. இது அண்ணாமலைக்கு கடிவாளம் போட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

பா.ஜ.க.வில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது. அண்ணாமலைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தி.மு.க.வுக்கு எதிராக அவரது செயல்பாடுகள் இன்னமும் தீவிரமடையப் போகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக ரிப்போர்ட் கொடுத்து விட்டார். அதன் அடிப்படையில் மத்திய அரசு தி.மு.க. அரசு மீது பாயப்போகிறது. அப்பொழுது அண்ணாமலை தாக்கப்படக்கூடாது என்பதற் காகத்தான் இந்த இசட் பிரிவு பாதுகாப்பு.

aa

"பார்த்தீர்களா... அண்ணாமலையோட பவர்? அவரை இனி பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது' என கொக்கரிக்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்.

அண்ணாமலை உண்மையில் பெயிலியர் மாடல். அவர் தலைவராகும்போது பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் 1.5. சமீபத்தில் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அது 5 சதவிகிதம் என உயர்ந்தது. அதற்கும் அண்ணாமலைக்கும் சம்பந்தமே

ண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பை திடீரென மத்திய அரசு வழங்கியுள்ளது. இது அண்ணாமலைக்கு கடிவாளம் போட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

பா.ஜ.க.வில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது. அண்ணாமலைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தி.மு.க.வுக்கு எதிராக அவரது செயல்பாடுகள் இன்னமும் தீவிரமடையப் போகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக ரிப்போர்ட் கொடுத்து விட்டார். அதன் அடிப்படையில் மத்திய அரசு தி.மு.க. அரசு மீது பாயப்போகிறது. அப்பொழுது அண்ணாமலை தாக்கப்படக்கூடாது என்பதற் காகத்தான் இந்த இசட் பிரிவு பாதுகாப்பு.

aa

"பார்த்தீர்களா... அண்ணாமலையோட பவர்? அவரை இனி பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது' என கொக்கரிக்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்.

அண்ணாமலை உண்மையில் பெயிலியர் மாடல். அவர் தலைவராகும்போது பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் 1.5. சமீபத்தில் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அது 5 சதவிகிதம் என உயர்ந்தது. அதற்கும் அண்ணாமலைக்கும் சம்பந்தமே இல்லை.

தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் அவர்களது சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவின ரையும் ஒரே பெயரில் அழைக்கும் ஆணையை மத்திய அரசு பிறப்பித்தது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ள அந்தப் பிரிவினர், பா.ஜ.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் வாக்களித்தனர். அதனால் எதிர் பார்த்ததைவிட அதிகமாக அ.தி.மு.க.வும் பா.ஜ.க. வும் வாக்குகளைப் பெற்றன. இது பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் மிக நன்றாகத் தெரியும். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட சோஷியல் என்ஜினியரிங், தேவேந்திரகுல வேளாளர் மத்தியில் வெற்றிபெற்றதன் அடையாளத்தால் கிடைத்த வாக்குகளுக்கும், அண்ணாமலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள் அண்ணாமலைக்கு எதிரானவர்கள்.

அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு ஏன் கொடுக்கப்பட்டது என கேட்டதற்கு, அதற்கு மூன்று பேர் காரணம் என்கிறார்கள்.

முதலாமவர் தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய செயலாளராக இருந்து, தற்பொழுது மத்திய உள்துறையின் இரண்டாம்நிலை செயலாளராக உள்ள ஹிதேந்திர மக்வானா என்கிற அதிகாரி. வீட்டு வசதி அமைச்சராக இருந்த முத்துசாமியை மதிக்காமல், முதல்வரின் செயலாளரான உதய சந்திரனுடன் நெருங்கிய நட்பில் இருந்த மக்வானா, ஒரு பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல். அவரிடம் அண்ணாமலை நெருங்கிப் பழகிவந்தார். காங் கிரஸில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவது, அண்ணா மலைக்கு கண்ணை உறுத்தியது. அவருக்கு ஏன் இசட் பிரிவு பாது காப்பு? என அண்ணாமலை விசா ரித்தபோது, அவரை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜெ. தாக்கினார், அதனால் மத்திய புலனாய்வுத்துறை இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந் துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று வழங்கப்பட்டது என தெரிந்து கொண்ட அண்ணாமலை... மக்வானா, உள் துறையில் செயலாளர் ஆனதும் அந்த இசட் பிரிவு பாதுகாப்பு கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

மக்வானாவிற்கு சென்னையில் ஒரு நெருங் கிய நண்பர் இருந்தார். அவர், மத்திய உளவுப் பிரிவில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன். ரவிச்சந்திரனிடம்... மக்வானா, அண்ணாமலையின் இசட் பிரிவு ஆசையை தெரிவித்தார். ரவிச்சந்திரன் அதற்கான நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை ஏடாகூடமாக கையாண்ட அண்ணாமலைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் வெகுண்டெழுந்தனர். அவர்களில் சிலர், நேரடியாக அண்ணாமலையின் ரூமுக்குச் சென்றனர். அவர்களை அவமரியாதை செய்யும் விதத்தில் அண்ணாமலை பேச... அங்கு அசம்பாவிதம் நடக்கும் ddஅளவிற்கு வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவத்தை ஆதாரமாக வைத்து, ரவிச்சந்திரன் "தமிழகத்தில் மத்திய அரசுடன் தி.மு.க. மோத ஆரம்பித்துவிட்டது. அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை ஒரு பேரணியாக தமிழகம் முழுவதும் சென்று வெளியிட உள்ளார். எனவே அந்தப் பேரணியின்போது அவரை, தி.மு.க.வினர் தாக்க வாய்ப்புள்ளது. அது கொலைவெறித் தாக்குத லாகக்கூட இருக்கும்' என ஒரு ரிப்போர்ட்டை எழுதி அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாது காப்பு வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர்களில் ஒருவரான மக்வானாவிற்கு ரிப்போர்ட் அனுப்பினார். மக்வானா அதை அமித்ஷாவிடம் காட்டினார். அமித்ஷா அந்த ரிப்போர்ட்டை பார்த்துச் சிரித்தார். உங்கள் கருத்து என்னவென ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அனுப்பினார். ஆர்.எஸ்.எஸ். சார்பாக பா.ஜ.க.வில் இயங்கும் அண்ணாமலையின் குருவான பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க.வின் தேசிய செய லாளர் என்ற அந்தஸ்தில் அண்ணாமலைக்கு இசட் பிரிவு அளிக்கலாம் என அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பினார். இப்படித் தான் அண்ணாமலைக்கு இசட் பிரிவு கிடைத்தது. இது முழுக்க அவரது போலீஸ் துறை மூளையின் விளைவு என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்த வர்கள்.

"இசட் பிரிவில் இருக்கும் அண்ணாமலை ஹனி டிராப்பிங் செய்ய முடியுமா? அதை கண்ட்ரோல் செய்யவில்லையென்றால், ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் அசிங்கமாகிவிடும். அதை கண்காணிக்க இந்த இசட் பிரிவு காவலர் குழுவுடன் உளவுப் பிரிவு போலீசாரையும் மத்திய அரசு இணைக்கவுள்ளது' என சொல்லிச் சிரிக்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

அதேநேரம் பா.ஜ.க.வின் உள் விவகாரங்கள் அறிந்த நபர்கள், மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக ஹனி டிராப்பிங் விஷயம் பெரிதாகி பாதிப்பை ஏற்படுத்தும் என பயந்து இசட் பிரிவுக்கு மாறிய அண்ணாமலைக்கு புதிய, புதிய சோதனைகள் வரும். இசட் பிரிவு பாதுகாப்பு பெற்ற சு.சுவாமியை அமெரிக்காவில் இசட் பிரிவு பாதுகாப்பு இல்லாத நேரத்தில் லிஃப்ட்டில் போகும்போது கன்னம் பழுக்க பளாரென்று அறைந்த இலங்கைத் தமிழர் ஒருவர் நிகழ்த்திய சம்பவத்தை அதற்கு உதாரணமாகவும் சொல்கிறார்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

nkn180123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe