ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டத்திற்கு சென்னைவாசிகள் தேடிப்போவது கிழக்கு கடற்கரை சாலைதான். ஈ.சி.ஆர். என்று சுருங்க அழைக்கப்பெறும் இந்த சாலை யெங்கிலும் கொண்டாட்டங் களுக்கான அத்தனை அம்சங்களும் அமைந்திருக்கின்றன. டிரைவ்-இன் தியேட்டர், டிரைவ்-இன் ஓட்டல், செல்லப் பிராணிகளுக்கென்று ரெஸ்ட் டாரண்ட், ஸ்பா, ரிசார்ட்கள் என சகல வயதினருக்கும் ஏற்ற சகல கொண்டாட்டங்களும் இருக்கின்றன. இதனால், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங் கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல், இரவு எந்நேரமும் சீறிப் பாயும். கல்லூரி மாணவர் களும், ஐ.டி. நிறுவன இளசு களும் விடிய விடிய இந்த சாலையில் பறந்துதிரிவார்கள். போதையில் இவர்கள் அதிவேக மாக செல்வதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. அதனால்தான் ஈ.சி.ஆரில் போலீஸ் பாதுகாப்பும் வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை களில் அதிகம் இருக்கும். அதை யும் மீறி விபத்துகள் நடந்து விடுகின்றன.

two

அப்படித்தான் கடந்த பிப்.24-ஆம் தேதி அன்று இரவு முழுவதும் ஈ.சி.ஆரில் கொண் டாட்டத்தை முடித்துவிட்டு அதிகாலையில் வேகமாக சென்னை நோக்கி வந்துகொண் டிருந்தது ஜூம் கால்டாக்சி. அதாவது, ஜூம் கால்டாக்சி என்றால் சைக்கிள் வாடகை, பைக் வாடகை என்பதுபோல வாடகைக் கார். டிரைவர் இல்லாமல் காரை மட்டும் வாடகைக்கு எடுத்துகொண்டு போவது. அந்த ஜூம் கால்டாக்சி உத்தண்டியில் உள்ள பி.வி.ஆர். திரையரங்கம் அருகே யூ-டர்ன் செய்தபோது, எதிரே வந்த பச-19 2205 என்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. படுகாய மடைந்த ஆட்டோ டிரைவரை பெரும்பாக்கம் தனியார் மருத் துவமனையில் அனுமதித்துவிட்டு, ஆட்டோ சேதத்தை சரி செய்வ தற்கான பணத்தையும் தந்துவிடுவ தாக காரில் வந்தவர்கள் உறுதி யளித்துக் கொண்டிருந்தபோது, போலீசார் அங்கே வந்து நின்றனர்.

அடையாறு போக்குவரத்து புலனாய்வுக் காவலர் மதியழகனும், உடன் வந்த சீருடை அணியாத போலீசாரும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். காரில் வந்தவர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் என்று தெரியவந்த தும், "ஆண்களோடு... அதுவும் இர வில் எங்கு சென்று சுற்றிவிட்டு வரு கிறீர்கள்? உங்க அம்மா, அப்பா, காலேஜ் போன் நெம்பர் கொடுங்க?'’’என்று போலீசார் மாணவி களிடம் கேட்கவும், மிரண்டு போன அவர்கள், "அப்பா, அம்மா, காலேஜுக்கு எல்லாம் தெரிஞ்சா பிரச்சினை ஆயிடும் சார். எங்க பியூச்சரும் ஸ்பாயில் ஆயிடும் சார். அவுங்களுக்கு எல்லாம் போன் பண்ண வேண்டாம் சார்'’என்று கெஞ்சியுள்ளனர். மாணவர்களும் அவ்வாறே கெஞ்சியுள்ளனர். அவர் களின் மிரட்சியையும், கெஞ்சலை யும் போலீசார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண் டிருக்கிறார்கள்.

Advertisment

tt

மாணவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்து, பெற்றோர்களுக்கு விபரம் தெரிவித்து, எச்சரிக்கை செய்யாமல், அந்த மாணவர் களையே மிரட்டி, அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்துள்ள னர். அது போதாது என்று மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாணவி யின் தோள் மீது சீருடை அணி யாத போலீஸ் கையை வைத்த தும், அவர் நெளிந்துள்ளார். அதை கொஞ்சமும் பொருட் படுத்தாத அந்த போலீஸ், "நைட் எல்லாம் என்ன செஞ் சீங்க? எங்க தூங்குனீங்க?'’என்று கேட்கவும், அவர் கூனிக்குறுகி நின்றுள்ளார். அப்படியும் விடாமல், ‘"மத்தியானம் வா... அப்போதான் கார் கிடைக் கும்'’என இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார் அந்த போலீஸ்.

இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், தங்களுக்கு தெரிந்த ஈஞ்சம்பாக் கத்தைச் சேர்ந்த பொன். சேகர் என்பவருக்கு போன் செய்து விபரத் தை கூறியதும், அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

Advertisment

"பாதிக்கப்பட்டவர் புகார் கூட தராமல் எப் படி மாணவர்களை மிரட் டினீர்கள்? விபத்து என் றால் மாணவனிடம் லைசன்ஸ் உள்ளதா? டி.டி.யில் (மது போதை) உள்ளாரா என்று செக் செய்யணும். அதை விட்டு விட்டு அவர்களை ஏன் மிரட் டிக்கொண்டிருக்கிறீர்கள்?'’’என்று பொன்.சேகர் எழுப்பிய கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாமல், மாணவர்களை போலீ சார் விடுவித்துள்ளனர்.

நடந்த சம்பவத்தை நம் மிடையே பொன்.சேகர் சொல் லியதையடுத்து, மதியழகனிடம் நாம் விளக்கம் கேட்டபோது, ""வண்டிய வந்து எடுத்துட்டு போகச்சொல்லுங்க. விசயத்த பெருசாக்க வேணாம்''’’என்று சொன்னார். ""பணம் ஏன் வசூல் செய்தீர்கள்? வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை?'' என்று கேட்ட போது, பதில் சொல்லாமல் சைலண்டாக இருந்துவிட்டு, லைனை துண்டித்தார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக அடையாறு போக்கு வரத்து புலனாய்வு ஆய்வாளர் ஷோபனாவை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவே இல்லை.

"ஈ.சி.ஆரில் செல்லும் காதல் ஜோடிகளிடமும், கல் லூரி மாணவ, மாணவிகளிடமும் வாகன சோதனை, அபராதம் என்ற பெயரில் போக்குவரத்து போலீசார் மெகா வசூல் செய் வதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வரு கின்றன. அப ராத தொகை யை பணமாக வசூல் செய்யக் கூடாது. மெஷின் மூல மாகத்தான் வசூல் செய்ய வேண்டும்' என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட் டுள்ளார். ஆனால், போக்கு வரத்து போலீசார் இந்த உத்தரவை ஃபாலோ செய்வ தில்லை என்றே பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மாநகர கூடுதல் ஆணையர் (போக்கு வரத்து) அருணிடம் இது குறித்து விளக்கம் கேட்க அவரை தொடர்பு கொண்ட போது... அவர் செல்போனை எடுக்கவில்லை.இந்த விவகாரத்துக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

-அரவிந்த்