Advertisment

இடதுசாரிகளின் இளம்படை! பொதுத் தொகுதியில் பழங்குடி வேட்பாளர்! -கேரள உள்ளாட்சிக் களம்!

dd

ங்கக் கடத்தல் விவகாரத் தில் கடும் நெருக்கடியைச் சந்தித்த கேரள இடதுசாரி அரசின் மீதான மக்களின் பார்வையைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது உள்ளாட்சித் தேர்தல் களம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான லீப்புமோள், பொதுத் தொகுதியில் களமிறங்கி, எதிரணி வேட்பாளர்களை மிரளவைத்து வரு கிறார். கேரள இடதுசாரி எல்.டி.எஃப். கூட்டணி, வரும் டிசம்பர் 8-ஆம் தேதி நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தன் பலத்தைக் காட்ட அதிரடியான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

Advertisment

அங்கிருக்கும் கொல்லம் மாவட்ட குளத்துப்புழா நகரத்தின் அருகே இருக்கிறது கடமான் கோடு என்கிற மலைக்கிராமம். இது நிலத்தாலும் ஒதுக்கி ஓரம்கட்டப்பட்ட ரிமோட் ஏரியா. இங்கு 20 சதம் பேர் மலைவாழ் பழங்குடியினர். மீதமுள்ளவர்களில் உயர் சாதியினரான நாயர்கள் சரிபாதியாக இருக்க, அடுத்து ஈழவா மற்றும் பிற சமுதாய மக்கள் வசிக்கிறார்கள். இங்கு வாக்களர்கள் எண்ணிக்கை 1200.

dd

விவசாயத்தை நம்பியிருக்

விவசாயத்தை நம்பியிருக்கும் இம்மக்கள், சுகாதாரம், மருத்துவம், வியாபாரம், கல்வி என அனைத்துக்கும் 15 கி.மீ. தொலைவில் இருக்கும் அஞ்சல் நகருக்குதான் செல்ல வேண் டும். தனியார் ஜீப் பயணம் என்றால் அதன் கட்டணம் இவர்களின் சக்தியையும் தாண்டியதாய் மிரட்டிவந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சமீப காலமாகத்தான் இங்கே பேருந்து போக்குவரத்தே தொடங்கியிருக்கிறது.

இந்தப் பொதுவார்டின் உறுப்பினர் பதவி, தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் வசத்திலேயே இருக்கிறது. அதன் சிட்டிங் உறுப்பினராக இரண்டாவது முறையாக நீடிக்கும் சந்தோஷ், வசதியானவர். அவரே இப்போது மூன்றாவது முறையாகவும் களத்தில் இருக்கிறார். அவரோடு பா.ஜ.க. வேட்பாளர், சுயேட்சை என்று நாயர் சமூகத்தைச் சேர்ந்த மூவரும், அவர்கள் தரப்பு வாக்குகளைக் குறிவைத்து களமிறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் கடமான் கோடின் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திருமணமாகாத 21 வயதேயான இளம்பெண் லீப்புமோளை, சி.பி.எம். தனது சார்பில் களமிறக்க, அங்கே காங்கிரஸுக்கும் சி.பி.எம்.மிற்கும் இடையே நீயா? நானா? என்கிற போட்டி உருவாகி, அனலைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

லீப்புமோள் திடீர் அரசியல்வாதியல்ல. எஸ்.எப்.ஐ. இயக்கத்தில் மாணவப் பருவத்திலேயே இவர் செயல்பட்ட வர். தன் கல்லூரிக் காலத்தில் மாணவர்களைத் திரட்டிப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். இவர் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகே மெல்ல மெல்ல போக்குவரத்து வசதிகள் இங்கே தொடங்கி யிருக்கிறது. எனவே, இப்பகுதி மக்களின் பாசத்திற்குரியவராகத் திகழ்கிறார் லீப்புமோள். உள்ளூர் அரசியல் தொட்டு உலக அரசியல்வரை இவர் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

கொரோனாவின் மிரட்டலால், தனி ஆளாக மலையகப் பகுதியில் நடந்தே சென்று ஆதரவு திரட்டுகிறார் லீப்புமோள். வழியில் செல்வோரும் இவரது பிரச்சாரத்துக்கு அன் போடு செவி சாய்க்கிறார்கள். ""நான் மற்றவர்களைப் போல ஓட்டுக்காக உங்கள் முன் நடிக்கமாட்டேன். வறுமையில் வளர்ந்த உங்களில் ஒருத்தி நான். நம் கிராமத்திற்கு என்ன தேவை என்று அறிந்தவள். இதுவரை எட்டிப் பார்க்காத பேருந்து வசதியைக் கொண்டு வந்ததைப் போல்... கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை நிச்சயம் கொண்டு வருவேன்''’’என்று வெண்கலக் குரலில் கலகலப்பாகப் பேசுகிறவர், ஒவ்வொரு வீட்டின் அடுக்களைவரை போய் ஆதரவு திரட்டுகிறார். .

Advertisment

dd

அவருக்கு ஆதரவாக வீசும் அலை, அங்கே காங்கிரஸின் சந்தோஷுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறதாம். காரணம் வார்டிற்கு அவர் எதுவும் செய்யாதவர் என்ற அதிருப்தி அலையும் அங்கே பலமாக வீசுகிறது.

லீப்புமோளை பொதுத்தொகுதியில் களமிறக்கிய காம்ரேடுகளோ, “""அவர் வென்றாலும் தோற்றாலும் எங்களுக்குப் பெருமைதான். இளைஞர்கள்தான் வருங்காலம்.. அவர்களின் கரங்களில்தானே கட்சியும் அதிகாரமும் இருக்க வேண்டும். இவரைப் போலவே, பல இளம் பெண்களும், இளைஞர்களும் உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் சார்பில் நிறுத்தப்பட்டிருக் கிறார்கள்''’என்பதோடு... ""கொல்லம் மாநாகரட்சியின் 52வது வார்டில் கவுன்சிலர் போட்டிக்கு கோவில் பூசாரியின் மகளான 22 வயது இளம் பெண் பவித்ராவை நிறுத்தியிருக்கிறது எல்.டி.எப். முன்பு அச்சுதானந்தன் முதல்வராயிருந்தபோது உள்ளாட்சித் தேர்தலில் 51 சதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அறிவித்தார். ஆனால் தற்போது இந்தத் தேர்தலில் பினராய் விஜயன் அரசு 55 சதவிகிதம் பெண்களுக் கென்று ஒதுக்கியிருக்கிறது. அதனால் இந்த முறை இளம்பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டி ருக்கிறது''’என்கிறார்கள் உற்சாகமாக.

இப்போதே எல்.டி.எப். அணியின் சார்பாக நின்ற 22 உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டிருப்பது இவர்களை தெம்பாக்கியிருக்கிறது. பல இடங்களிலும் இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைப் போலவே சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் கேரளத்தில், அதற்கு முன்பாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலும் அதில் இடதுசாரி வகுக்கும் வியூகங்களும் எல்லாரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

-பரமசிவன்

படங்கள்: இ.ராம்குமார்

nkn091220
இதையும் படியுங்கள்
Subscribe