Advertisment

கஞ்சா போதையில் இளைஞர் சமுகம்! -பதறும் பொதுமக்கள்

ss

மிழ்நாட்டில் கஞ்சா விற்பனையைத் தடுக்க தமிழக முதல்வரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தா லும், கஞ்சா போதையில் நடக்கும் குற்றங் களும், பிரச்சனைகளும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. கும்பகோணத்தில் கஞ்சா இளைஞர்கள், போலீசாரையும், போக்கு வரத்து ஊழியர்களையும் தாக்கியிருப்பது பொதுமக்களைப் பதறச்செய்துள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் நகரத்திற்குள் வந்தது ஒரு அரசுப் பேருந்து. கஞ்சா போதையில் இருந்த எட்டுப் பேர் கொண்ட இளைஞர் கும்பல் அந்தப் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகரப் பேருந்து என்பதால் பெண்களே அதிகம் இருந்துள்ளனர். ஒரு கட் டத்தில் எட்டுப்பேரும் சேர்ந்து ஓட்டுநரை யும், நடத்துனரையும் கீழே இழுத்துப்போட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட பேருந்தில் இருந்த பெண்களும், கடை வீதியில் இருந்த பொதுமக்களும் பதறினர்.

dd

இந்த கொடூர சம்பவத்தை அந்த வழியாக வந்த செய்தியாள

மிழ்நாட்டில் கஞ்சா விற்பனையைத் தடுக்க தமிழக முதல்வரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தா லும், கஞ்சா போதையில் நடக்கும் குற்றங் களும், பிரச்சனைகளும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. கும்பகோணத்தில் கஞ்சா இளைஞர்கள், போலீசாரையும், போக்கு வரத்து ஊழியர்களையும் தாக்கியிருப்பது பொதுமக்களைப் பதறச்செய்துள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் நகரத்திற்குள் வந்தது ஒரு அரசுப் பேருந்து. கஞ்சா போதையில் இருந்த எட்டுப் பேர் கொண்ட இளைஞர் கும்பல் அந்தப் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகரப் பேருந்து என்பதால் பெண்களே அதிகம் இருந்துள்ளனர். ஒரு கட் டத்தில் எட்டுப்பேரும் சேர்ந்து ஓட்டுநரை யும், நடத்துனரையும் கீழே இழுத்துப்போட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட பேருந்தில் இருந்த பெண்களும், கடை வீதியில் இருந்த பொதுமக்களும் பதறினர்.

dd

இந்த கொடூர சம்பவத்தை அந்த வழியாக வந்த செய்தியாளர்கள் இருவர் படம் பிடித்துள்ளனர். இதனைக் கண்டு ஆத்திர மடைந்த அந்த இளைஞர்கள் செய்தியாளர் களைத் தாக்கியதோடு அவர்களின் செல் போன்களையும் பிடுங்கி உடைத்துள்ளனர். அரசு ஊழியர்களும், செய்தியாளர்களும் தாக்கப்படுவதைக் கண்ட பொதுமக்கள், கஞ்சா போதை இளைஞர்களைப் பிடிக்க முயற்சி செய்தனர். அவர்களால் அந்த இளைஞர்களைப் பிடிக்க முடியவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா இளைஞர்களின் தாக்குதலால் காயமடைந்த போக்குவரத்து ஊழியர்களும், செய்தியாளர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய எட்டுபேரும் 24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்பதும், அவர்கள் முழு கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

Advertisment

மயிலாடுதுறையை அடுத்துள்ள சேந்தங் குடியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனியார் சிட்பண்ட் ஒன்றில் வசூல் செய்யும் வேலை செய்துவருகிறார். மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்த அதே நாளில் ஆனதண்டவபுரம் கிராமத் திற்கு இரு சக்கர வாகனத்தில் வசூலுக்காகச் சென்றார். ஜெகநாதனின் வாகனம் பஞ்சரானதால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளை ஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு மயிலாடுதுறை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது கழுகாணி முட்டம் அருகே சென்றபோது இரண்டு சிறுவர் கள் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி யுள்ளனர். அவர்களுக்கும் லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்றவர், ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் டூவீலரை நிறுத்தி மூன்று இளைஞர் களும் சேர்ந்து ஜெகநாதனை அடித்து உதைத்து அவரிடமிருந்த பணம், செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பியுள்ளனர். அந்த வழியாக வந்தவர் கள் மூவரையும் விரட்டிச் சென்றதில் ஒருவரை மட்டுமே பிடிக்கமுடிந்தது. அவரை காவல்துறை யினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத் திய விசாரணையில் கஞ்சா வாங்க பணமில்லாத தால் இப்படிச் செய்ததாகக் கூறியுள்ளனர். மூன்று பேரில் ஒருவன் சிறுவன் என்பதால் சீர்திருத்தப் பள்ளியிலும், மீதமுள்ள இரண்டு பேரையும் மயி லாடுதுறை கிளைச் சிறையிலும் அடைத்துள்ளனர்.

"கஞ்சா போதை தலைக்கு ஏறியதால் இதுபோன்ற தாக்குதல்களும், அவலங்களும் அரங்கேறிவருகிறது. போதைப்பொருட் களின் விற்பனையை இனம்கண்டு ஒழித்தால் மட்டுமே வருங்காலத்தில் இளைஞர்களையும், போதை இளைஞர் களிடமிருந்து சமுகத்தையும் காப்பாற்ற முடியும், போதைப் பொருள் குறித்தான விழிப்புணர்வை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும் போதைக்கு அடிமையாக இருக்கும் இளைஞர்களை மீட்டெடுக்கும் முக்கிய கடமை அரசுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும், நண்பர் களுக்கும் அதிகம் இருக்கிறது'' என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.

dd

பிற மாவட்டங்களில் மட்டுமின்றி மாநிலத் தலைநகரான சென்னையிலும், விசாரணைக்கு வந்த போலீஸ் மீது, கஞ்சா விற்பனை ஆசாமி கற்களை வீசித் தாக்கிய சம்பவமும், பெண்களி டம் கஞ்சா போதையில் ரகளை செய்த நபரை தட்டிக் கேட்கப்போன ஓய்வுபெற்ற உதவி ஆய்வா ளரை தாக்கிக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது.

மதுவிலக்குப் பிரிவிலிருந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரிடம் "கஞ்சாவை ஒழிக்க முடியாதா, ஏன் இந்த அவலம்?'' எனக் கேட்டோம்.

"அரசும், பொதுமக்களும், காவல்துறையும் ஒரேகோட்டில் நின்றால் நிச்சயம் முடியும், ஆனால் மூன்றுமே வெவ்வேறு திசையில் இருப் பதே இந்த நிலைமைக்கு காரணம், கள்ளச் சாராயத்தைவிட மிக மிக கொடூரமானது... கஞ்சா, கள்ளச்சாராயம் குடிப்பவனால் அவனது குடும்பத்திற்குத்தான் தொல்லை. ஆனால் கஞ்சா குடிப்பவனால் சமூகத்திற்கே ஆபத்து. அவன் சுயஉணர்வு இழந்து என்ன செய்கிறோம், எதற்கு செய்கிறோம், யாரைத் தாக்குகிறோம், எந்த சூழ லில் இருக்கிறோம் என்பதை அறியாத நிலைக்கு ஆளாகிவிடுகிறான். நகரத்தில் மட்டுமே பெரிதும் புழக்கத்தில் இருந்த கஞ்சா தற்போது கிராமங் களையும் சூழ்ந்துவிட்டது. போலீசாருக்குத் தெரியாமல் கஞ்சா விற்பனை செய்யமுடியாது. காவல் துறையில் இருக்கும் சில கருப்பு ஆடுகளைக் களையெடுக்காதவரை இது சாத்தியமாகாது''’என்கிறார்.

nkn270424
இதையும் படியுங்கள்
Subscribe