Advertisment

பாதாளச் சிறையில் மறைத்து வைக்கப்படும் இளம்பெண்கள்! -நித்யானந்தா ஆசிரம பகீர்!

dd

ளம்பெண் மாயமான விவகாரத்தில் போலி சாமியார் நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமம் அதிரடி ரெய்டுக்கு ஆளானது.

Advertisment

கர்நாடகா மாநிலம் பெங்களுரூ ஆர்.ஆர் நகரைச் சேர்ந்தவர் நாகேஷ். பொறியாளரான அவர், போலிச் சாமியார் நித்தியானந்தாவின் முன்னாள் பக்தர். அதனால் அப்போது கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் தன் மனைவி மாலா மற்றும் தம் இரண்டு மகள்களுடன் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் நடக்கும் சத்சங்க நிகழ்ச்சிக்குச் சிலமுறை சென்றுவந்திருக்கிறார். அந்த வகையில் அங்கு சென்று அவர்கள் திரும்பும்போது, அவர்களின் இளையமகள் வர்ஷினி மட்டும், ”"நான் ஆசிரமத்தை விட்டு இப்போதைக்கு வரமாட்டேன். கொஞ்சநாள் இருந்து இங்கு ந

ளம்பெண் மாயமான விவகாரத்தில் போலி சாமியார் நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமம் அதிரடி ரெய்டுக்கு ஆளானது.

Advertisment

கர்நாடகா மாநிலம் பெங்களுரூ ஆர்.ஆர் நகரைச் சேர்ந்தவர் நாகேஷ். பொறியாளரான அவர், போலிச் சாமியார் நித்தியானந்தாவின் முன்னாள் பக்தர். அதனால் அப்போது கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் தன் மனைவி மாலா மற்றும் தம் இரண்டு மகள்களுடன் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் நடக்கும் சத்சங்க நிகழ்ச்சிக்குச் சிலமுறை சென்றுவந்திருக்கிறார். அந்த வகையில் அங்கு சென்று அவர்கள் திரும்பும்போது, அவர்களின் இளையமகள் வர்ஷினி மட்டும், ”"நான் ஆசிரமத்தை விட்டு இப்போதைக்கு வரமாட்டேன். கொஞ்சநாள் இருந்து இங்கு நடப்பதைப் பார்த்துவிட்டு வருகிறேன்''’என்று சொல்லிவிட்டு, அங்கேயே இருந்துகொண்டார்.

nithy

இந்த நிலையில்... வர்ஷினியிடமிருந்து சரியான தகவல்கள் வராததால், மகளைப் பார்க்க பிடதி ஆசிரமத்திற்குச் சென்றிருக்கிறார் நாகேஷ். அப்போது ஆசிரம ஆட்கள், "உங்களை சந்திக்க வர்ஷினி விரும்பவில்லை''’என்று கூறி அவரைத் துரத்தினர். மகளைத் தேடி அங்கு போகும் போதெல்லாம் கடும் மிரட்டலுக்கு ஆளான நாகேஷ், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து... கர்நாடக போலீஸிடம் புகாரோடு போயிருக்கிறார். அங்கே பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நேரத்தில் வர்ஷினி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருப்பதாக நாகேஷுக்குத் தகவல் கிடைக்க, அவர் திருவண்ணாமலைக்கு குடும்பத்தோடு விரைந்து வந்தார். இங்கும் புகார் கொடுத்தார். அதில், தன் மகளை நித்தித் தரப்பு வெளியே வரமுடியாதபடி அடைத்து வைத்திருப்பதாக வும், அவரை மீட்டுத் தரும் படியும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்.ஐ. சுமன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீ சார் 27-ஆம் தேதி அங்குள்ள நித்தியின் ஆசிரமத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் ஆசிரமக் கதவைத் தட்டிய போது, லேசில் கதவு திறக்கப் படவில்லை. போலீஸ் டீம் எச்சரித்த பிறகு 30 நிமிடம் கழித்தே கதவைத் திறந்திருக் கிறார்கள். அங்கும் வர்ஷினி இல்லை. போலீஸ் டீம் விடாப்பிடியாக உள்ளே சென்று ஆய்வு செய்தபோது ரகசிய பாதாள அறைகள் சில, பூட்டப்பட்ட நிலையில் இருந்தன. "அதற்கான சாவி எங்களிடம் இல்லை' என்று அங்கிருந்த நித்தியின் சிஷ்யை கள் கைவிரித்துவிட்டார்கள்.

Advertisment

dd

இந்த விவகாரம் குறித்து நாம் காவல்துறைத் தரப்பிடம் கேட்டபோது "நித்தி-ரஞ்சிதா வீடியோ வெளியானபோது திருவண்ணாமலை ஆசிரமம் தான் முதலில் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இருந்தும் இங்குள்ள சில சமூகசேவை அமைப்புகளுக்கு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, அவர்களின் ஆதரவோடும் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உதவியோடும் இருந்த நித்தி, எங்கள் காவல் துறை அதிகாரி களுக்கும் லட்ச லட்சமாய் வாரிக் கொடுக்க, அவர் களும் நித்திக்குத் தலையாட்டும் பொம்மைகளாகி விட்டார்கள். இப் போதும் பணம் தான் நித்திக்குக் கேடயமாக இருக் கிறது. அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதெல்லாம் டிராமா. நித்தியின் பிடியில் போதைக்கு அடிமை யாக்கப்பட்ட இளம்பெண்கள் சிலரும் சிக்கி இருக்கிறார்கள். இதுகுறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. விரைவில் அவர்கள் மீட்கப்படு வார்கள்''’என்றது அழுத்தமாக.

"வர்ஷினி போல் நித்தி தரப்பால் மறைத்து வைக்கப் பட்ட இளம்பெண்கள், எதற்குப் பயன்படுத்தப் படுகிறார்கள்? அவர்கள் அத்தனை பேரும் பாதுகாப் போடு இருக்கிறார்களா?' என்கிற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில்... வர்ஷினி குடும்பம், அவரைத் தேடிப் பரிதவித்து வருகிறது.

nkn060722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe