தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கஸ்தூரிரங்காபுரம் காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக ஜனவரி 5ஆம் தேதி, மாலையில் கழுகுமலை போலீசுக்கு  தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. 

Advertisment

தொடர் விசா ரணையில் கொல்லப் பட்ட பெண், விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யத்தை அடுத்துள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகளான 19 வயது உமா என்பதும், அவர் பாறைப்பட்டியிலுள்ள தனியார் கோச்சிங் சென்டரில் போலீஸ் தேர்வுக்கு படித்து வந்ததையும் கண்டறிந்தனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷ னில், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சரண்டராகி, தனது காதலியான உமாவை காட்டுப் பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக  ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, வெம்பக் கோட்டை போலீசார் ராஜேஷை கைதுசெய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று, அப்பகுதியில் விசாரணை நடத்திவந்த கழுகுமலை போலீசாரிடம் ராஜேஷை ஒப்படைத்தனர். இளம்பெண்ணின் சடலத்தை  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

Advertisment

போலீசார் நடத்திய விசாரணையில் உமாவும், ராஜேசும் பாறைப்பட்டியிலுள்ள தனியார் கோச்சிங் சென்டரில் போலீஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளனர். தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், பின்னர் அது காதலாக மாறி நெருங்கிப் பழகி வந்துள்ளனர். 

உமா இன்ஸ்டாகிராமில் நிறைய நண்பர்களோடு பழகிவருவது குறித்து இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வருவதும், பின்னர் சமா தானமாவதுமாக இருந் துள்ளனர். இந்நிலையில், இருவரும் பிரிந்து விடலாமென்று ராஜே ஷிடம் உமா கூறியிருக் கிறார். உமாவை சமா தானப்படுத்துவதற்காக, கடந்த ஜனவரி 5ஆம் தேதி, உமாவை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு, கஸ்தூரிரங்காபுரம் கிராமத்தை அடுத்துள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று, அவரோடு திருமணம் குறித்து பேசியிருக்கிறார். உமா மறுக்க, 8 மாதமாக என்னை காதலித்துவிட்டு இப்போது வேண்டாமென்று சொல்கிறாயா? இன்ஸ்டாகிராம் ப்ரண்ட்ஷிப்தான் பிடிச்சிருக்கா? என வாக்குவாதம் செய்த ராஜேஷ், உமா அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்திருக்கிறார்.

Advertisment

 உடல் கிடந்த காட்டுப்பகுதி கழுகுமலை காவல் நிலைய எல்கை எனத் தெரிந்ததால், கழுகுமலை போலீசார் ராஜேஷை கைது செய்தனர். போலீஸ் கனவோடிருந்த பெண்ணின் எதிர்காலம், காதலனின் சந்தேகத்தால் சிதைந்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-மூர்த்தி