ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியிலுள்ள ஒவ் வொரு கிராமத்திலிருந் தும் கிரிக்கெட் குழு, வாலிபால் குழு, கேரம் விளையாட்டு குழுக் களைச் சேர்ந்த 2000 இளைஞர்களுக்குத் தேவையான விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி நடந்தது. 

Advertisment

தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணியின் ராணிப் பேட்டை மாவட்ட துணை அமைப்பாளரும், வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, துணைமுதலமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்களை ஊக்குவிக்க சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட வாங்கூர், பொன்னப்பந்தாங்கல் கிராமத்தில் இவ்விழாவை பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்.  இந்நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மூன்றாயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். பதிவு செய்யப்பட்ட 650 கிரிக்கெட் குழுக்களுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கதர்த் துறை அமைச்சருமான காந்தி, மேடையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 

Advertisment

பின்னர் பேசும்போது, "இளைஞர்களை முன்னேற் றவும், விளையாட்டுத் துறைக்கும் துணை முதல்வர் உதயநிதி பல சிறப்பு திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி சாதனைகள் செய்துவருகிறார். இவ்விழாவுக்கு இளைஞர்கள் திரண்டு வந்துள்ளதைக் காணும்போது, வரும் தேர்தலில் 200 அல்ல 234 தொகுதியிலும் நாமே வெற்றி பெறுவோம் என நம்பிக்கை வருகிறது. சோளிங்கர் தொகுதியில் பெரிய சாமி நடத்தியதுபோல், மாவட்டம் முழுவதும் நமது கட்சி நிர்வாகிகள் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்'' ’என்றார். 

uday1

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரும், சுற்றுச் சூழல் அணியின் மாவட்ட துணை அமைப்பாளருமான பெரியசாமி நம்மி டம்,“"மாநில சுற்றுச் சூழல் அணியின் துணை அமைப்பாளர் வினோத்காந்தி, கிராமங்களில் குறுங்காடு வளர்க்கச் சொல்ல, அதன்படி பல இடங்களில் குறுங்காடு வளர்த்துவர்றேன். அதோடு, என் கிராமம் மற்றும் சோளிங்கர் தொகுதி முழுவதுமுள்ள இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்கவேண்டும் என உதவிகள் செய்வதோடு, எனது சொந்தச் செலவில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தந்துள்ளேன். மேல்கல்வி கற்க வசதியில்லாத பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்து கல்விக்கட்டணம் செலுத்துவது, ஊனமுற்றவர்கள், வயதானவர்களின் வாழ்க்கைக்கு தேவையான உதவிகள் செய்யறதுன்னு என்னால் முடிந்ததை மக்களுக்குச் செய்துவருகிறேன்''’என்றார்.

Advertisment

சோளிங்கர் தொகுதியில் தி.மு.க. பலவீனமாகவே உள்ளது. இத்தொகுதியை சேர்ந்த சில நிர்வாகிகள், கட்சியை வைத்து தங்களை மட்டுமே வளர்த்துக்கொண் டனர், கட்சியை வளர்க்கவில்லை. வரும் தேர்தலில் இத்தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்காமல் நேரடியாக தி.மு.க.வே போட்டியிடவேண்டும், தகுதியான வரை வேட்பாளராக்கவேண்டும் என சோளிங் கரைச் சேர்ந்த தி.மு.க.வினர் விரும்புகிறார் கள். இத்தொகுதியில் மண்டல பொறுப் பாளர் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் காந்தி, எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர்.

-கிங்