"இதிலுமா உங்க அரசியல்... த்தூ!'' -மக்களின் கோபத்தில் மத்திய-மாநில அரசுகள்!

nirmalasetharam

"இனி எப்படி இப்படி ஒரு தோப்பை உருவாக்கி, வாங்கிய கடனை கட்டுவோம்'' -இதுதான் கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வேதனை.

nirmalasetharamடெல்டா மாவட்டங்களுக்கு புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டுக்கோட்டை, துறவிக்காடு பகுதியில் விவசாயிகளை சந்தித்த பிறகு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் விவசாயிகளின் குறைகளை கேட்பதாக அறிவிக்கப்பட்டது. குண்டும் குழியுமான சாலைகளில் அவசரமாக கிரசர் மண் கொட்டி சீரமைக்கப்பட்டதுடன் சாலையில் உள்ள குழிகளில் கிடந்த மழைத் தண்ணீரை பெண்களை வைத்து அள்ளி அகற்றினார்கள். சிலர் மட்டுமே மனு கொடுத்து விளக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்து கொண்டிருந்த மேடையில், ஒரே காவி மயம்.

நிர்மலா சீதாராமன் வரும் முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உடன் வந்து ர.ர.க்களிடம் குறைகளை கேட்டு போனிலேயே நிவாரணங்களை கொண்டு வர உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.

மேடை அருகே காத்திருந்த நெடுவாசல் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான அலமேலு தலைமையில் நின்ற பெண்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கரிடம்.. ""எங்கள் வளங்கள் அழிஞ்சு போகும்னுதான் ஹைட்ரோ கார்பன் திட்டமே வேண்டாம் என்று போராடினோம். ஆனால் இப்ப அந்த மரங்கள் இல்லை. அதனால் அந்த திட்டத்தை கொண்டு வந்துவிடலாம் என்று மத்திய அரசு நினைக்கலாம். அதை நீங்கதான் தடுக்கணும்'' என்று சொல்ல, ""நிச்சயமாக அந்தத் திட்டம் வராமல் தடுப்போம்'' என்றார்.

whitefatherஅதன்பின், மேடைக்கு வந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. கருப்பு முருகானந்தம், ஹெச்.ராஜா, தமிழிசை ஆகியோர் மைக் பிடித்தபின் பேசிய நிர்மலா சீதாராமன்... ""அழிவுகளை பார்த்தேன். மறுபடியும் தென்னங்கன்றுகள் நட ஆந்திரா, கர்நாடகா, ஒரிசாவில் இருந்து இறக்கலாம். பத்தலன்

"இனி எப்படி இப்படி ஒரு தோப்பை உருவாக்கி, வாங்கிய கடனை கட்டுவோம்'' -இதுதான் கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் வேதனை.

nirmalasetharamடெல்டா மாவட்டங்களுக்கு புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டுக்கோட்டை, துறவிக்காடு பகுதியில் விவசாயிகளை சந்தித்த பிறகு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் விவசாயிகளின் குறைகளை கேட்பதாக அறிவிக்கப்பட்டது. குண்டும் குழியுமான சாலைகளில் அவசரமாக கிரசர் மண் கொட்டி சீரமைக்கப்பட்டதுடன் சாலையில் உள்ள குழிகளில் கிடந்த மழைத் தண்ணீரை பெண்களை வைத்து அள்ளி அகற்றினார்கள். சிலர் மட்டுமே மனு கொடுத்து விளக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்து கொண்டிருந்த மேடையில், ஒரே காவி மயம்.

நிர்மலா சீதாராமன் வரும் முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உடன் வந்து ர.ர.க்களிடம் குறைகளை கேட்டு போனிலேயே நிவாரணங்களை கொண்டு வர உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.

மேடை அருகே காத்திருந்த நெடுவாசல் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான அலமேலு தலைமையில் நின்ற பெண்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கரிடம்.. ""எங்கள் வளங்கள் அழிஞ்சு போகும்னுதான் ஹைட்ரோ கார்பன் திட்டமே வேண்டாம் என்று போராடினோம். ஆனால் இப்ப அந்த மரங்கள் இல்லை. அதனால் அந்த திட்டத்தை கொண்டு வந்துவிடலாம் என்று மத்திய அரசு நினைக்கலாம். அதை நீங்கதான் தடுக்கணும்'' என்று சொல்ல, ""நிச்சயமாக அந்தத் திட்டம் வராமல் தடுப்போம்'' என்றார்.

whitefatherஅதன்பின், மேடைக்கு வந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. கருப்பு முருகானந்தம், ஹெச்.ராஜா, தமிழிசை ஆகியோர் மைக் பிடித்தபின் பேசிய நிர்மலா சீதாராமன்... ""அழிவுகளை பார்த்தேன். மறுபடியும் தென்னங்கன்றுகள் நட ஆந்திரா, கர்நாடகா, ஒரிசாவில் இருந்து இறக்கலாம். பத்தலன்னா அந்தமானில் இருந்து ராணுவ கப்பலில் தூத்துக்குடிக்கு தென்னங்கன்றுகள் கொண்டு வருகிறேன். அப்புறம் பயிர்க் காப்பீட்டுக்கு தமிழக அரசு கால நீட்டிப்பு கேட்டது. கால நீட்டிப்பு கொடுத்தாலும் அதற்கான கட்டணத்தை விவசாயிகள் கட்டும் நிலையில் இல்லை. அதனால் தமிழக அரசே காப்பீட்டுத் தொகையை செலுத்திவிட்டு பிறகு காப்பீடு நிவாரணம் கிடைக்கும் போது பிடித்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறேன். அதை செய்வார்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு உடனே பிரதமர் திட்டத்தில் வீடுகள் கட்டப்படும்'' என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

ஆனால் கடைசி தேதியான 30-ந் தேதி வரை தமிழக அரசு விவசாயிகளுக்கு அந்த பிரிமியத்தை கட்டவில்லை. மத்திய அரசு கால நீட்டிப்பும் செய்யவில்லை. தமிழக அரசு தன் மாநில விவசாயிகளை காக்க தவறிவிட்டது.

மற்றொருபுறம் தர்மபுரி மாவட்டம், ஆனைமலை பண்ணை, பெங்களூர் மாண்டியா போன்ற இடங்களில் தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்யும் இடங்களுக்கு நேரடியாக சென்று கன்றுகளை வாங்கி வந்து விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறார்கள் தேங்காய் வியாபாரிகள். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், வடகாடு, செரியலூர், வேம்பங்குடி, தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, சானாகரை பைங்கால், குருவிக்கரம்பை, ஏனாதிக்கரம்பை ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இதுவரை சுமார் 5 லட்சம் கன்றுகள் கொண்டுவரப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தென்னங்கன்றுகள் வழங்கியவர்களில் ஒருவரான வெள்ளைப்பாதர்.. ""என்னிடம் 80 விவசாயிகள் வரவு செலவில் உள்ளனர். 60, 70 சதவீதம் தென்னை மரங்கள் ஒடிஞ்சு போச்சு. அவர்களில் பலரும் முன்பணம் வாங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் மனமுடைந்து காணப்படுகிறார்கள். அதனால என்னிடம் இருந்த பணம், நகைகளை அடகு வைத்து முதல்கட்டமாக 9 ஆயிரம் தென்னங்கன்றுகளை தர்மபுரி மாவட்டம் அரசம்பட்டி, புளியூர் கிராமங்களில் விவசாயிகளே விதை நேர்த்தி செய்து பதியம் போட்டு வைத்திருந்த கன்றுகளை பார்த்து வாங்கி வந்து கொடுத்திருக்கிறேன். அதாவது கேரளாவில் புயல் பாதிப்பிற்குப் பிறகு தற்போது தென்னங்கன்று விலை உயர்ந்து ரூ. 110 என்று விற்கிறார்கள். அதே நேரத்தில் இங்குள்ள அரசுப் பண்ணைகளில் கன்று இல்லை என்று சொல்லிவிட்டு, கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்.

கன்றுகளுக்கான பணத்தை நாங்கள் விவசாயிகளிடம் இப்போது வாங்க முடியாது. அதனால் 5 வருடத்தில் தேங்காய் அறுவடைக்கு வரும் காலத்தில்தான் வாங்க முடியும். அரசே இலவசமாக கன்றுகளை கொடுத்து வளர்ப்பிற்காக மானியமும் கொடுத்தால் விவசாயிகளை காப்பாற்றலாம்'' என்றார்.

பட்டுக்கோட்டையை சேர்ந்த விவசாயி ஒருவர், ""தோப்பு முழுவதும் தென்னை மரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இன்னும் அதிகாரிகள் கணக்கெடுக்க வரல, அதனால் மரங்களை வெட்டி அகற்றவும் முடியாமல் தவிக்கிறோம். இந்த நிலையில் வியாபாரிகள் விவசாயிகளுக்கு கன்றுகளை கொடுக்கிறார்கள். கீழே கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றாமல் எப்படி கன்றுகளை நடமுடியும். பண்ணைகளில் கன்றுகளை வாங்கலாம் என்று போனால் அமைச்சர்களுக்கு கன்றுகள் வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். சில நாட்களுக்கு முன்பு வைத்திலிங்கம் எம்.பி. அவரது ஆதரவாளர்களுக்கு வேண்டும் என்று பட்டுக்கோட்டை வேப்பங்குளம் அரசுப் பண்ணையில் இருந்து 10 ஆயிரம் கன்றுகளை அள்ளி போயிட்டார். அதே போல வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு "எல்லா பண்ணைகளுக்கும் தொடர்பு கொண்டு கன்றுகளை நாங்கள் சொல்றவங்களுக்குத்தான் ஏற்றிவிடணும்' என்று சொல்லி வருகிறார் என்று அதிகாரிகள் சொல்றாங்க. மத்திய அமைச்சர் ஒண்ணு சொல்றாரு... மாநில அமைச்சர்கள் ஒண்ணு சொல்றாங்க. இதிலுமா உங்க அரசியல்... த்தூ'' என்று கோபத்தைக் கொட்டினார்.

சாலைகளில் சாய்ந்த மரங்களை அந்தந்த பகுதி இளைஞர்கள் வெட்டி அகற்றினார்கள். தற்போது அந்தந்தப் பகுதி ஆளுங்கட்சியினர் அந்த மரங்களை வெட்டி விற்றுக் கொள்ள ரகசிய உத்தரவு கிடைக்கப் பெற்றதால் முழுமையாக நிற்கும் மரங்களையும் வெட்டிஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் இருந்து வந்துள்ள மின் ஊழியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஹெல்மெட், ஷூ, எர்த் கிளிப் எல்லாம் மாட்டிக் கொண்டே பணி செய்வதால் அவர்களுக்கு உயிர்ப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த மின் ஊழியருக்கும் பாதுகாப்பு உபகரணம் கொடுக்கப்படாததால் அமைச்சர் விஜயபாஸ்கர் கண் முன்பே களமாவூர் என்ற கிராமத்தில் சேலத்தைச் சேர்ந்த இரு மின் ஊழியர்கள் மின்சாரம் தாக்கி தொங்கினார்கள். அவர்களை அமைச்சரே கிரேன் மூலம் இறக்கி சிகிச்சைக்கு அனுப்பினார். அதில் ஒருவர் உயிர் பறிபோய்விட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்ப, ""அண்டை மாநிலங்களில் இருந்தும் மின் ஊழியர்கள் வந்துள்ளார்கள். நமது பணியாளர்களும் இணைந்து வேலை செய்வதால்தான் உடனடியாக மின்சாரம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாகத்தான் வேலை செய்கிறார்கள். அதனால்தான் விபத்துகள் குறைவாக உள்ளன. இன்னும் பாதுகாப்பு வேண்டும்'' என்றவர், ""கேரளா போல தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லையே'' என்ற கேள்விக்கு பதில் சொல்லாமலேயே நழுவினார்.

மக்கள் நீதிமய்யம் கமல் பல இடங்களில் காரைவிட்டு இறங்காமலேயே "மறுபடியும் வருகிறேன்' என்று சொல்லிக் கொண்டே சென்றது பாதிக்கப்பட்ட மக்களை ஈர்க்கவில்லை.

மண்பாண்ட தொழிலாளிகளின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர்கள் மீது ஊடக வெளிச்சமும் பரவவில்லை. ""பொங்கல் பானை, கார்த்திகை அகல்விளக்கு, அடுப்புகள் செய்றதோட கிராம கோயில்களுக்கு மண் குதிரைகள், சுவாமி சிலைகள் செய்வோம். ஆடி பிறந்துட்டா பொங்கல் பானை செய்ய தொடங்கிருவோம். அதுக்காக ஒரு யூனிட் மண் ரூ. 8 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்து காயவைத்து மாவாக்கி, தண்ணியில கரைச்சு, சலிச்சு அதுல இன்னும் பிற மண்ணை கலந்து பானை செய்யணும். மார்கழி தொடக்கத்தில்தான் சூளையில வச்சு சுடுவோம். ஒவ்வொரு தொழிலாளியும் குறைந்தது ஆயிரம் பொங்கல் பானை செய்வோம். இப்படி செஞ்சு வச்சிருந்த அத்தனை பானைகளும் புயலால வீடுகள் உடைஞ்சு மழை தண்ணியில கரைஞ்சு போச்சு. 5 மாத உழைப்பும் எங்கள் பிழைப்பும் வீணா போச்சுய்யா.. எங்களுக்கு என்று இந்த அரசாங்கம் எதையும் அறிவிக்கல'' என்றவர், ""புயல் பாதித்த மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் பொங்கல் பானைகள் கரைஞ்சு போச்சு'' என்றார் கண்ணீரில் கரைந்தபடி.

-இரா.பகத்சிங்

_________________

இளைஞரின் மனிதநேயம்!

ranjithkumarகாஞ்சிபுரம் உத்திரமேரூர் தொகுதி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஆர்.வி.ரஞ்சித்குமார் என்கிற இளைஞரின் மனித நேயம் கஜா புயலால் பாதித்த நாகை மக்களை வியக்க வைத்திருக்கிறது.

நாகை மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட கேசன் ஓடை சிந்தாமணி பகுதியிலிருந்த குடிசைகளை சூறையாடியிருந்தது கஜா புயல். அப்பகுதியை சுற்றிவந்தார் ரஞ்சித்குமார். வீடு தரைமட்டமான சோகத்தில் இந்திராணி என்கிற 70 வயது மூதாட்டி செய்வதறியாது படுத்துக்கிடந்தார். அவரை வாரியணைத்து ஆறுதல்படுத்திய அந்த இளைஞர், அவருக்குத்தேவையான உதவிகளை செய்திருக்கிறார்.

அப்போது, இடிந்து விழுந்திருத்த தனது குடிசையையே வெறித்துப் பார்த்திருக்கிறார் மூதாட்டி இந்திராணி. அதனைப் புரிந்துகொண்ட ரஞ்சித்குமார், ‘அவரை ஆறுதல் படுத்தியதோடு மறுநாளே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கான்கிரீட் வீடு கட்டுவதில் இறங்கிவிட்டார். தற்போது வீடு கட்டும் பணியில் 30 சதவீதம் முடிந்திருக்கிறது. மேலும் அப்பகுதியின் 300 குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை செய்த ரஞ்சித்குமார், ""வீட்டை கட்டி முடித்து சாவியை கொடுத்தபிறகுதான் இங்கிருந்து செல்வேன்''’ என உறுதி தந்துள்ளார்.

-இளையர்

nkn051218
இதையும் படியுங்கள்
Subscribe