வேலூர் மாவட்டத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் மலைவாழ் மக்களையும், விவசாய மக்களையும் அதிகளவு கொண்ட தொகுதி அணைக்கட்டு. வன்னியர்கள் 40% மேல் இத்தொகுதியில் உள்ளனர். அதற்கடுத்து பட்டியல் சமுகத்தினர், யாதவர்கள், நாயுடுக்கள் உள்ளனர். இத்தொகுதியில் வன்னியர்கள் வெற்றியைத் தீர்மானிப்பவர் களாக இருந்தாலும் தொகுதியில் மிகச்சிறிய அளவிலே வசிக்கும் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்றுவருகின்றனர். சாதியைக் கடந்து மக்கள் தங்கள் எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து வருகின்றனர்.
1962-ல் விரிஞ்சிபுரம் தொகுதியாகவும், 1967, 1971-ல் கணியம் பாடி தொகுதியாகவும், 1977 முதல் அணைக்கட்டு தொகுதியாகவும் இருந்துவருகிறது.
இதுவரை 10 தேர்தல்களில் 6 முறை அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் ஒருமுறை பா.ம.க.வும் வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க. 3 முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. வன்னியர்கள் நிறைந்த இத்தொகுதியில் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த மா.செ. நந்தகுமாரை 2016-ல் முதல்முறை நிறுத்தியபோது, வன்னியரான அணைக்கட்டு ஒ.செ. பாபு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து நந்தகுமாருடன் மோதினார்.
பின்னர் அவர் சமாதானப்படுத்தப் பட்டு தேர்தல் வேலைசெய்ததன் அடிப்படையில் நந்தகுமார் வெற்றிபெற்றார். 2021-ல் மீண்டும் அணைக்கட்டு தொகுதி யிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டாவதுமுறையாக இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்துவருகிறார்.
தேர்தல் வாக்குறுதிகளாக, மலைக்கிராமங்களுக்கு சாலையமைத்துத் தருவேன், பேருந்து வசதி என்பது மிகமிக குறைவாக இருக்கிறது அதைச்செய்து தருவேன், அணைக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனை யாக்குவேன், மாதனூரில் காவல்நிலையம் அமைக்க முயற்சி எடுப்பேன், இத் தொகுதியிலுள்ள ஒடுகத்தூர் கொய்யா, இலவம்பாடி கத்திரி பிரபலமானது, அதற்கு புவிசார் குறியீடு வாங்கித் தருவேன், பள்ளிகொண்டா டூ குடியாத்தத்துக்கு புறவழிச்சாலை அமைத்துத் தருவேன் என வாக்குறுதிகளைத் தந்திருந்தார். இதில் மலைக்கிராமங்களுக்கு சாலை அமைத்து தரவேண்டும் என்கிற 50 ஆண்டுகால கோரிக்கை, தி.மு.க. ஆளும்கட்சியான பின்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திற்கு ஐ.டி. பார்க் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனை தனது தொகுதிக்கு கொண்டுசென்று கடந்த மாதம் திறப்புவிழா நடத்திவிட்டார். மற்ற சில வாக்குறுதிகள் இன்னமும் நிறை வேற்றப்படாமலே உள்ளது. இத்தொகுதியில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேலான பணிகள் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.
தொகுதியில் உட்கட்சியில் முதன்மை போட்டியாளராக இருந்த ஒ.செ. பாபுவை, மாவட்ட சேர்மனாக்கி தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். கட்சியில் போட்டி யாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் இருப்பதால் நிர்வாகிகள் தனக்கு எதிராகத் திரும்பிவிடக்கூடாது என தனது தொகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதிலுமுள்ள தனது ஆதரவு நிர்வாகிகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா அழைத்துச்சென்று தக்கவைத்துக் கொள்கிறார். தொகுதி நிதியை கட்சி நிர்வாகிகளுக்கு பிரித்துத் தருகிறார். பள்ளிகொண்டா பகுதியில் சீனியர்கள் சிலர் எம்.எல்.ஏ. மீது கட்சிரீதியாக அதிருப்தியில் உள்ளனர். இதைத்தாண்டி தொகுதியில் கட்சி நிர்வாகிகளிடம் பெரிய அதிருப்தியில்லை. இதனால் அவரை இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுங்கள் எனக் கூறிவருகின்றனர்.
கட்சியில், பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் அதிருப்தி இல்லை என்பதால் மூன்றாவது முறையாக அணைக்கட்டு தொகுதியிலேயே நிற்கவுள்ளார் நந்தகுமார். ஒருவேளை நந்தகுமார் தொகுதி மாறினால் அணைக்கட்டு தொகுதியை கைப்பற்றிவிடவேண்டும் என அணைக்கட்டு ஒ.செ. பாபு முயற்சி செய்வார்.
அ.தி.மு.க.வில் கடந்த முறை போட்டியிட்டு 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேலூர் புறநகர் மா.செ. வேலழகன், மீண்டும் எனக்கு சீட் தாங்க என விருப்பமனு தந்துள்ளார். அவர் அமைச்சர் துரை முருகனுடனும், தி.மு.க. மா.செ நந்தகுமாருடன் நெருங்கிய நட்பிலிருக் கிறார். கல்குவாரிகள் லைசென்ஸ், ஒப்பந்தங் கள் வாங்கி வேலை செய்கிறார், அதனால் அவருக்கு சீட் தராதீர் கள் என அவருக்கு எதிராக கம்பு சுத்திக்கொண்டிருக்கிறார்கள் உட்கட்சி எதிரிகள். இவரது தந்தை தருமலிங்கம் இத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந் தவர். வன்னியர்கள் அதிகமுள்ள கிராமங் களில் வன்னியரான எனக்கு வாக்களியுங் கள் என திண்ணைப் பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளார். பாரம்பரிய தி.மு.க. வாக்காளர்களி டம், உங்க கட்சியில் வன்னியருக்கு சீட் தந் தால் அவருக்கு ஓட்டுப் போடுங்கள் இல்லை யேல் வன்னியரான எனக்கு வாக்களியுங்கள். இன்னொரு சாதியை சேர்ந்தவருக்கு வாக்களித்து மைனாரிட்டி சாதியை சேர்ந்தவர்களே இங்கே எம்.எல்.ஏ. வாகிறார்கள் அதனால் யோசித்து ஓட்டுப்போடுங்கள் என பேசிவருகிறார்.
பா.ம.க.வும் இந்த தொகுதியைக் குறி வைக்கிறது. கட்சி ஒன்றுசேராமல் தொகுதி வாங்கினால் கண்டிப்பாக காலை வாரிவிடு வார்கள் என்பதால் இரண்டு தரப்பிலுமே தயங்குகிறார்கள். அன்புமணி தரப்பில் மா.செ. ஜெகன், மாவட்ட தலைவர் வெங்கடேசன் தந்தால் நிற்கலாம் என்கிற முடிவிலுள்ளனர். நடிகர் விஜய்யின் த.வெ.க. மா.செ வேல்முரு கன் சீட் வாங்கி போட்டியிடவேண்டுமென இந்தத் தொகுதியில் இப்போதே வேலையைத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள்.
பிரதான கட்சிகளில் யாருக்கு சீட் என்பது முடிவாகிவிட்டது. இதனால் அக்கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பெரியதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/29/anaikadu-2025-12-29-17-19-38.jpg)