திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எட்டுத் தொகுதிகளில் பட்டுத் தொகுதி, மாவட்டத்தில் அதிக பணப்புழக்கமுள்ள தொகுதி ஆரணி. இந்திய அளவில் பிரபலமான பட்டுப்புடவைக்கும், நடுத்தரவர்க்க மக்கள் உண்ணும் பொன்னி அரிசி உற்பத்திக்கும் பெயர்பெற்றது. 

Advertisment

ஆரணி நகரத்தில் செங்குந்த முதலியார்கள் அதிகமாகவும், புறநகர் மற்றும் கிராமங்களில் வன்னியர்கள், பட்டியல் சமூக மக்களும் நிறைந்துள்ளனர். இத்தொகுதி யில் இதுவரை 7 முறை அ.தி. மு.க.வும், 5 முறை தி.மு.க.வும், காங்கிரஸ், தே.மு.தி.க. தலா ஒருமுறையும் வெற்றிபெற் றுள்ளன. 2021-ல் அ.தி. மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேவூர்.ராமச்சந்தி ரன் வெற்றிபெற்றார். இரண்டாவது முறையாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

Advertisment

தேர்தல் வாக்குறுதியாக, ஆரணியை தலைமையிட மாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், நெல்-அரிசி தொழில்பேட்டை அமைக்கப்படும் என்கிற வாக்குறுதிகள் தந்தி ருந்தார். 2016-2021-ல் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார் சேவூர்.ராமச்சந்தி ரன். அப்போதே இதில் பலவற்றைச் செய்திருக்க லாம். செய்யவில்லை. அந்தத் துறையை விடுங்கள், அமைச்சராக இருந்தவர் தொகுதிக்கே பெருசா ஒன்றும் செய்யவில்லை. கோட் டாச்சியர் அலுவலகம் கொண்டுவந்தேன், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்தேன் என்பதையே பெரும் சாதனையாகச் சொல்லிவருகிறார். அமைச்சராக இருந்தபோது சம்பாதித்த வருமானத்தில் பள்ளி, காலேஜ், பேக்டரின்னு சொத்துக்களை வாங்கிக் குவிச்சார். கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த பா.ம.க. நிர்வாகிகளுக்கு கோடிகளில் வாரித் தந்தார், அவங்களால ஜெயிச்சார். அவங்களுக்காக இப்பவும் நன்றியோட இருக்கார். அதேநேரத்தில் சொந்தக் கட்சிக்காரனை பெருசா அவர் கண்டுக்கல. அவரோட தளபதிகளாக இருந்த பாரி.பாபு, வழக்கறிஞர் சங்கர் உட்பட பலரும் இப்போ அவரைவிட்டு ஒதுங்கியே நிற்கிறாங்க. மா.செ. ஜெயசுதாவுடன் மோதிக்கிட்டு இருக்கார். 

வரும் தேர்தலில் மீண்டும் சீட் வாங்கி மூன்றாவது முறை களத்தில் போட்டியிட  காய்நகர்த்திவருகிறார். அதே நேரத்தில் கடந்த எம்.பி. தேர்தலில் நின்று தோல்வியைச் சந்தித்து சில கோடிகளை இழந்த ஆரணி ஒ.செ. கஜேந்திரன், முன்னாள் அமைச் சர் சி.வி.சண்முகம் மூலம் சீட் வாங்கிவிட கடுமையாக முயற்சித்துவருகிறார். போளூர் தொகுதியைச் சேர்ந்தவரான மத்திய மா.செ.வும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெயசுதா, ஆரணி தொகுதியை எனக்குத் தாங்க என தலைமை யிடம் வலியுறுத்துகிறார். சிட்டிங் எம்.எல்.ஏ. உட்பட மற்றவர்கள், "அவர் இந்த தொகுதியே கிடையாது, அவருக்கு சீட் தரக்கூடாது' என இப்போதே எதிர்ப்புக் காட்டுகின்றனர். இவர் களுக்கிடையே அம்மா பேரவை மா.செ. பாரி.பாபுவும் சீட் வாங்கிவிட முயற்சித்து வருகிறார். 

Advertisment

இம்முறை ஆரணி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என தொகுதிப் பொறுப்பாளரான ஆரணி எம்.பி.யும், வடக்கு மா.செ.வுமான தரணிவேந்தனிடம் பொறுப்பை ஒப்படைத் துள்ளார் அமைச்சர் வேலு. கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தொகுதிப் பொறுப்பாளர் என தொகுதியை வலம்வரும் ஒ.செ. அன்பழகன் மீண்டும் முயற்சித்து வரு கிறார். மாவட்ட துணைச்செயலாளர் ஜெய ராணியும், அவரின் கணவரான விண்ண மங்களம் ரவி இருவரும் தீவிரமாக முயற்சிசெய் கின்றனர். இவர்களுடன் கண்ணமங்களம் பேரூராட்சித் தலைவரின் கணவரும், தி.மு.க. பேரூராட்சி செயலாளருமான கோவர்த்தனன் சீட் கேட்க முயற்சிசெய்கிறார். அன்பழகனுக் காக ஆரணி ஒ.செ.க்கள் சுந்தர், துரை.மாமது, மோகன் போன்றோர் சப்போர்ட் செய்கிறார் கள். இவங்களாலதான் இந்த தொகுதியில் கட்சியே நாசமா போய்க்கிட்டு இருக்கு. நாலு பேரும் சேர்ந்து ஒரே கார்ல போவதும், வேலை யை முடிச்சிக்கிட்டு வர்றதுமா இருக்காங்க. கட்சிக்காரனைக் கண்டுக்கறதில்லை. அதேபோல் ஆரணி நகர்மன்றத் தலைவராகவும், ந.செ.வாகவும் இருந்த ஏ.சி.மணி கட்சிக்காரனை கண்டுக்காம தனியா வலம்வந்தார். அவர்மீது கட்சியினர் பல புகார்கள். அமைச்சர் வேலு, மா.செ. தரணிவேந்தன் எம்.பி.யிடம் சொன்ன தால் இரண்டு மாதத்துக்கு முன்பு அவரை மாற்றிவிட்டு புதியதாக ஆரணி நகர பொறுப் பாளராக மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். பசைப் பார்ட்டியான ந.செ. மணிமாறனும் சீட் கேட்பாளர்கள் பட்டி யலில் இடம்பிடித்துள் ளார். கோஷ்டிப் பூசலில் ஆரணி தொகுதி தத்தளிப் பதால் தொகுதியை கூட்டணிக்குத் தள்ளி விடலாமா என்கிற யோசனையும் அமைச்சர் வேலு தரப்பில் இருப்ப தாகக் கூறுகின்றனர். 

ஆரணி எம்.பி. தொகுதியை காங்கிர ஸிடமிருந்து வாங்கிக் கொண்டீர்கள், செய்யார் தொகுதியையும் தி.மு.க.வே எடுத்துக்கொண்டது. அதனால் கூட்டணியில் ஆரணி தொகுதியை கேட்டுவாங்குங்கள் என காங்கிரஸ் தலைமையை வலியுறுத்திவருகிறார்கள் மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள். நகரமன்றத் தேர்தலில் வைஸ். சேர்மன் பதவி காங்கிரஸுக்கு என அறிவிக்கப்பட்டு தேர்தலில் நின்றவர் முன்னாள் மாநில தலைவரான அழகிரி ஆதரவாளரான காங்கிரஸ் நகர தலைவர் பொன்னையன். தி.மு.க. கவுன்சிலர்கள் பலரும் சாதிப் பாசம், பண ஆசையில் அ.தி.மு.க. பாரி.பாபுவுக்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெறவைத்தனர், பொன்னையனைத் தோற்கடித்தனர். அப்போது தனக்கு பல லட்சம் நட்டம், அதற்கு ஈடாக எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தாங்க என செல்வப் பெருந்தகையிடம் கேட்டுவருகிறார். மாவட்டத் தலைவர் பிரசாத் தனக்கு சீட் கேட்டு எம்.பி. விஷ்ணுபிரசாத் மூலமாக முயற்சிக்கிறார். 

பா.ஜ.க.வில் ஆரணி தொகுதியை வாங்கவேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள். ஒருவேளை இத்தொகுதி கிடைத்தால் சைதை.சங்கருக்கு வாய்ப்புள்ளது என்கின்றனர்.