செல்போன் சாட்டிங்கிற்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை இளம்பெண் திட்டம்போட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்குப் பின்புறமுள்ள மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (39). சொந்த அக்காள் மகள் ஷாலினியையே பிரபு திருமணம் செய்து கொண்டார்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி, நள்ளிரவுக்கு மேல், திடீரென்று ஷாலினி கத்தி கூச்சல் போட்டுள்ளார். முதல் தளத்திலிருந்த தன் தாயார் மற்றும் பாட்டியிடம், மர்ம நபர்கள் இருவர் வீட்டுக்குள் புகுந்து தங்களைத் தாக்கிவிட்டு நகைகளை பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாக பதற்றத்துடன் கூறினார். 108 ஆம்புலன்ஸுக்கும் தகவலளித்து வரவழைத்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மூச்சுப் பேச்சின்றிக் கிடந்த பிரபுவை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபுவின் தாயார் துளசி, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார். காவல்நிலையம் அருகிலேயே இப்படியொரு துணிகரச் சம்பவம் நடந்ததால், இதுகுற
செல்போன் சாட்டிங்கிற்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை இளம்பெண் திட்டம்போட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்குப் பின்புறமுள்ள மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (39). சொந்த அக்காள் மகள் ஷாலினியையே பிரபு திருமணம் செய்து கொண்டார்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி, நள்ளிரவுக்கு மேல், திடீரென்று ஷாலினி கத்தி கூச்சல் போட்டுள்ளார். முதல் தளத்திலிருந்த தன் தாயார் மற்றும் பாட்டியிடம், மர்ம நபர்கள் இருவர் வீட்டுக்குள் புகுந்து தங்களைத் தாக்கிவிட்டு நகைகளை பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாக பதற்றத்துடன் கூறினார். 108 ஆம்புலன்ஸுக்கும் தகவலளித்து வரவழைத்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மூச்சுப் பேச்சின்றிக் கிடந்த பிரபுவை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபுவின் தாயார் துளசி, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார். காவல்நிலையம் அருகிலேயே இப்படியொரு துணிகரச் சம்பவம் நடந்ததால், இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார் கமிஷனர் நஜ்மல்ஹோடா.
பிரபுவின் மனைவி ஷாலினியிடமிருந்து விசாரணையைத் தொடங்கினர். மர்ம நபர்கள் தாக்கியதாகச் சொன்ன ஷாலினியின் உடலில் காயங்களோ, சிறு கீறல்களோ இல்லை. அவருடைய தாலிக்கொடியும் கொள்ளை போகாமல் இருந்தது.
மர்ம நபர்கள் தாக்க வந்ததால் தான் கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டதாகவும், அதனால் அவர்கள் தன்னை விட்டுவிட்டு கணவரைக் கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளைப் பறித்துச் சென்றதாகக் கூறினார் ஷாலினி. இப்படியான முரணான பேச்சுகள் ஷாலினி மீது சந்தேகத்தை வலுப்படுத் தியது.
வாழை இலை வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கமாக இரவு 9.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடும் பிரபு, இரண்டாம் தளத்திலுள்ள தன் வீட்டுக்குச் செல்லும்போது, அங்குள்ள நுழைவுவாயில் கதவை பூட்டி விட்டுத்தான் செல்வார். வீட்டுக் குள் யார் வந்தாலும் முன்பக்கத் தில் உள்ள நுழைவுவாயில் வழியாகத்தான் வரமுடியும். மேலும், திருட வருபவர்கள் எதற்காக இரண்டாம் தளத்தைத் தேர்வு செய்யவேண்டும் என்பதும் ஷாலினி மீது சந்தே கத்தை வலுக்கச் செய்தது.
அக்கம்பக்கத்தில் விசாரித்த போது கொலையுண்ட பிரபு, எந்த வம்புதும்புக்கும் போகா தவர் என்பதும், அவருக்கும் ஷாலினிக்கும் கடந்த ஆறு மாதமாகவே சுமுகமான உறவில்லை என்பதும் தெரிய வந்தது. பிரபுவின் தாயாரும் அதை உறுதிப்படுத்தினார். இதையடுத்துதான் காவல் துறையினரின் சந்தேகப் பார்வை ஷாலினி மீது தீவிரமானது. காவல்துறையின் வழக்கமான ட்ரீட்மெண்ட் தொடங்கிய பிறகே, தானும், தன் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரைத் தீர்த்துக்கட்டியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி தனிப்படை காவல்துறையிடம் பேசினோம்.
அம்மாவின் வற்புறுத்தலால் தன் சொந்த அக்காள் மகள் ஷாலினியை திருமணம் செய்துகொண்டார் பிரபு. பிரபுவுக்கும், ஷாலினிக்கும் 17 வயது வித்தியாசம். ஷாலினிக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை. கல்யாணமான பிறகும் கல்லூரி யில் பி.பி.ஏ. படிப்பைத் தொடர்ந்தார் ஷாலினி. அப் போது அங்கு சில மாணவர் களுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். எப்போது பார்த்தாலும் பேஸ்புக்கில் ஆண் நண்பர்களுடன் சாட்டிங்கில் இருந்ததைக் கண்டித்ததுடன் அவரது செல்போனை பறிமுதலும் செய்துள்ளார் பிரபு.
கல்லூரி நண்பர் ஒருவருடன் ஷாலினிக்கு காதல் இருந்துவந்தது. ஒரு கட்டத்தில் ஷாலினி திருமண மானவள் என்பது தெரிந்ததால் அந்த காதலனும் விலகிவிட்டான். இந்த நிலையில் தான் பேஸ்புக் சாட்டிங் மூலம் துறையூரைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் அப்பு என்கிற காம ராஜுடன் காதல் மலர்ந்துள்ளது. பிடிக்காத கணவனுடன் வாழ்வதைவிட கஷ்டமோ நஷ்டமோ பிடித்த காதலனுடன் வாழ்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் ஷாலினி'' என்கிறார்கள் காவல்துறையினர்.
இதையடுத்து, ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கெல்லாம் அப்புவை வீட்டுக்கு வரவழைத்த ஷாலினி, அவரை வீட்டு மொட்டை மாடியில் குடிநீர் டேங்கருகில் மறைந்துகொள்ளச் செய்திருக் கிறார். அன்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிரபு, வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை யறிந்த ஷாலினி, இரவு 11.30 மணியளவில் கள்ளக்காதலனை பெட்ரூமுக்கு வரவழைத்தார்.
கணவனை தூக்கத்திலேயே தீர்த்துக்கட்ட திட்டமிட்டு தூக்கத்திலிருந்த பிரபுவின் மார்புமீது ஏறி உட்கார்ந்து கொண்ட அப்பு, முகத்தை பெட்ஷீட்டால் மூடி, மூக்கையும், வாயையும் பொத்திக்கொண்டார். இருவரும் சேர்ந்து பிரபுவுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர். பிரபு அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகிய வற்றை எடுத்துக் கொண்டு, நகைக்காக கொலை நடந்தது போல சித்தரிக்க முயன்றுள்ளனர். அதன்பிறகே ஷாலினி அப்புவை பத்திரமாக வழியனுப்பி வைத்துவிட்டு, மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்கியதாக நாடகமாடி யிருக்கிறார்.
இதுகுறித்து அம்மா பேட்டை காவல் ஆய்வாளர் கணேசனிடம் கேட்டபோது, ''பிடிக்காத கணவன், மனைவி சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல வழிவகைகள் இருக்கின்றன. அதை விட்டுவிட்டு சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டால் அனைவரின் வாழ்க்கையும் கெட்டுவிடும். இந்த வழக்கில் பிரபு கொல்லப்பட்டு விட்டார். ஷாலினியும், காதலன் அப்புவும் கொலைவழக்கில் சிறையி லிருக்கிறார்கள். ஷாலினியின் ஒன்றரை வயது குழந்தையோ அனாதையாகிவிட்டது,'' என்றார்.