பழனி கோயில் வேலை எதிர்பார்ப்பில் இளைஞர்கள்! -அமைச்சர் கவனிப்பாரா?

ss

மிழ்க் கடவுளான பழனி முருகனை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வருகை தரு கிறார்கள். பக்தர்கள் வருகைமூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் முருகப்பெருமானுக்கு காணிக்கை குவிகிறது. அப்படியிருந்தும் கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு போதுமான பணியாளர் களைப் போடாமல் கிடப்பில் போட்டுவந்தனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப்பட்டார்.

அவர், தமிழகத்திலுள்ள பெரும் பாலான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தினார். பலகோடி கோயில் சொத்துக்களை மீட்டெடுத்து நல்ல பெயரெடுத்தார். கடந்த வருடம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில், உபகோயில்களில் உள்ள 280-க்கும் மேற்பட்ட காலிப் பணி யிடங்கள் நிரப்பப் படும் என திருக்கோயில் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டதன் பேரில் 85 ஆயிரம் பேர் பழனி முருகப் பெருமானுக்கு பணிசெய்ய விண்ணப் பித்திருந்தனர். அதைக்கண்டு தேவஸ்தான நிர்வாகிகளே அதிர

மிழ்க் கடவுளான பழனி முருகனை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வருகை தரு கிறார்கள். பக்தர்கள் வருகைமூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் முருகப்பெருமானுக்கு காணிக்கை குவிகிறது. அப்படியிருந்தும் கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு போதுமான பணியாளர் களைப் போடாமல் கிடப்பில் போட்டுவந்தனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப்பட்டார்.

அவர், தமிழகத்திலுள்ள பெரும் பாலான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தினார். பலகோடி கோயில் சொத்துக்களை மீட்டெடுத்து நல்ல பெயரெடுத்தார். கடந்த வருடம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில், உபகோயில்களில் உள்ள 280-க்கும் மேற்பட்ட காலிப் பணி யிடங்கள் நிரப்பப் படும் என திருக்கோயில் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டதன் பேரில் 85 ஆயிரம் பேர் பழனி முருகப் பெருமானுக்கு பணிசெய்ய விண்ணப் பித்திருந்தனர். அதைக்கண்டு தேவஸ்தான நிர்வாகிகளே அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

pp

இந்த விசயத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காதுக்குக் கொண்டுசென்றதன் பேரில், அமைச்சரும் "ஒவ்வொரு பணியிடத்திற்கும் விண்ணப்பித்தவர்களை கணக்கெடுத்து முதலில் கம்ப்யூட்டரில் ஏற்றுங்கள் அதன்பின் நேர்காணலுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும்'' என கூறினார். இதைத் தொடர்ந்து தேவஸ்தான பணியாளர்களும் அந்த விண்ணப்பங் களை கம்ப்யூட்டரில் ஏற்றி தயாராக வைத்திருந்தனர். அதற்குள் பாராளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் அதைக் கிடப்பில் போட்டு விட்டனர். வேலைவாய்ப் பிற்காக விண்ணப்பித்த இளைஞர்கள் பழனி முருகன் கோவில் வேலைக்கு எப்போது இன்டர்வியூ வரும் என காத்துக் கிடந்தனர். இந்த வேலைக்காக பலர், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல லட்சங்களைக் கொடுத்து வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில்தான் கடந்த 5.12.2024-ஆம் தேதி பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மற்றும் உபகோயில்களுக்கான இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், காவலர், துப்புரவுப் பணி யாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மேற் பார்வையாளர்கள், அர்ச்சகர்கள், ஆப்ரேட்டர் கள், ஓட்டுனர்கள், மேஸ்திரி, சுகாதார அலு வலர்கள், தாளம், தவில், நாதஸ்வரம் உட்பட 296 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மீண்டும் பேப்பரில் விளம்பரம் கொடுக்கப் பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் பழனி முருகன் கோவில் வேலைக்காக நேரிலும், தபால் மூலமாகவும் விண்ணப்பித்து வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த ஆண்டு வேலைக்காக விண்ணப்பித்தவர்களும், இந்த முறையும் விண்ணப்பித்து வேலைக்காக ஏங்கிவரு கிறார்கள். மற்றொருபுறம், வசதி படைத்தவர்கள் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை பேரம் பேசி பல லட்சங்களை அட்வான்சாக கொடுத்து வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். தற்போது 5.12.2024 முதல் 8.1.2025 வரை ஒரு மாதகாலம் ssவேலைக்காக விண்ணப்பிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. இதனால் இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் இன்டர்வியூ நடத்தி எப்போது வேலை கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

"பதினேழு வருடங்களுக்கு முன்பு பழனி திருக்கோயிலில் பணி யிடங்கள் நிரப்பப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் திருக் கோயிலில் உள்ள காலியான பணியிடங்கள் நிரப்பப்படுவதாகக் கூறி விளம்பரம்செய்து, அதன் மூலம் பணம் வசூலித்தார்களே தவிர பணியிடங்களை நிரப்பவில்லை. தற்போது தி.மு.க. ஆட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அந்த இடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. ஆனால் அதற்குள் மீண்டும் காலியான இடங்கள் நிரப்பப்படும் என விளம்பரம் கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுவருகிறார்கள்.

இந்த காலியான பணியிடங்களுக்கு அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபு முறையாகத் தேர்வு நடத்தி நிரப்புவார் என்று எதிர்பார்க்கிறோம். யாரும் வேலைக்காக பணத்தைக் கொடுத்து ஏமாறவேண்டாம். தற்போது அறிவித்துள்ள 296 பணியிடங்களில் 150 பணியிடங்கள் துப்புரவுப் பணியிடங்களாக இருக்கிறது. இதுபோன்ற வேலைக்கெல்லாம் வெளிமாவட்டத்திலிருந்து இங்கு தங்கி வேலைபார்ப்பது அரிது. அதோடு பழனி கோவிலிலுள்ள ஒட்டுமொத்த காலியான பணியிடங்களை இந்த மாவட்டத்திலுள்ள படித்த இளைஞர்களுக்கே கொடுப்பதற்கு முன்வராமல், தமிழகம் முழுவதுமுள்ளவர்களை விண்ணப்பிக்கச் சொல்லியிருக்கிறது தமிழக அரசு. இருந்தாலும் இந்த மாவட்டத்தில் வேலைக்காக விண்ணப்பித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்''’என்றார் ஞானதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவைப் பொறுப்பாளரான செந்தில்.

இதுசம்பந்தமாக கோவில் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, "ஏற்கனவே காலியான பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தற்போது காலியான பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வருபவர்களுக்கும் சேர்த்து கூடிய விரைவில் இண்டர்வியூ நடத்தி ஒட்டுமொத்த காலியான பணியிடங்களையும் அமைச்சர் முறையாக நிரப்புவார்''’என்றார்கள் உறுதியாக!

-சக்தி

nkn010125
இதையும் படியுங்கள்
Subscribe