"ஹலோ தலைவரே, தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு பெருமிதத் தோடு வழங்கப்பட்டிருக்கிறது.''”
"ஆமாம்பா! கலைஞர் காலத்து சீனியர் அமைச்சரான அவருக்கு இதன்மூலம் உரிய மரியாதையைக் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.''”
"ஆமாங்க தலைவரே, தமிழக அரசின் 2026ஆம் ஆண்டிற்கான "அண்ணா விருது' தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் சீனியர் அமைச்சருமான துரைமுருகனுக்கும், "தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது' முதுமுனைவர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.ஸுக்கும் வழங்கப்பட்டிருக் கிறது. கடந்த 2021லேயே அண்ணா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் துரைமுருகன். இதையறிந்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். இதற்கிடையே விருதாளர்கள் பட்டியல் தயாராகி, முதல்வரின் ஒப்புதலுக்கு சென்றது. முதல்வரின் பார்வைக்கு செல்வதற்கு முன்பு, அந்த பட்டியலை அன்றைக்கு முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் பார்த்துவிட்டு, அண்ணா விருதுக்கு துரைமுருகன் பெயரை நீக்கி விட்டு, நாஞ்சில் சம்பத் பெயரை சேர்த்துவிட்டார்.''
"ம்...''”
"இது துரைமுருக னுக்குத் தெரியாது. அறிவிப்பு வெளியான போது, தனக்கு அந்த விருது இல்லாததைக் கண்டு கடும் அப்செட்டுக்கு ஆளானார் துரைமுருகன். மேலும், தனது பெயரை முதல்வருக்குத் தெரியாமலே நீக்கியிருக்கிறார் என அறிந்ததும் ஏகத்துக்கும் டென்ஷனானார். இதை முதல்வரிடம் அவர் சொல்லி வருத்தப்பட... அதன் பிறகு, ஒவ்வொரு வருடமும் அவரது பெயர் சேர்க்கப்படும்போதெல் லாம், "எனக்கு அந்த விருது வேண்டாம்' என துரைமுருகன் மறுத்துவந்தார். இந்தமுறையும் அவர் மறுக்க நினைத்தபோது முதல்வர் தலையிட, அதனையடுத்து விருதைப் பெற ஒப்புக்கொண்டார் துரைமுருகன். அதேபோல, தமிழக அரசின் விருதுகள், இதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டதில்லை. முதன்முறையாக இறையன்புக்கு, அவரின் தமிழ்த் தொண்டிற்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.''”
"இந்திய மொழிகளில் வெளி யாகும் சிறந்த இலக்கியப் படைப்புக ளுக்கு, இனி தமிழக அரசே, செம்மொழி இலக்கிய விருது’ வழங்கும்’என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறாரே?''”
"சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு புத்தகத் திருவிழா வில் பேசிய முதல்வர், ’"ஒன்றிய அரசின் அர சியல் குறுக்கீடுகளால் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப் படாமல் உள்ளது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனி தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கும்' ’என்று அதிரடியாகத் தெரிவித் திருக்கிறார். முதல்வரின் இந்த அறிவிப்பு டெல்லியை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம்.''”
"அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் தி.மு.க.வுக்கு தாவுவதாக ஒரு செய்தி அடிபடு கிறதே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/rang3-2026-01-19-16-22-50.jpg)
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. மாஜி மந்திரியான புதுக்கோட்டை விஜயபாஸ்கரை தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளும்படி, தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருந்த உமாநாத் ஐ.ஏ.எஸ்., முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து வருகிறாராம். ஆனால் இதற்கு ஸ்டாலின் இன்னும் கிரீன் சிக்னல் தரவில்லையாம். அதே சமயம், ஓ.பி.எஸ். அணியிலிருக்கும் அ.தி.மு.க. மாஜி மந்திரி வைத்திலிங்கம் டெல்டா மாவட்டங்களில் செல்வாக்காக இருப்பதால் அவரைத் தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க. தரப்பு, டீலிங் நடத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, 25 "சி'’ கை மாற, வைத்திலிங்கம் இரண்டுநாளில் தி.மு.க.வில் இணைகிறாராம்.'' ”
"பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்திருப்ப தாக தமிழகத்தைச் சேர்ந்த தங்கள் கட்சிப் பிரமுகர்களை ராகுல் எச்சரித்திருக்கிறாரே?''
"ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் பா.ஜ.க.வின் ஏஜெண்டுகளாக செயல்படுவதாக ராகுல்காந்திக்கு ஒரு தகவல் போயிருக்கிறது. அதனால் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு சென்ற இவர்கள் இருவரையும் பேசவேண்டாம் என்று ராகுல் உட்காரச் சொல்லிவிட்டாராம். இவர்கள் இருவரும் பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் என்றும், காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் சேருகிறது என்றும், பா.ஜ.க. சொன்னதின் அடிப்படையில் தான், செய்தி பரப்புகிறார்கள் என்றும் ராகுலுக்கு கொடுக்கப்பட்ட கான்ஃபிடென்ஷியலான தகவலால்தான் இப்படியாம்.''”
"த.வெ.கவில் இணைந்த செங்கோட்டை யனுக்கு மீண்டும் அவமரியாதைன்னு அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் செங்கோட்டையன் பெயர் இல்லாததைக் கண்டு அவர் மிகவும் நொந்துபோய்விட்டார். இது குறித்து ஏற்கனவே நாம் பேசியிருக்கிறோம். இது, விஜய்க்கு தெரிந்ததும் கோபப் பட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் த.வெ.க.வின் தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைக்க முடிவு செய்தபோது, அதில் செங்கோட்டையன் பெயரைச் சேர்த்து பட்டியல் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார் விஜய். அந்தப் பட்டியலையும் அவரிடம் காட்டி ஓ.கே. வாங்கினார்கள். அந்த பட்டியல் ரிலீஸ் செய்யப்பட்டது. அதில், முதல் பெயராக புஸ்ஸி ஆனந்த்தும், இரண்டாவது பெயராக ஆதவ் அர்ஜுனாவும், மூன்றாவது பெயராக செங்ஸ் பெயரும் இருந்தது. இதைக்கண்டு ரொம்பவே கடுப்பாகி விட்டாராம் செங்ஸ். "கட்சியின் பொ.செ. என்பதால் புஸ்ஸி பெயர் முதலிடத்தில் இருப்பது ஓ.கே., ஆனால் ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன அரசியல் தெரியும்? அவருக்கு கீழே என் பெயரா? இதுதான் எனது அரசியல் அனுபவத்துக்கு விஜய் தரும் மரியாதையா?'’என நொந்துபோய் புலம்பிவருகிறாராம் செங்ஸ். அவரது புலம்பலைக் கேட்டு அவரது ஆதரவாளர்களும் விஜய் மீது ஏகக் கடுப்பிலிருக்கிறார்களாம்.''
"எடப்பாடியின் தேர்தல் வாக்குறுதிகள் அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே விமர்சனத்தை ஏற்படுத்திவருகிறதே?''”
"மகளிருக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை, ஆண்களுக்கு இலவச பேருந்து உட்பட 5 தேர்தல் வாக்குறுதிகளை முதல்கட்டமாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி. அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை குழு அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறது. தனது அறிக்கையை எடப்பாடியிடம் அந்தக் குழு இன்னும் தாக்கல் செய்யாத நிலையிலேயே, வாக்குறுதிகளாக சிலவற்றை அறிவித்தால், இந்தக் குழுவுக்கு என்ன மரியாதை? என்ற கேள்வி அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே எழுந்துள்ளது. தி.மு.க. அரசின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் சூழலில், அத்தொகையை 1,500 ஆக உயர்த்தி தேர்தல் வாக்குறுதி வழங்க தி.மு.க. திட்டமிட்டிருந்தது. இதையறிந்த எடப்பாடி, இந்தத் தொகையை 2000 என அறிவித்து தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார்.”
"இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து கள்ளத் துப்பாக்கிகளை ஒரு கும்பல் விற்றிருக் கிறதே?''”
"கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை அடுத்த மூளிக்குளத்தைச் சேர்ந்த ரத்னபாலா என்பவர் 1.2 லட்சத்திற்கு வட மாநிலத்திலிருந்து கள்ளத் துப்பாக்கி ஒன்றை வாங்கியிருக்கின்றார். இதனை தனது நண்பர்களான அமீர் சுகைல், முஸாமிலுடன் இணைந்து, இன்ஸ்டாகிராமில் "துப்பாக்கி விற்பனைக்கு'’என்ற விளம்பரத்தை பதிவு செய்திருக்கிறார். இதையறிந்த திண்டுக்கல் ஷாகுல் மற்றும் திண்டுக்கல் ஷேக் ஆகியோர் நெல்லையிலிருந்த துப்பாக்கியை ரூ.1.5 லட்சத்திற்கு வாங்கி யிருக்கிறார்கள். வாங்கிய துப்பாக்கியை அவர்கள் திண்டுக்கல்லுக்குச் சென்று சோதித்துப் பார்க்கை யில், அது செயல்படவில்லையாம். அதனால் ஆத்திரமடைந்த ஷாகுல், துப்பாக்கியைத் திருப்பி ஒப்படைத்துவிட்டுத் தனது பணத்தைக் கேட்டிருக்கிறார். பணத்தைத் தர முடியாது, வேண்டுமானால் ரிப்பேர் செய்து தருகிறோம்’ என்று கூறிய நெல்லை டீம், ’துப்பாக்கியை சரி செய்யும் ஆட்கள் தேவை’என மீண்டும் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். இது காவல்துறையின் கவனத்துக்குப் போக... அவர்கள் துப்பாக்கி டீமை அதிரடியாகக் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர் களுக்கு கள்ளத் துப்பாக்கி விற்பதுதான் தொழிலாம். காவல்துறை அதிகாரி ஒருவரே இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கையை போலீஸ் மறைத்துவிட்டதாம்.''”
"வேலூர் சி.எம்.சி. மருத்துவர் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனைக்கு வந்துபோயி ருக்கிறதே என்ன விவரம்?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/rang2-2026-01-19-16-23-13.jpg)
"இந்தியாவின் பிரபலமான சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணி யாற்றுபவர் 27 வயதான பெல்கிங். சி.எம்.சி மருத்துவர்கள் குடியிருப்பிலுள்ள இவரது வீட்டுக்கு ஜனவரி 16-ஆம் தேதி சென்னை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் வினய்குமார்சிங் தலைமையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அவரது வீடு பூட்டியிருக்க, பூட்டை உடைத்து உள்ளேசென்று சோதனை செய்தனர். அந்த மருத்துவரின் வங்கிக்கணக்கில் சட்டவிரோதமாக அதிகளவில் பணம் ட்ரான்ஸ்பர் நடந்துள்ளது. சுமார் 32 மணி நேர சோதனைக்குப் பின்னர் அவரது வீட்டில் கஞ்சா, மெத்த பெட்டமைன் போன்ற போதைப்பொருளை கைப்பற்றியதாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தந்தனர் அமலாக்கத்துறையினர். அதை வாங்க மறுத்த போலீஸார், போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவுக்கு செல்லுங்கள் எனச் சொல்ல காட்பாடியிலுள்ள என்.ஐ.பி. அலுவல கத்துக்கு சென்று புகார்தந்தனர். கிலோ கணக்குன்னா தான் நாங்க விசாரிக்கமுடியும், இது 33 கிராம்தான் என்று வேலூர் வடக்கு காவல்நிலைய போலீஸாருக்கு மீண்டும் புகாரை பாஸ்செய்தனர். அந்த வீட்டில் போதைப் பொருள் இருந்ததாக மொபைல் போட்டோ ஆதாரத்தைக் காட்டி அமலாக்கத்துறை புகார் சொன்னது போலீஸாரை கடுப்பாக்கியது. பின்பு போலீஸார் நேரடியாக சென்று அதனைக் கைப்பற்றினர். தலைமறைவான மருத்துவரையும் தேடிவருகின்றனர். சி.எம்.சி நிர்வாகமோ, எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது மருத்துவரின் தனிப்பட்ட விவகாரம் என்கிறது.''”
"எஃப்.எல்.2 பார் வாங்கித் தர்றதா கோவையில் மோசடி நடக்கிறதா செய்தி வருதே?''”
"ஆமாங்க தலைவரே, நீங்கள் கேள்விப் பட்டது நிஜம்தான். மனமகிழ் மன்றங்கள் எனப்படும் எஃப்.எல்.2 பார்கள் தமிழ்நாட்டில் 800 எண்ணிக்கையில் இயங்கிவருகின்றன. கோவை உள்ளிட்ட பெரிய மாவட்டங் களில் சில தரகர்கள், "மொத்தமா ரூ 20 லட்சம் கொடுத்துடுங்க. எஸ்.பி. அல்லது கமிஷனர் சாரிடமிருந்து கடிதம் வந்துவிடும்' என தேனொழுகப் பேசி பணத்தை ஸ்வாகா செய்துவரு கின்றனர். சமீபத்தில் கோவையில் புதிதாக எஃப்.எல்.2 பார் ஆரம்பிக்கவேண்டும் என ஒருவர் அணுக, அவரிடம் ரூ.5 கோடி வசூலித் துள்ளதாம் சிவனின் பெயரைக் கொண்ட டீம். இதில், "நான் யாருன்னு தெரியுதா...? ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர். அவர் கோவையின் முன்னாள் கமிஷனர் பாலகிருஷ்ணனின் தம்பி. அவருடைய டிகிரி தோஸ்த்தான் கோவை எஸ்.பி. கார்த்திகேயன். அவரும், கமிஷனர் சாரோட தம்பியும்தான் ஒண்ணா சுத்துவாங்க' என "அழுக்கு ராஜா' இன்ஸ்பெக்டரும், சாய்பாபா காலனியை சேர்ந்த விநாயகரின் பெயர் கொண்டவரும் கதைவிட்டு ரூ.20 லட்சத்தை ஸ்வாகா செய்துள்ளனர். இது தாமதமாக தெரிய வர, பாதிக்கப்பட்டவர் இந்நாள் கமிஷனரை அணுகியுள்ளார்.''”
"பொங்கல் கொண்டாட்டத்தோடு நடக்கும் சமத்துவ கபடிப் போட்டியில் சாதிய அடையாளத்தை தூக்கிப்பிடிக்கிறாங் களாமே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/rang1-2026-01-19-16-23-44.jpg)
"நிஜம்தான் தலைவரே, அண்ணாமலை கவிராயர் நினைவாக மாநிலம் தழுவிய கபடி போட்டி தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரம் பகுதியில் நடைபெறவிருந்தது. இந்தப் போட்டியில், “குறிப்பிட்ட சமுதாய இளைஞர்கள் மட்டுமே” பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று ‘இ-ஸ்கேன்’ செய்து சரி பார்ப்போம் என்றும் விளை யாட்டை நடத்தும் அந்த சமூக சங்கம் அறிவித்துள்ளது. மாற்று சமுதாய இளைஞர்கள் பங்கேற்றால் அந்த அணிக்கு ஓராண்டு தடை விதிக்கப்படும் என்கின்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதற் கெதிராக மக்கள் அதிகாரக் கழகம், இது பொது அமைதிக் கும் சமூக நல்லிணக்கத்திற்கும் வேட்டுவைக்கும். இத்தகைய தீண்டாமைச் செயல்களை எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறது. மாவட்ட காவல்துறையும் விழாவிற்கு அனுமதி மறுத்த நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தினை அணுகியது அந்த சமூக சங்கம். "மனுதாரர் தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர் களிடையே நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தடுக்க முடியாது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இருப்பினும், பிற சமூகங்களைச் சேர்ந்த நபர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம்தெரிவித் தால், மனுதாரர் அத்தகைய பங்கேற்பை அனுமதிக்கலாம்,
மேலும் அவர்கள் பங்கேற்பதைத் தடுக்கக்கூடாது' என அறிவுறுத்தி விழாவுக்கு அனுமதித்தது நீதிமன்றம். இருப்பினும், "இறுதிவரை தாங்கள் முன்னரே கூறியதுபோல் சொந்த சமூக இளைஞர்களை மட்டுமே விளையாட்டிற்கு அனுமதித்தது' புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.''”
"காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பெயர் சர்ச்சையில் அடிபடுதே என்ன விவரம்?''
"காரைக்குடியில் இயங்கும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் இயக்குநராக நியமனம் (கணினி மையம்) செய்யத் தகுதியான நபர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது பல்கலைக்கழகம். இதற்கான தகுதிகளையும் அறிவித்திருந்தது. முனைவர் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி, இவை தவிர பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியேயிருந்து சேரும் நபர்கள், குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது 7 புள்ளி அளவுகோலில் இ-க்கு சமமான கிரேடை பெற்றிருக்க வேண்டும் என நிறைய நிபந்தனைகள் இருந்தன. பதிவாளர் செந்தில்ராஜனோ, அதே துறையில் முதுகலைப் பட்டம் பெறாமல் பி.இ. (கணினி அறிவியல்) முடித்த பிறகு, அவர் எம்.பில் (கணினி அறிவியல்) பட்டம் பெற்றவர். ங.டட்ண்ப் மற்றும் டட்.உ. திட்டத்தில் சேர்ந்தபோது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவில்லை. செந்தில்ராஜனுக்கு முறையான கல்வித் தகுதிகள் இல்லாதபோதும், அவரை இயக்குநராக (கணினி மையம்) நியமித்தது விதிகளை மீறுவதாகும். பணி அனுபவத்தின் உண்மையான தன்மையையும் தேர்வுக் குழு உறுதி செய்யவில்லை. ஆகவே, அவருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத செலவாக வசூலிக்க வேண்டும் என தணிக்கைத் துறை குறிப்பு எழுதியுள்ளது. இருப்பினும், அதனை காற்றில் பறக்கவிட்டு, செந்தில் ராஜனையே பதிவாளராகத் தொடர அனு மதித்துள்ளார் அழகப்பா பல்கலை துணை வேந்தர்.''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/19/rang4-2026-01-19-16-24-32.jpg)
"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். சாரல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில், அந்த கட்டுமஸ் தான நடிகர் போட்டியிட விரும்பி, அதற்கான பணி களைச் செய்துவருகிறார். தன் கட்டுப்பாட்டில் மீத முள்ள எம்.எல்.ஏ. சீட்டு களை அங்குள்ள அ.தி.மு.க. மா.செ., ரூ.6 கோடி விலை நிர்ணயித்து ஏலம்விட்டு வருகிறாராம். முதலில் பணம் கொடுப்பவருக்கே சீட் என்பதுதான் ஏலத்திற்கு அவர் வைத்த டிமாண்டாம். அந்த வகையில்,’கோவில் தொகுதியை ஒதுக்க ஒரு கவுன்சிலர், ஒரு ஜேம்ஸ்பாண்ட் நடிகர், ஒரு டாக்டர் மற்றும் "குட்டியான' ஒருவர் ஆகியோரிடம் அவர் டீலிங் நடத்திவருகிறாராம். மேலும் வாசுவான தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. மகள், 'சுந்தரமான' ஒருவர் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரிடம் பேரம் நடக்கிறதாம். சீட்டுக்காக யாரிட மும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என்று ஏற்கனவே எடப்பாடி அறிக்கை விட்டிருந்தும், இப்படி ஏலக்காட்சிகள் அ.தி.மு.க.வில் பகிரங்கமாக அரங்கேறி வருகிறதாம்.''
________
இறுதிச்சுற்று!
பா.ம.க. எங்களுக்கே சொந்தமென்று உரிமைகோரி டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, 19ஆம் தேதி திங்களன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ராமதாஸ். பா.ம.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கெனவே பா.ம.க. அன்புமணி பிரிவினர் கூட்டணி அமைத்துள்ளனர். இப்படியான சூழலில், ராமதாஸ் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், அன்புமணி தரப்போடு அ.தி.மு.க.வினரின் தேர்தல் கூட்டணி செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சினையால் பா.ம.க.வின் எதிர்காலம் என்னவாகுமென்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/rang-2026-01-19-16-22-21.jpg)