அக்டோபர் 30 அன்று இரவு ஏழு மணியளவில், நெல்லை தச்சநல்லூரை ஒட்டி யுள்ள மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த இளைஞர்களான மனோஜ், அவரது நண்பர் மாரியப்பன் இருவரும் இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு, அருகிலுள்ள ஆற்றில் குளித்து விட்டு வருவதற்காகச் சென்றிருக் கிறார்கள்.
நெல்லை ஸ்ரீபுரத்திலுள்ள தனியார் கேபிள் டி.வி. ஒன்றில் பணிபுரிகிற மனோஜ், மணி மூர்த்தீஸ்வரத்திலுள்ள தன் மாமா வீட்டில் தங்கியபடி கேபிள் வேலைக்குப் போய் வந்திருக்கிறார். பைக்கில் சென்ற இருவரும் ஆற்றுப்படுகைப் பக்கமுள்ள சுடலைக் கோயிலில் பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு, இருவரும் பைக் அருகே வரும்போது, அந்தப் பக்கமாய் மது அருந்திக்கொண்டிருந்த நான்கு வாலிபர்கள் இவர்களைப் பார்த்ததும் கடுப்பானார்கள்.
"என்னலே, நாங்க சரக் கடிக்கிறப்ப தைரியமா இந்தப் பக்கம் வாறீக'' என்று அதட்ட லாய் பேசியவர்கள், அவர் களிடம், "நீங்க என்ன ஜாதி?" எனக் கேட்டு மிரட்டியிருக் கிறார்கள். அவர்கள் பட்டியலின இளைஞர்கள் என்று தெரிந்ததும், நான்கு பேர
அக்டோபர் 30 அன்று இரவு ஏழு மணியளவில், நெல்லை தச்சநல்லூரை ஒட்டி யுள்ள மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த இளைஞர்களான மனோஜ், அவரது நண்பர் மாரியப்பன் இருவரும் இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு, அருகிலுள்ள ஆற்றில் குளித்து விட்டு வருவதற்காகச் சென்றிருக் கிறார்கள்.
நெல்லை ஸ்ரீபுரத்திலுள்ள தனியார் கேபிள் டி.வி. ஒன்றில் பணிபுரிகிற மனோஜ், மணி மூர்த்தீஸ்வரத்திலுள்ள தன் மாமா வீட்டில் தங்கியபடி கேபிள் வேலைக்குப் போய் வந்திருக்கிறார். பைக்கில் சென்ற இருவரும் ஆற்றுப்படுகைப் பக்கமுள்ள சுடலைக் கோயிலில் பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு, இருவரும் பைக் அருகே வரும்போது, அந்தப் பக்கமாய் மது அருந்திக்கொண்டிருந்த நான்கு வாலிபர்கள் இவர்களைப் பார்த்ததும் கடுப்பானார்கள்.
"என்னலே, நாங்க சரக் கடிக்கிறப்ப தைரியமா இந்தப் பக்கம் வாறீக'' என்று அதட்ட லாய் பேசியவர்கள், அவர் களிடம், "நீங்க என்ன ஜாதி?" எனக் கேட்டு மிரட்டியிருக் கிறார்கள். அவர்கள் பட்டியலின இளைஞர்கள் என்று தெரிந்ததும், நான்கு பேரும் சேர்ந்து இவர்கள் இருவரையும் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். வலி பொறுக்கமாட்டாதவர்கள் கதறியபோது, கத்தியைக் காட்டி, "கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் இருவரும் பீதியில் கோழிக்குஞ்சு போல் சுருண்டி ருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மனோஜின் சட்டைப் பையைத் துலாவி, "என்னலே பணமில்லாம வந்துருக்கீக?" என வெறியானவர்கள், பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து மனோஜையும், மாரியப்பனையும் சரமாரியாகத் தாக்கியதில், இருவரின் உடம்பு முழுக்கக் காயங்கள்! இதில் மாரியப்பனின் இடது தோள்பட்டையில் கடுமையான அடி விழுந்திருக் கிறது. மனோஜின் வலது கண்ணில் காயம். உடல் முழுக்க இருவருக்கும் வீங்கியிருக்கிறது.
ஒன்றும் கிடைக்காததால் அவர்களை காது கூசுகிற வார்த் தைகளால் திட்டியவர்கள், அரையிருட்டு அழிச்சாட்டியத் திற்குப் பிறகு, மனோஜையும், மாரியப்பனையும் நிர்வாணப் படுத்தி, சற்றும் ஈவு இரக்கம் காட்டாமல் போதை வெறியில் இருவரின் முகத்திலும் சிறுநீர் கழித்து பஞ்சமாபாதகத்தை நடத்தியவர்கள், அவர்களின் செல்போனைப் பிடுங்கி, "உடனடியா அஞ்சாயிரம் பணம் குடுங்கலே'' என்றதுடன், மனோஜின் ஏ.டி.எம். கார்டையும் பிடுங்கிக்கொண்டார்கள். இந்த நேரத்தில் மேலும் இரண்டு பேர் பைக்கில் அங்கு வர, அவர்களும் தங்கள் பங்கிற்கு அப்பாவிகளான மனோஜையும், மாரியப்பனையும் தாக்கியிருக்கிறார்கள். "பணம் கொடுக்கலைன்னா ரெண்டு பேரும் உசுரோட இந்த எடத்த விட்டுப் போகமுடியாது லேய். எவனயாவது ஜிபேல பணம் போடச் சொல்லுல'' என அடியும் மிரட்டலுமாய் கத்தி யிருக்கிறார்கள். பயந்துபோன மாரியப்பன், தன் ஓனர் ராஜாவை செல்போனில் தொடர்புகொண்டு அழுதபடியே நடந்தவற்றை சொல்லி, ஐந்தாயிரம் ரூபாயை மனோஜின் அக்கவுண்ட்டில் போடச்சொல்ல, அவரும் போட் டிருக்கிறார். பின்னர் அந்த கும்பலில் இருவர் பைக் கில் சென்று அவர்களின் ஏ.டி.எம். கார்டைக் கொண்டு பணத்தை எடுத்திருக்கிறார்கள். அதன்பின் னும் நள்ளிரவு வரை சித்ரவதை செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கும்பலிடமிருந்து நிர்வாண நிலையில் தப்பித்த மனோஜும், மாரியப்ப னும், அரை நிர்வாணத்தில் ஊருக் குள் வந்து உறவினர்களிடம் சொல்லியழ, பதறிய ஊர்மக்கள், படுகாயமடைந்த இருவரையும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக் கிறார்கள். விடிந்ததும் விஷயம் வெடிகுண்டாய் வெடித்து நகரில் பிரளயத்தைக் கிளப்பியிருக்கிறது. அரக்கப்பறக்க அரசு மருத்துவ மனை வந்த தச்சநல்லூர் போலீ சார், சிகிச்சையிலிருந்தவர்களிடம் விசாரித்து புகாரைப் பெற்றதோடு, வெறிகொண்ட கும்பலின் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயு தங்களால் தாக்குதல், அவமானப் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப் பட்ட 6 பேரையும் தங்கள் கஸ் டடிக்குள் கொண்டு வந்துள்ளனர்.
"நாங்க உடல் உபாதையப் போக்கிட்டு குளிக்கப் போறதுக்காக பைக் பக்கம் வந்த உடனேயே அந்த கும்பல் எங்களச் சுத்திட்டாக. ஜாதியக் கேட்டுத் தெரிஞ்சதும் ரெண்டு பேர் கைகளையும் முறுக்கிக்கிட்டு, எங்களத் திமிரவுடாம கம்பால அடிச்சி கத்தியால கீறுனாக. கஞ்சாவோட மதுவையும் சேத்து அடிச்சிருக்காங்க. போதை வெறியிலிருந்த அவங்கட்டருந்து தப்பமுடியாத நெலம. உடம் பெல்லாம் வீக்கம்'' என வேத னைப்பட்டனர் சிகிச்சையிலிருந்த மனோஜும், மாரியப்பனும்.
நெல்லை மாவட்ட சி.பி.எம். மாவட்ட செயலாள ரான ஸ்ரீராம், மருத்துவமனையில் அவர்களைப் பார்த்து அதிர்ந் தார். "ரெண்டு பேரும் பட்டியலினத்தைச் சார்ந்தவங்கன்னு சொன்னதும், ஜாதிவெறியில அடிச்சி நிர்வாணப்படுத்தி தாக் கியதுமில்லாம, அவங்க முகத்தில் சிறுநீர் கழிச்சவங்க, கண்ணத் தொறங்கடான்னு சொல்லியும் சிறுநீர் கழிச்சி கொடூரப்படுத்தி ருக்காங்க. அவங்க கண்ணு ரெண்டும் வீங்கியிருக்கு. இது ஒரு மோசமான சம்பவம். மனித சமூகம் ஏற்றுக்கொள்ளாதது. தமிழ்ச் சமூகத்திற்கே வெட்கக் கேடானது. இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரப்படவேண்டும்'' என்றார் அழுத்தமான குரலில்.
பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நெல்லை ரயில்வே நிலை யம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது. மனித சமூகத் துக்கே விஷமான போதையும், ஜாதி வெறியும் வேரறுக்கப்பட வேண்டும். ஜீரணிக்கமுடியாத அதிர்ச்சியிலிருக்கிறது நெல்லை.
-செய்தி & படங்கள்:ப.இராம்குமார்