Advertisment

யோவ் உன் வியாபாரத்துக்கு எங்க மீது இந்தித் திணிப்பா? ஸோமட்டோவை எகிறி அடித்த தமிழகம்!

zz

ஸோமட்டோ மீண்டு மொரு முறை பிரச்சனையில் சிக்கியுள்ளது. வாடிக்கையாளர் களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டுமென்ற அதன் ஊழியர் களின் எதிர்பார்ப்பு தமிழ் மக்க ளின் மத்தியில் கொந்தளிப்பைக் கிளப்ப, ஸோமட்டோ நிறு வனரே ட்விட்டரில் வந்து, "வணக்கம்“தமிழ்நாடே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்''’எனச் சொல்லி குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும்படி ஆகியிருக்கிறது.

Advertisment

zz

உணவு விநியோக நிறுவன மான ஸோமட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்திருந்தார் விகாஷ். அவர் ஆர்டர் செய்திருந் ததில் ஒரு உணவு விடுபட்டுப் போயிருக்கவே அதைக் குறிப்பிட்டு தனக்கு அதற்கான பணம் திரும்பத் தரப்படவேண்டுமெனச் சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஸோமட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தைச் சேர்ந்த பெண், “"உங்களது கனிவான கவனத்திற்கு, இந்தி நமது தேசிய மொழி. எனவே அனைவருக்கும் இந்தி ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும்''’என பொறுப்பில் லாமல் பதிவிட்டிருக்கிறார். இரு வருக்கும் நடந்த உரையாடலில் வாடிக்கையாளர் சேவை மையத் தரப்பில் உரையாடியவர் "விகாஷு

ஸோமட்டோ மீண்டு மொரு முறை பிரச்சனையில் சிக்கியுள்ளது. வாடிக்கையாளர் களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டுமென்ற அதன் ஊழியர் களின் எதிர்பார்ப்பு தமிழ் மக்க ளின் மத்தியில் கொந்தளிப்பைக் கிளப்ப, ஸோமட்டோ நிறு வனரே ட்விட்டரில் வந்து, "வணக்கம்“தமிழ்நாடே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்''’எனச் சொல்லி குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும்படி ஆகியிருக்கிறது.

Advertisment

zz

உணவு விநியோக நிறுவன மான ஸோமட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்திருந்தார் விகாஷ். அவர் ஆர்டர் செய்திருந் ததில் ஒரு உணவு விடுபட்டுப் போயிருக்கவே அதைக் குறிப்பிட்டு தனக்கு அதற்கான பணம் திரும்பத் தரப்படவேண்டுமெனச் சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஸோமட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தைச் சேர்ந்த பெண், “"உங்களது கனிவான கவனத்திற்கு, இந்தி நமது தேசிய மொழி. எனவே அனைவருக்கும் இந்தி ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும்''’என பொறுப்பில் லாமல் பதிவிட்டிருக்கிறார். இரு வருக்கும் நடந்த உரையாடலில் வாடிக்கையாளர் சேவை மையத் தரப்பில் உரையாடியவர் "விகாஷுக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால் பணத்தைத் திரும்ப அளிக்க முடியாதென்றும், ஒரு இந்தியனாக இருந்துகொண்டு ஹிந்தி தெரியாமல் இருக்கிறாயே' என்று ஏளனம் செய்திருக்கிறார்.

Advertisment

இதனால் வருத்தமடைந்த விகாஷ், நடந்த விஷயங்களை ட்விட்டரில் வெளிப்படுத்திய தோடு, ஸோமட்டோ வாடிக்கை யாளர் சேவைக்கும் தனக்கும் நடந்த உரையாடல் விவரங்களை யும் ட்விட்டரில் பதிவிட, சற்று நேரத்தில் ட்விட்டரில் கொந் தளிப்பு எழுந்ததோடு, ரிஜக்ட் ஸோமட்டோ என்றொரு ஹேஷ்டாக்கும் பிரபலமானது.

ss

அதன் விளைவாக ஷேர் மார்க்கெட்டிலும் ஸோமட்டோ பங்குகளின் விலை சரிந்ததைப் பார்த்த ஸோமட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், பதறியடித்து ட்விட்டருக்கு வந்து, "வணக்கம் விகாஷ், எங்கள் வாடிக்கையாளர் சேவைப் பணியாளரின் நடத் தைக்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். தயவுசெய்து ஸோமட்டோவை நிராகரிக்காதீர் கள்'' என பதிவிட்டார்.

பின், நமது பன்மைக் கலாச் சாரத்தை அறிந்து வாடிக்கை யாளரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று அறி யாத அந்தப் பணியாளரை வேலையைவிட்டுத் தூக்கியிருப்ப தாகவும், அந்தப் பணியாளரின் நிலைப்பாடு நிறுவனத்தின் நிலைப்பாடல்ல என்றும் உறுதி யளித்தார். மேலும் ஸோமட் டோ, "தன் வாடிக்கையாளர் களுக்காக தமிழ்ச் செயலியை உரு வாக்கி வருவதாகவும், கோவை யில் தமிழ் வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பதிவிட்டார்.

அரசியல் தளத்தில் மத்தியில் ஆளும் அரசுகள், தேசிய மொழி என்று ஹிந்தியை தலையில் கட்டுவதும் வற்புறுத்து வதும் வழக்கம். சுதந்திரம் பெற்றது முதலே ஹிந்தியை தமிழர்களின் தலையில் கட்டும் அரசியல் முயற்சிகள் ஒருபக்கமும் அதற்கெதிராக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு ஒருபக்கமும் தொடர்ந்துவரு கிறது.

பா.ஜ.க. அரசு வந்தபிறகு மத்திய அரசின் திட்டங்கள் ஹிந்தியிலேயே இடம்பெற்று வருகின்றன. தமிழ்ப்படுத்த வலி யுறுத்தினாலும் திட்டத்தின் ஹிந்தி பெயரை தமிழாக்கம் செய்வது நடக்கிறதே தவிர, பொருளுடன் கூடிய தமிழாக்கம் நடப்பதில்லை. உதாரணத்துக்கு, பேடி பச்சாவோ, பேடி பதாவோ என்பதற்கும், பெண் குழந்தைகளைக் காப் போம். பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் என்பதற்கான வித்தி யாசம்தான் அது.

அது ஒருபுற மிருக்க, வணிக நிறுவனங்கள், வாடிக்கை யாளர் சேவை மையங்கள், ஏ.டி.எம். மையங்கள் உள் ளிட்டவற்றில் ஆங்கிலம், ஹிந்தியை மட்டுமே மையமாகக் கொண்டு பணியாளர்கள் அமர்த்தப்படுவதும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதும் வருத்தத்திற்குரியது.

பணம் எடுப்பதற்கான ஏ.டி.எம். எந்திரங்களில்கூட பல்வேறு வங்கிகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே சேவையளிக் கின்றன. மிகச் சில வங்கிகள் மட்டுமே ஆங்கிலம், இந்தியுடன் மாநில மொழிக்கான சேவை யையும் அளிக்கின்றன.

ss

ஓ.டி.டி. தளங்கள் அதிக பட்ச வணிக நன்மையைப் பெறுவதற்காக, ஆங்கிலம், ஹிந்தி படங்களை தங்கள் தளங்களில் வெளியிடும்போது, கூடவே மாநில மொழியிலுள்ளவர்களும் படங்களையும் தொடர்களையும் பார்ப்பதற்காக அந்தந்த மொழி யில் வசனங்களை மொழி பெயர்த்து அளிக்கின்றனர். ஒரு முழுப் படத்தையும், தொடரை யும் மொழி பெயர்த்து அளிக்கமுடியும் போது, கோடிக் கணக்கானவர் களைக் கொண்ட மாநிலத்தின் மக்கள் பயன் பெறும்படி வாடிக்கையாளர் சேவையையோ, செயலிச் சேவையையோ தமிழில் அளிக்க முடியாதா?

மாநில மொழியில் சேவை அளிக்கப்படும்போது, ஆங்கிலம் தெரியாதவர்களும்கூட தயக்க மின்றி அந்தச் சேவையைப் பயன் படுத்த முன்வருவதால், சம்பந்தப் பட்ட அந்த நிறுவனத்துக்கே பயன் பெருகும். லாபம் அதிகரிக்கும்.

நன்கு இந்தி தெரிந்த ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு தொடர்புகொள்ளவும் என குறிப்பிட்ட சில ஆன்லைன் வணிகத் தளங்கள் குறுஞ்செய்தி அனுப்புகின்றன என சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நிறுவனங்களின் இத்தகைய மனநிலைதான் ஸோமட்டோவில் நடந்தது போன்ற நிகழ்வுகளுக்கான விதை.

ஸோமட்டோ விவகாரம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “"யார் இந்தியன், யார் இந்தியன் இல்லையென தமிழர்களுக்குப் பாடம் தேவையில்லை. வாடிக்கை யாளர்களுக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரிந்திருக்க வேண்டுமென கட்டாயமில்லை. ஆனால் வாடிக்கையாளர் உதவி மையங்கள், அந்தந்த மாநிலங் களின் மொழியை அவசியம் அறிந்திருக்கவேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறார்.

nkn231021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe