Advertisment

காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை! நெல்லை கொடூரம்!

dd

நெல்லை பேட்டை அருகே யுள்ள திருப்பணி கரிசல்குளம் கிராமத் தின் கூலித் தொழி லாளியான மாரியப் பன்லிசுப்புலட்சுமி தம்பதியரின் 2-வது மகள் சந்தியா. சந்தியா நெல்லை டவுனில் இருக்கும் அம்மன் சன்னதியிலுள்ள ஒரு பேன்சி குடோனில் வேலை பார்த்திருக்கிறார்.

Advertisment

சந்தியாவின் குடோன் அருகிலிருக்கும் பேன்சி ஸ்டோர் கடையில் நாங்குநேரிப் பக்கமுள்ள முனைஞ்சிபட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் வேலைபார்த்து வந்திருக்கிறார். இவரது பேன்சி கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், அதற்குரிய பணத்தைக் கொட

நெல்லை பேட்டை அருகே யுள்ள திருப்பணி கரிசல்குளம் கிராமத் தின் கூலித் தொழி லாளியான மாரியப் பன்லிசுப்புலட்சுமி தம்பதியரின் 2-வது மகள் சந்தியா. சந்தியா நெல்லை டவுனில் இருக்கும் அம்மன் சன்னதியிலுள்ள ஒரு பேன்சி குடோனில் வேலை பார்த்திருக்கிறார்.

Advertisment

சந்தியாவின் குடோன் அருகிலிருக்கும் பேன்சி ஸ்டோர் கடையில் நாங்குநேரிப் பக்கமுள்ள முனைஞ்சிபட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் வேலைபார்த்து வந்திருக்கிறார். இவரது பேன்சி கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், அதற்குரிய பணத்தைக் கொடுப்பதற்காக செல்லும் போதும் ராஜேஷ்கண்ணன் சந்தியாவிடம் பேசிவந்திருக்கிறார். நாளாவட்டத்தில் இவர்களின் பழக்கம் நீடித்து இருவரும் தங்களது செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசிவந்திருக்கின்றனர்.

nn

இந்தநிலையில், இவர்களின் காதல் பற்றிய சமாச்சாரங்கள் இருவரின் வீட்டாருக்கும் தெரியவந்திருக்கிறது. சந்தியா வீட்டாருக்கு, ராஜேஷ்கண்ணன் வேறு சமூகம் என்ற விவரம் தெரியவரவே, சந்தியாவை வீட்டில் கண்டித்துள்ள னர். மறுபேச்சுப் பேசாத சந்தியாவும் ராஜேஷ் கண்ணனிடம் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, பேச்சைத் துண்டித்துக்கொண்டார்.

சந்தியாவின் இந்த முடிவால் மனமுடைந்து போன ராஜேஷ்கண்ணன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றிருக்கிறார். கடந்தவாரம் ராஜேஷ்கண் ணன், சந்தியாவிடம் செல்போனில் பேசியிருக்கிறார். அப்போது, "இனிமேல் என்னிடம் பேசவேண்டாம். என்னைப் பார்க்கவும் வரக்கூடாது'' என்று கண்டிப் புடன் பதில் சொன்ன சந்தியா, அவரின் நம்பரை ப்ளாக் செய்துவிட்டாராம்.

இந்தச் சூழலில் ராஜேஷ்கண்ணன் ஒரு முடிவுடன் சந்தியா வேலை பார்க்கிற குடோனுக்கு, அக்டோபர் 2 அன்று சென்றி ருக்கிறார். அங்கிருந்த சந்தியாவிடம், "நாம் முன்புபோல் பழகவேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்துப் பேசவே, சந்தியா மறுத்திருக்கிறார்.

இருவருக்குமிடையே தகராறு மூண்டிருக் கிறது. இதனால் ஆத்திரமாகிப் போன ராஜேஷ் கண்ணன் தான் மறைத்துவைத்திருந்த வெட்டுக் கத்தியால், சந்தியாவின் தலை, கழுத்துப் பகுதிகளில் வெட்டிவிட்டுத் தப்பியோடியிருக்கிறார். கதறியபடி ரத்தச் சகதியில் சரிந்த சந்தியாவின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்திருக்கிறது.

அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த மற்ற பெண்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட, தகவல் போய் சம்பவ இடம் வந்த மாநகர துணை போலீஸ் கமிசனர் சரவணகுமார், டவுன் உதவி கமிசனர் சுப்பையா, இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி உள்ளிட்ட போலீசார் உடலைமீட்டு உடற்கூராய் விற்காக அனுப்பி விசாரணை நடத்தினர்.

தகவலறிந்து திரண்டுவந்த கிராமத்தினர் உறவினர்கள் டவுன் சுவாமி சன்னதி சாலையில் மாலை 5 மணிக்கு மேல் மறியலில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் தனிப்படையினர் ராஜேஷ்கண்ணனைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

-செய்தி & படங்கள்: ப.இராம்குமார்

nkn071023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe