அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முகமது மெஹபுல் ஹூசைன் என்பவர் திருநெல் வேலியில் தங்கியிருந்து, வட மாநிலத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசர்குளம் பகுதியில் செயல் பட்டுவரும் ஹாலோ பிளாக் செங்கல் தயாரிக் கும் நிறுவனத்தில், அஸ் ஸாம் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணையும் அவரின் கணவரையும் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாலும், அவ்வேலையிலிருந்து விலகி, கேரளாவில் வேலை தேடப்போவதாக ஏஜெண்ட் முகமது
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முகமது மெஹபுல் ஹூசைன் என்பவர் திருநெல் வேலியில் தங்கியிருந்து, வட மாநிலத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசர்குளம் பகுதியில் செயல் பட்டுவரும் ஹாலோ பிளாக் செங்கல் தயாரிக் கும் நிறுவனத்தில், அஸ் ஸாம் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணையும் அவரின் கணவரையும் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாலும், அவ்வேலையிலிருந்து விலகி, கேரளாவில் வேலை தேடப்போவதாக ஏஜெண்ட் முகமது மெஹபுல் ஹூசைனிடம் கூறியுள்ளனர். அப்போது அந்த ஏஜெண்டுக்கும், அஸ்ஸாம் தம்பதிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த தம்பதிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் ஒரு கட்டத்தில் அந்த ஏஜெண்ட், திருநெல்வேலி செல்வதற்கு தானே ஆட்டோ ஏற்பாடு செய்வதாகக்கூறி ஆட்டோவை அனுப்பி வைத்துள்ளார். 14ஆம் தேதி பிற்பகலில், அந்த ஆட்டோவில் தெற்கு காரசேரி - சிவந்திபட்டி இடையே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே பைக்கில் வந்த ஏஜெண்ட் முகமது மெகபூல் ஹூசைன், அவரது நண்பர்களான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள் இருவர் என மூன்று பேரும் ஆட்டோவை நிறுத்தி, வேலை பார்த்த இடத்தில் பணத்தை திருடிவிட்டு வந்ததாக ஆட்டோ டிரைவரிடம் கூறி, அவர் களை ஆட்டோவிலிருந்து இறக்கிவிட்டு, ஆட்டோவை மட்டும் அனுப்பி விட்டனர்.
மொழி தெரியாததால் கணவன் மனைவி இருவரும் கீழே இறங்கி திகைத்து நின்றுள்ளனர். அவர் களை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, இளம் பெண்ணின் கணவரை திடீரென சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஒருகட்டத்தில் தாக்குவதை நிறுத்திவிட்டு, கண வரின் கண் எதிரிலேயே மூன்று பேரும் சேர்ந்து அந்த இளம்பெண் ணை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சில மணி நேர இடைவெளிக்குப்பின், அதே ஆட்டோவை மீண்டும் வரவழைத்து, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் எதிரில் ஜங்ஷன் பகுதியில் இறக்கிவிடச் சொல்லிவிட்டு, மூன்று பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.
ஆட்டோவில் திருநெல்வேலி ஜங்ஷன் சென்று இறங்கியதும், போலீஸ் ஒருவரிடம் தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து தெரி விக்க, சம்பவம் நடந்த பகுதி ஸ்ரீவைகுண்டம் என்பதால் அங்கே சென்று புகார் கொடுங்கள் என வழியனுப்பி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகாரளிக்க, ஷாக்கான ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசார், பாதிக்கப்பட்ட அப்பெண்ணை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஏஜென்ட் முகமது மெஹபூல் ஹுசைன் மற்றும் அஸ்ஸாம் மாநி லத்தை சேர்ந்த 16 வயது இளைஞர் கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான முகமது மெஹபூல் ஹூசைனை பாளையங் கோட்டை மத்திய சிறையிலும், சிறுவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.
கணவர் கண் எதிரிலேயே இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்ப வம், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
-மூர்த்தி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us