க்டோபர் மாதத்தின் முதல் நாளில்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது, ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள், ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருந்தார்.

Advertisment

இதே அக்டோபர் மாதத்தில், கடந்த ஒன்பதாம் தேதி, கேரள மாநிலம் கோட்டையம் தம்பலக்காடு பகுதியை சேர்ந்த அனந்து அஜி என்ற 24 வயது ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர், திருவனந்தபுரத்திலுள்ள சுற்றுலா மாளிகையின் அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.டி. நிறுவன பணியாளரான அனந்து, தனது தற் கொலைக்கு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை பலரும் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதே காரணமென்று குறிப்பிட்டிருப்பதுதான் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கமென்றாலே மிகுந்த கட்டுப்பாடான இயக்கம், ஒழுக்கமான இயக்கம் என்றெல்லாம் கட்டுக்கதை பரப்பப்படுவது பொய்யென்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எனது தற்கொலைக்கு ஒரு நபரும் ஒரு அமைப்பும்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மட்டுமே நான் தற்கொலை முடிவெடுத்ததற்கு காரணம். என்னால் இனியும் சகித்துக்கொண்டு வாழ முடியாது. கடந்த ஓராண்டாகவே நான் பெரும் மனஉளைச்சலில் இருக்கிறேன். அதற்கான மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். 

Advertisment

நான் 4 வயது சிறுவனாக இருக்கும்போது என்னை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் எனது தந்தை சேர்த்துவிட்டார். அப்போதிருந்தே ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் நான் பாலியல்ரீதியாக துன்புறுத்தப் பட்டேன். அந்த அமைப்பில் சேர்ந்தது முதல் பல ஆண்டுகளாக நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வேலை செய்தேன். அந்த அமைப்பைப்போல் வெறுக்கத்தக்க வேறு அமைப்புகள் இல்லை. முழுக்க முழுக்க வெறுப் புணர்வைத்தான் அவர் கள் நமக்கு போதிப்பார் கள். வாழ்க்கையில் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை உங்கள் நண்பனாக ஆக்கிக்கொள் ளாதீர்கள். தந்தையாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், சகோதர னாக இருந்தாலும் அவரை உங்கள் வாழ்க் கையிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுங்கள். அந்தள வுக்கு விஷமானவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். ஒரு நபரின் பெயர் எனக்கு நினைவில்லை. அவரால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஐ.டி.சி, ஓ.டி.சி முகாம் களில் வைத்து பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப் பட்டேன். உடல் ரீதியாகவும் தாக்குதல் நடந்தது. காரணமின்றி என்னை அடித்தார்கள்.

என்னைப்போலவே பலரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் சித்ரவதைக்கு உள்ளாகினர். இப்போதும்கூட ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பலருக்கும் இதுபோன்ற கொடுமைகள் நடக்கின்றன. அவர்களை காப்பாற்றி, வெளிக் கொண்டுவந்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். நான் மனரீதியாக பெரிதும் கஷ்டப்படுகிறேன். இதுகுறித்து வெளியே சொல்வதற்கு என்னிடம் ஆதாரமில்லை. எனவே நான் சொல்வதை நம்பமாட்டார்கள். அதனால் எனது உயிரையே ஆதாரமாகத் தருகிறேன். எனக்கு ஏற்பட்ட துயரத்தைப்போல் எந்த குழந் தைக்கும் துயரம் நேரக்கூடாது. பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக வழங்க வேண்டும். குட் டச், பேட் டச் குறித்து விளக்க வேண்டும். குழந்தைகளுக்காக நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். என்னிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களைப் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். ஆனால் பயத்தினால் அவர்களைப் பற்றி வெளியே சொல்லமாட்டார்கள். நானும் அதேபோல் என் பெற்றோர்களிடம் சொல்லவில்லை' என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தற்கொலைக்கான காரணத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisment

குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் மற்ற மதத்தினர் மீது மதவெறியைத் தூண்டக்கூடிய பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வளர்ச்சி, நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் ஆபத்தானதாக இருக்குமென்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.