Advertisment

இளைஞரணியை திமுக எம்.எல்.ஏ. மதிப்பதில்லை!’ -விருதுநகர் மாவட்ட திகுதிகு!

ss

சென்னை -அண்ணா அறிவாலயம் -கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தல் மேற்பார்வை -ஒருங் கிணைப்புக்குழு, தொகுதி வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. ஒருங்கிணைப் புக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய - நகர - பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

Advertisment

vv

சென்னையில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளை ஒருங்கிணைப்புக்குழு சந்தித்தபோது கே.என்

சென்னை -அண்ணா அறிவாலயம் -கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தல் மேற்பார்வை -ஒருங் கிணைப்புக்குழு, தொகுதி வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. ஒருங்கிணைப் புக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய - நகர - பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

Advertisment

vv

சென்னையில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளை ஒருங்கிணைப்புக்குழு சந்தித்தபோது கே.என். நேரு, "விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் ஒரு புகார் கொடுத்திருக் கிறார். அதில், இளைஞரணியை விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மதிப்ப தில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்''’என்று கூற, எம்.எல்.ஏ. சீனிவாசன் எழுந்து, "அப்படி கிடையாது''’என்று மறுப்பு தெரிவிக்க, விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரனும், தங்கம் தென்னரசுவும், எங்களது விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கட்சியில் எந்தப் பிரச் சனையும் கிடையாது.

மாவட்டத்தை நூற்றுக்கு நூறு சரியா வச்சிருக்கோம். எம்.எல்.ஏ. சீனிவாசன் கரெக்டா நடக்கிறவரு. இளைஞரணி கிருஷ்ணகுமார் எப்படிப்பட்டவர் என்பது கட்சியின ருக்குத் தெரியும். இவரைப் போன்றவர்களின் புகாருக்கு மதிப்பளித்து கேள்வி கேட்காதீங்க''’என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது அளித்த புகார் குறித்து கேட்பதற்காக விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமாரை பலமுறை தொடர்புகொண்டோம். குறுந்தகவலும் அனுப்பினோம். ஏனோ தொடர்ந்து நம்மைத் தவிர்த்தார். இந்நிலையில் விருதுநகர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் பேசினோம். “"நான் இளைஞரணியை மதிப்பதில் லைன்னா எப்படி? எனக்குத் தெரிந்து அப்படியொன்றும் இல்லை. நேற்றுவரைக்கும் கிருஷ்ணகுமார் என்கூடத்தான் இருந்தாரு. எல்லாரும் ஒண்ணா சேர்ந்துதான் கட்சி வேலை பார்க்கிறோம். அவர் என் மேல புகார் கொடுத்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது''’என்று ஒரே போடாகப் போட்டார்.

vv

Advertisment

‘கிருஷ்ணகுமார் போன்றவர்களின் புகாரை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம் என்று விருதுநகர் மாவட்ட தி.மு.க. அமைச்சர்கள் ஏன் கூறினார்கள்?’ என்ற கேள்விக்கு விருதுநகர் உ.பி. ஒருவர், "அதுவந்து எப்படி சொல்லுறதுன்னே தெரியல. கிருஷ்ணகுமாரோட டிசைனே அப்படித்தான். பழைய விவகாரம்தான். ஆனா ரொம்பவும் கசமுசா சமாச்சாரம். வழக்குலகூட சிக்கினாரு. கட்சியும், பெர்சனலா எப்படியும் இருந்துட்டு போகட்டும். ஒழுங்கா கட்சி வேலை பார்த்தா போதும்னு கிருஷ்ணகுமாரை கண்டுக்காம விட்ருச்சு. இளைஞரணி பொறுப்புல இருந்துகிட்டு பெரிசா கட்சி வேலை எதுவும் பார்க்கிற மாதிரி தெரியல. எம்.எல்.ஏ. மேல புகார் கொடுத்தாவது மேல வரணும்னு பார்த்தாரு. அதுவும் முடியல. அதேநேரத்துல எம்.எல்.ஏ. சீனிவாசனையும் ரொம்ப நல்லவர்னு சொல்லிற முடியாது''’என்றார்.

தி.மு.க.வில் பல அணிகள் இருந்தாலும் இளைஞரணியே மிகவும் சக்திவாய்ந்த அணியாகக் கருதப்படுகிறது. விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சராக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகித்துவரும் நிலையில், அவர் மேடையில் இருக்கும்போதே, இளைஞரணியை சட்டமன்ற உறுப்பினர் மதிப்பதில்லை’ என்று புகார் எழுந்தது, கவனம் ஈர்ப்பதாக உள்ளது.

nkn070224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe