தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகிறது. இனி உலகம் முழுவதும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கத்தை கற்பனை மட்டுமே செய்யவேண்டும் என்கிற நிலை உருவாகியுள்ளது.
தங்கம் உற்பத்தியில் மெக்சிகோ, சீனா, பெரு, சிலி, ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளே உள்ளன. அதேபோல் வெள்ளி உற்பத்தி யிலும் இந்த நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தங்கத்தை அமெரிக்கா வாங்கிக்குவித்தது என்றால், வெள்ளியை சீனா வாங்கிக்குவித்தது. தொழில்துறையில் சோலார் பேனல், செமிகண்டக் டர், பேட்டரி என எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் முதலிடத்திலுள்ள நாடு சீனா.
இவற்றை தயாரிக்க வெள்ளி கட்டாயம் என்பதால் வெள்ளி உற்பத்தி செய்யும் நாடு களிடமிருந்து சீன அரசாங்கம் வெள்ளியை வாங்கி இருப்புவைத்தது. அதேபோல் அது உற்பத்தி செய்ததையும் ஏற்றுமதி செய்யவில்லை. தற்போது உலகளவில் பெரியளவில் வெள்ளி மார்க்கெட் உயர்ந்ததால் அது தன்னிடமுள்ள வெள்ளியை விற்பதாக அறிவித்துள்ளது. ஜனவரி 30-ஆம் தேதி சீன அரசாங்கம் வெள்ளிக்கான மார்க்கெட்டைத் திறந்தது. இதனால் ஒரு கிலோ 4.2 லட்சத்திலிருந்து சடாரென 4 லட்சமாக குறைந்தது, அது இன்னும் குறையும் என்கிறார்கள். அதாவது, சரி பாதியாகக் குறையவும் வாய்ப்புள்ளது எனக் கணிக்கிறார்கள். தங்கம் அப்படி குறைய வாய்ப்பில்லை. இப்போது கிராம் 15,000 ஆக இருப்பது 13,000-க்கு குறையும். பின்பு மீண்டும் மெல்ல உயரும் என்கிறார்கள்.
உலகளவில் தங்கம் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு பதில் தங்கத்தின் வழியாக வர்த்தகம் செய்ய பல நாடுகள் முடிவெடுத்துள்ளதால் ஒவ்வொரு நாடும் தங்கத்தின்மீது கண் வைத்துள்ளன. அதனை வாங்கி இருப்பு வைத்துவருகின்றன. இல்லையேல் பொருளாதாரம் படுத்துவிடும் எனப் பயப்படுகிறார்கள், இதனால் தங்கத்தை வாங்கிக்குவிக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு நாடும் டாலரை தங்கமாக மாற்றிவருகின்றது. இந்நிலையில் இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசாங்கம் அதிரடியாக ஒரு அறிவிப்பை செய்யலாமா என ஆலோசித்துவருவதாகக் கூறுகிறார்கள் பொருளாதாரம் அறிந்தவர்கள். கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் என 2016-ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பொதுமக்கள் அனைவரையும் வங்கி வாசலில் மணிக்கணக்கில், நாள் கணக்கில் நிற்க வைத்தார்களே அப்படியொரு நடவடிக்கையாக இது இருக்கப்போகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பொருளாதார வழக்கறிஞர் ஒருவர், "இந்தியாவில் திருமணமான பெண் 500 கிராம் தங்கமும், திருமணமாகாத பெண் 250 கிராமும், திருமணமான ஆண் 200 கிராம் தங்கமும், திருமணம் ஆகாத ஆண் 100 கிராம் தங்கமும் வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதாவது நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 950 கிராம். அதற்குமேல் வைத்திருந்தால் வருமானவரித்துறைக்கு கணக்கு சொல்லவேண்டும். அதற்கான வரி கட்ட வேண்டும். இப்படி வருமானவரித்துறை விதியிருந்தாலும் இது தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. ஏதாவது ரெய்டு நடக்கும்போது மட்டும் இதனைக் கணக்கில் எடுக்கின்றனர். இந்த விதியைத்தான் தீவிரமாக கையிலெடுக்கப்போகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதாவது "உன்னிடமுள்ள தங்கம் உன்னுடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளாய்' எனக் கேட்க உள்ளது. ஓராண்டுக்கு முன்பு ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கி வழியாக வங்கிகளுக்கு ஒரு உத்தரவு போட்டிருந்தார். வங்கிகளில் தங்கநகை அடமானம் வைக்கும்போது வங்கிகள் அது சம்பந்தப்பட்டவரின் நகைதான் என்பதற்கான ஆவணங்களை வாங்கவேண்டும் எனச்சொல்லியிருந்தது. அதற்கு கடுமையான எதிர்ப்பு வந்ததால் அதை கைவிட்டது. அதைத்தான் தீவிரமாக அமல்படுத்தப் போகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளைவிட ஆசிய நாட்டு மக்களுக்குத்தான் அதிகளவில் தங்கத்தின் மீது மோகம் உள்ளது. தங்களின் பொருளாதார ஸ்டேட்டஸின் அடையாளமாக தங்கத்தைப் பார்க்கிறார்கள். திருமணத்தில் எவ்வளவு நகை சீர் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. சீனா அரசாங்கத்திடம் 950 மெட்ரிக் டன்னும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 850 மெட்ரிக் டன்னும் தங்கம் இருப் புள்ளது. இதைவிட அதிகமாக ஒவ்வொரு நாட்டு பொதுமக்களும் வைத்துள்ளார்கள். இந்தியாவில் தங்கம், வெள்ளியைக் கண்காணிக்கும் அமைப்பு செபியின் அனுமதிபெற்ற ஒரு அமைப்பான எம்.சி.எக்ஸ் (மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்) கணக்குப்படி, இந்திய மக்களிடம் 25,000 டன் தங்கம் உள்ளது என்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கான தங்கத்தை இந்திய மக்கள் வாங்குகிறார்கள். இந்திய மக்களிடமுள்ள தங்கத்தைத்தான் அரசு சொத்தாக மாற்ற முடிவுசெய்துள்ளது மோடி அரசாங்கம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/10/gold1-2026-02-10-14-53-51.jpg)
அதை நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாக செய்யப்போகிறார்கள். நீ தங்கம் வைத்திருக்கிறாய், அதை அடகுவைக்கவோ, விற்கவோ செல்லும்போது அது உன்னுடைய நகைதான் என்பதற்கான ஆவணமாக நகை வாங்கியதற்கான ரசீது தரவேண்டும். வங்கிகள், பிரைவேட் பைனான்ஸ் நிறுவனங்கள், அடகுக்கடைகள் அதற்கு ரசீது பெறவேண்டும் என உத்தரவிட ஆலோசித்துவருகிறது. அப்படி சொல்லும்பட்சத்தில் மக்களுக்கு பெரிய சிக்கல் உள்ளது. இந்தியாவில் தங்கம், வெள்ளி வியாபாரம் 80 சதவிகிதம் பில் இல்லாமலே நடந்தது, நடக்கிறது. மக்கள் அனைவரும் நகைக்கடைகளில் பில் இல்லாமல் தங்கம், வெள்ளி வாங்கி வைத்துள்ளார்கள். இப்போது அதை அவசரத்துக்கு அடமானம் வைக்கவேண்டும், மற்றவர்களுக்கு பரிசாகத் தரவேண்டும், குடும்ப நிகழ்வுகளுக்கு மொய்யாக வைக்கவேண்டும் என எதுவாக இருந்தாலும் பில் தரவேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டால் நாம் மீண்டும் நகைக் கடைகளுக்கு ஓடவேண்டும். அவர்கள் போலியாக பில் தரமுடியாது. நாளை ஆடிட் வந்தால் மாட்டிக்கொள் வோம் என்பதால் "3% ஜி.எஸ்.டி கட்டு, பில் தருகிறேன்' என்பார். அதைக்கூட கட்டி வாங்கிக்கொள்ளலாம். இதில் இன்னொரு சிக்கல் உள்ளது. எப்போதோ வாங்கிய நகைக்கு இப்போது எங்கே சென்று பில் வாங்குவது?
பரம்பரை பரம்பரையாக மருமகளுக்கு, மகளுக்கு என தந்துவரும் குடும்ப நகைகளுக்கு ஆவணத்துக்கு எங்கே போவார்கள்? அல்லது எங்கிருந்து பில் வாங்குவது? பரம்பரை சொத்து எனச்சொன்னால் அதற்கான ஆவணம் எங்கே? எனக் கேட்பார்கள். அதையும் தந்தால், அளவுக்கு மீறி தங்கம், வெள்ளி வைத்துள்ளாய் அதற்கு வரி கட்டு என்பார்கள். இப்படி நெருக்கடி தரவுள்ளது. பின்னர் ஆவணம் இல்லாத தங்கமெல்லாம் அரசாங்க சொத்து என வெவ்வேறு வழிகளில் அரசு எடுத்துக்கொள்ளும். இதன்மூலம் தனது கஜானாவில் தங்கத்தின் இருப்பை அதிகப்படுத்த முயல்கிறதோ என சந்தேகம் வருகிறது''’என்கிறார்.
இது சாத்தியமா என வேறுசில பொருளாதார அறிஞர்களிடம் நாம் கேட்டபோது, “"தங்கத்தின் மீதான கட்டுப்பாடு ஏற்கனவே இருக்கிறது. இப்போது பணம் இருப்பவர்கள் இதன் விலை உயர்வைப் பார்த்து தங்கத்தில், தங்க பத்திரத்தில் முதலீடு செய்கிறார்கள். ரியல் எஸ்டேட், ஷேர்மார்க்கெட் எல்லாம் டவுனாகி இருக்கிறது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தங்கமாக வாங்கி சேமித்துவைக்கிறார்கள், அதனால்தான் தங்கத்தின் விலை உயர்ந்துவருகிறது. நாட்டின் பொரு ளாதார நலனுக்காக இந்த கட்டுப்பாடு களைக் கொண்டுவருகிறோம் எனச் சொன்னால் யார் எதிர்க்கேள்வி கேட்கப்போகிறார்கள். மீறி யாராவது கேள்வியெழுப்பினால், அவர்களை தேசவிரோதி என முத்திரை குத்தினால் அடங்கிவிடப்போகிறார்கள். இந்தாண்டு அடுத்த சில மாதங்களில் நடைபெற வுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின் தங்க கட்டுப்பாடு அறிவிப்பு செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை'' என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/10/gold-2026-02-10-14-52-39.jpg)